இறைவன் என்னோடு பேச என்றும் மறந்தது இல்லை...
என்னை விட்டு எங்கும் விலகியதும் இல்லை..
நான் தேடும் முன்னே எனக்காக காத்திருந்த தருணங்கள் பலவுண்டு என் வாழ்வில்...
நான் நினைக்கும் முன்னே பல கொடுத்ததும் உண்டு...
ஆனால் என்றும் எனக்கு வாழ்கைக்கு தேவையான அனுபவங்களை தர மறுத்தது இல்லை அவன்...
ஆசைகள் ஆயிரம் ஆயிரம் மனதில் தோன்றலாம் ஆனால் நடப்பது எது, சாத்திய படுவது எது என்பது நாம் அறிந்திராத ஒன்று...
அது நிச்சயம் நமக்கு தேவையென்றால் அவன் நாம் கேட்கும் முன்னே தந்து மகிழ்வான்...
இதற்கு முன் ஓர் இரவு மூன்று மணி அளவில் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நானும் நண்பனும் வீடு திரும்பும் போது...
மேற்க்கு முக வானில் பட்டை வடிவில் திருனீர் அணிந்திருந்த சிவ பெருமானின் நெற்றியை கண்ட ஒரு அற்புதம் நிகழ்திருந்தது என் வாழ்வினில்...
அந்த நிகழ்வு எனக்குள் நிகழ்த்திய ஓர் பேரமைதி இன்றளவும் ஆழ்ந்துள்ளது இந்த அறுதம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் இருக்கும்
அப்படி இருக்க...
அன்று மாலை 5 மணி மழை ஒரு புறமும் இன்னொருபுறம் மழை கருமேகமும் சூழ்ந்திருந்த பொழுது அது...
நாங்கள் இருந்த இடத்தினில் சிறிது சாரல் கூட இல்லை...
வீட்டின் இரண்டாவது தள மொட்டை மாடிக்கு திடீரென செல்ல தோன்றியது என்றும் அந்த நேரம் வளக்கமாக செல்வதும் கிடையாது....
வாரத்தில் ஒரு முறை சென்றாலே அது ஆச்சர்யம் தான்...
ஏனோ அன்று அந்த மாலை நேரம் மழை கருமேகங்களை காண ஆவலாக இருந்தது...
அது மட்டும் இன்றி கண்டிப்பாக மாடிக்கு செல்ல வேண்டும் என்று என்னை அறியாது ஒரு தூண்டல்...
என்னுடன் இருந்த தோழன் ஒருவனை அழைத்தேன் அவனும் மறுவார்த்தை கூறாது என்னுடன் வந்தான்...
இரண்டு சுற்று படிகட்டுகளை ஏறி மேல சென்றோம்...
மேலே சென்று நண்பனுடன் பேசி கொண்டு இருந்த சில வினாடிகளில் அன்று போல இன்றும் மேற்க்கு பக்க வானத்தை எதேற்சையாக பார்த்தேன்...
அந்த வட திசையில் நம் எல்லையின் பெரும் அரணாகவும் ஆண்மீக பேரானந்தமுமான அந்த கைலை மலை நம் சொர்க்க பூமி...
வாழ்வில் ஒரு முறையேனும் சென்றிட ஏங்கும் ஈசனின் இருப்பிடமான அந்த கைலை மலை
மேகங்களால் உருவாக்கப் பட்டிருந்தது...
என்னை மெய்சிலிர்க்க வைத்தது, என் நண்பனை அழைத்து அவனிடம் காட்ட அவன் சாதாரண மேகங்களை காண்பது போல்...ம்....என்று கூறி கடந்தான்...
யார் எப்படியும் நினைத்து கொள்ளட்டும் அவர்களை போல என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை...
வணங்கினேன் ஈசனை என்னால் செல்ல முடியுமா என்று தெறியவில்லை கைலை நாதனை தேடி அவன் வசிக்கும் பொற்பூமிக்கு...
ஆனால் ஈசன் எனகழித்த அந்த தரிசனத்தை சாதாரணமாக என்னால் கடந்து விட முடியாது...
அது அவன் எனக்கழித்த வரம், நான் அங்கேயே நின்று பேராந்த்தில் ஈசனை வணங்கி வந்து அமர்ந்தேன் நான் அமர்ந்து 10 வினாடிகள் கூட இருக்காது...
மேகம் சட்டென்று மாறியிருந்தது நான் கண்ட அந்த காட்சி இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லை...
சாதாரண மேக கூட்டங்களாகவே மாறியாயிற்று...
நான் கண்கலங்கி அந்த பிட்டுக்கு மண்சுமந்த, ஈசனை அந்த திருவாச வரிகுடைய இல்லானே, உள்ளானே அன்பர்க்கு அன்பனே யாவையுமாய், ஜோதியனே.....நுண்இருளே....
என்ற வரிகள் மனதில் தோன்றிட அங்கேயே அமர்ந்து திருவாசகம் படித்து ஆர அமர இருந்து மெதுவாக அறைக்கு சென்றேன்...
இருந்தும் அவ்வளவு எளிதினில் என்னால் அந்த நிகழ்வில் இருந்து வெளிவர முடியவில்லை...
ஓம் நமசிவாயா...
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி...போற்றியே....
ஓம் நமசிவாய நம: 🕉️
ReplyDelete