வேண்டாம்:-

ஆரோக்கியத்தை 
இழக்கச்செய்யும் 
பணம் வேண்டாம்!!

அன்பிற்க்காக ஏங்க 
செய்யும் மனம் 
வேண்டாம்!!

சிந்தைக்குள் 
சிட்டெரும்பு 
புகுந்தார் 
போல குழப்பும் 
குடும்பம் 
வேண்டாம்!!

மதிமயக்கம் தரும் 
கோதையர் 
வேண்டாம்!!

சிதையுரும் 
சிந்தைக்கு 
மது போதை 
வேண்டாம்!!

மானுடர் 
கூட்டினில் 
வாழும் அவலம் 
வேண்டாம்!!

நினைவுகளை 
சுமக்கும் 
மூளை 
வேண்டாம்!!

அனைவரும் 
விரும்பும் அழகு 
வேண்டாம்!!

அனைவரும் 
ஏற்க்கும் குணம் 
வேண்டாம்!!

சான்றோர்கள் 
போற்ற அறிவு 
வேண்டாம்!!

கையேந்த 
வைக்கும் பசி 
வேண்டாம்!!

போராட 
செய்யும் வாழ்கை 
வேண்டாம்!!

வெறுக்க 
செய்யும் உறவு 
வேண்டாம்!!

நிம்மதி 
தராத மனம் 
வேண்டாம்!!

ஏமாற்றங்கள் 
தரும் நம்பிக்கை
வேண்டாம்!!

விதியென 
பொருக்கும் மதி
வேண்டாம்!!

திண்டாட
செய்யும் இறை
வேண்டாம்!!

உண்மை
இல்லா உறவு
வேண்டாம்!!

ஏகாந்தம் 
தரும் இளமை
வேண்டாம்!!

காதல் 
வேண்டாம்!!

காமம் 
வேண்டாம்!!

மதி 
வேண்டாம்!!

குணம்
வேண்டாம்!!

சினம்
வேண்டாம்!!

ஆதியும்
வேண்டாம்!!

அந்தமும்
வேண்டாம்!!

ஏதுமற்று 
நிற்கதியாய் 
நின்றிட 
வேண்டாம்!!

பண்பு
வேண்டாம்!!

பரிதவித்து
ஏங்க செய்யும்
பாசம் 
வேண்டாம்!!

மொத்தத்தில் 
நீயும் 
வேண்டாம்!!

நானும் 
வேண்டாம்!!

மானுடர்
படும் இன்னல்கள் 
வேண்டாம்!!

படைத்தவனே
உன்னைத்தான்
ஏதும் இல்லாது
எல்லாம் 
பெருவெளிக்குள்
புதைந்து போகட்டும்!!

Post a Comment

0 Comments