Posts

Showing posts from October, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

பயணத்தின் விழிம்பினில்

Image
மானுட  வேடமிட்டு நாடக மேடையேறி நடிக்க நடிக்க நடிப்பு வராமால்.... நடுக்கம் பல கண்டு வேடம் கழைய முடியாமலும்.... நாடகத்தின் சாரம் அறியாமலும் அதனை அறிந்திட முற்படுகையில் அரேங்கேற்றம் முடிந்தும் போக... என்ன தான் இந்த வாழ்வு என்று... வாழ்வை தகர்த்த போராடுகையில் தத்துவங்கள் ஆயிரம் முன்  வந்து விழுகின்றன... படிக்க படிக்க எல்லாம் எனக்கே எழுதியதாக உணர்கிறேன்... என் ஈர்ப்பு எல்லாம்  தத்துவத்தின் சாரல் விழும்பினை கவ்வி கொண்டு வாழ்வையும் நகர்த்தியது... வாழ்வு  இது  தான் என்றது... எத்தனை  உயிர்கள் மண்ணில் ஜனித்தாலும். ஒவ்வொன்று -க்கும்.... காரண காரியங்கள் மட்டுமே அதன் பிறப்பின் காரணமாக இருக்கும்... மனிதன் இத்தனை வகை அவன் செயல் இத்தகையது... இந்த  நிகழ்வில் இப்படி தான் செயலாற்ற முடியும்... என  அனைத்தையும் புரிந்தாய்வு செய்யும் படி விட்டு விட்டான்.... புரிதலின் பக்குவம் ஏற்படின் உன்னை  எந்த  நிகழ்வும் ஏதும் செய்திட இயலா.... எல்லாம் புரிந்து விடும்.... உன் மனம் உன்னை வருந்த செய்ய முடியாது.... உன் மனம் உன்னை மகிழச் செய்ய முடியாது.... நீ ஒரு  மாபெரும் மலையை போல உணர்வு கொண்டு செயற்று ஆரவாரமற்று உன்னுள் நீய

கைலைமலை தரிசனம்

Image
இறைவன் என்னோடு பேச என்றும் மறந்தது இல்லை... என்னை விட்டு எங்கும் விலகியதும் இல்லை.. நான் தேடும் முன்னே எனக்காக காத்திருந்த தருணங்கள் பலவுண்டு என் வாழ்வில்... நான் நினைக்கும் முன்னே பல கொடுத்ததும் உண்டு... ஆனால் என்றும் எனக்கு வாழ்கைக்கு தேவையான அனுபவங்களை தர மறுத்தது இல்லை அவன்... ஆசைகள் ஆயிரம் ஆயிரம் மனதில் தோன்றலாம் ஆனால் நடப்பது எது, சாத்திய படுவது எது என்பது நாம் அறிந்திராத ஒன்று... அது நிச்சயம் நமக்கு தேவையென்றால் அவன் நாம் கேட்கும் முன்னே தந்து மகிழ்வான்... இதற்கு முன் ஓர் இரவு மூன்று மணி அளவில் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நானும் நண்பனும் வீடு திரும்பும் போது... மேற்க்கு முக வானில் பட்டை வடிவில் திருனீர் அணிந்திருந்த சிவ பெருமானின் நெற்றியை கண்ட ஒரு அற்புதம் நிகழ்திருந்தது என் வாழ்வினில்... அந்த நிகழ்வு எனக்குள் நிகழ்த்திய ஓர் பேரமைதி இன்றளவும் ஆழ்ந்துள்ளது இந்த அறுதம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் இருக்கும் அப்படி இருக்க... அன்று மாலை 5 மணி மழை ஒரு புறமும் இன்னொருபுறம் மழை கருமேகமும் சூழ்ந்திருந்த பொழுது அது... நாங்கள் இருந்த இடத்தினில் சிறிது சாரல் கூட இல்லை... வீட்டின

துரோகம்

ஆத்தாடி என்ன செய்கிறது இந்த மனம்... அடி  பாதகத்தி இது உன்னை  அல்லவோ தேடுகின்றது.... என்னை  நிந்தித்தவள்  அல்லவோ நீ.... இந்த  மனதிற்க்கு என்ன  ஆனது?...  பித்து  தான்  பிடித்திருக்க  வேண்டும்.... ஆம்... பெரும்  துயரில்  ஆழ்த்திய  கொடிய  விலங்கினை  நினைத்து  வருத்தம்  கொள்வதா? நேசம் புரியாது தவிப்பினில் ஆழ்த்திய வேச தாரினியிடம் மனம் சிறை பட்டதோ!! வாழ்வில் பெரும்  பகுதியையும் பொருளையையும் இழக்க செய்து எனக்கு.... துரோகம் எனும் பெரும் விஷம் கொடுத்தவள் அல்லவா நீ!!..... எனக்கு மூளை சலவை செய்து என் சொத்துக்களை பரித்தவள் இவளே!!..... மொத்தத்தில் அன்பெனும் திறை போட்டு.... திறைக்கு பின்னே ஆக சிறந்த தூக்கு மேடை ஒன்று எனக்கென அமைத்திருந்தாய்..... நான் அதனை அன்பெனும் ஊஞ்சல் என்று  எண்ணி உன் நிம்மதிக்காக..... கழுத்தை பிடித்து ஆட  வைத்து கொண்டிருக்கும்.... உன் பாசம் எனும் துரோக வலையினில் துயில் கொண்டிருக்கிறேன்..... என்  நிலை கண்ட வாலிபர்களே காதல் கொள்ளுங்கள்.... மனதார நேசம் சொல்லுங்கள்..... இறுதி  முடிவு அனைவருக்கும் மரணம் தானே!?.... எனக்கு துரோகம்!! உங்களுக்கும் பெரும் நேசமாக கூட இருக்கலாம்....... காத

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *