என்ன இது புதுமை...!!
மனிதன் தனது இறப்பை
நெருங்கும் நாளை இவ்வளவு
விமர்சையாக கொண்டாடுகின்றான்..?
மது மாத்திரம் போதை தராது!!
பெருமை, மகிழ்ச்சி,
கொண்டாட்டம் என
அனைத்தும் ஏதோ
ஒரு வித போதை தான்!!
மனதின் இரசாயனங்களை,
தலை உச்சிக்கு கொண்டு
செல்லும் எல்லாம் போதை தான்!!
அது எதன் மீது இருந்தாலும் சரி!!
நொடி,வினாடி,மணி,பொழுது,
நாள், வாரம் என காலம் காற்றாற்று
வெள்ளம் போல வேகமாக ஓடி
கொண்டிருக்க!!
மரணம் விரைவில் என்பதை ஏதோ!
ஒரு வகையில் நம் நினைவிற்க்கு...
விதி புலபடுத்திக் கொண்டே தான் இருக்கின்றது!
ஆம்!! எதற்க்காக வந்தோம், என்பதை
அறியாது, அனுபவங்கள் கொடுத்த
பாடமும், முன்னோர்கள் வழி நடத்திய
பாதையும், நம்மை எங்கே கொண்டு செல்கின்றது?
என்ற எந்த கேள்வியும் இல்லாமால்!!
எதாற்க்கா உழைக்கிறோம்?
எதற்க்காக இந்த பணம்? ஏன்?
இவ்வளவு முறண்பாடுகள்?
ஒருவொருக்கொருவர்!! கருத்து
வேறுபாடு!!
கடந்து போகும் வாழ்வில் நாம் எதை?
கடத்தி செல்ல முயல்கிறோம்?
ஒவ்வொரு வயதை அடையும் போதும்,
மனம் ஏதோ சொல்கின்றதா?
நிச்சயம் கூறும், ஒவ்வொரு வயதும்
உடல் நிலயை கூறும், உணர்ச்சிகளை
கூறும்.
இது நிலை இல்லை என்பதையும் கூறும்!!
புது, புது சிந்தனை வயதை மீறும்!!
கடந்ததை பற்றிய நினைவு ஓர் புறம்!!
செய்ய போவதை நினைத்த பயம்!!
ஏன் இந்த உணர்வுகள் என எதற்க்கும் விடையில்லை!!
ஒவ்வொரு வயதும், இன்னும் நாம் இந்த உலகினில் எதுவும் செய்யவில்லை என உணர்த்துவது புரியவேண்டும்!!
வயதையையும், இளமையையும்
இழக்கிறோம் என்பது புறிய வேண்டும்.!!
இன்னும் செய்ய வேண்டியது நிறைய
உள்ளது என்பதை புறியவேண்டும்!!
எதனால், இந்த பிறவி?
ஏன் இந்த படைப்பு?
என்ன உலகம்?
என்ன வாழ்வு?
என எல்லாம் கேள்வி தான்!!
நிலை இல்லை ஏதும்!! என்பது உறுதி
எது நிலை என தேடுங்கள்!!
ஏதுவும் இல்லாம், எல்லாம்
இருப்பதாய் மகிழ்ந்து வாழுங்கள்!!
வாழ்வோம் வளமுடன்!!
0 Comments
நன்றி