உளறல்கள்

கனவுக்குள் புகுந்து விட்ட 
கற்பனை ஒன்று தான் 
கொண்டு யிருந்த வர்ணம் 
மாறது நிலைத்துக் கொள்ள 
பெரும் போரட்டம் கொள்கிறது!!
காற்றில் கலக்கும் வாசம் கூட
வேசம் என்று மனதில் மய்யம் 
கொண்ட மாயை கதை கதைக்கிறது!!

பறவைகளின் செவிகளுக்கு
இதமான இசைவிருந்தொன்று
நடத்த நரியின் குரல்வளையை
பிடுங்கிவந்தாயிற்று!!

அஸ்தமன சூரியன் தன் கருமஞ்சள் 
குருதியினை மேகத்தின் மீதுகொண்ட 
பெரும் காதலால் பிரிய மனமின்றி 
வானெங்கும் வீசி செல்கிறான்!!

உவமைகள் எல்லாம் உற்று பார்க்க
தமிழேடு கொண்டு காலத்தின் போக்கு
தனில் தமிழின் தொய்வு கண்டு அதன் 
எழுச்சி வேண்டி கந்தனும் தவம் 
செய்கின்றான்!!

Post a Comment

0 Comments