பயணத்தின் விழிம்பினில்


மானுட 
வேடமிட்டு
நாடக
மேடையேறி
நடிக்க
நடிக்க
நடிப்பு
வராமால்....

நடுக்கம்
பல
கண்டு
வேடம்
கழைய
முடியாமலும்....

நாடகத்தின்
சாரம்
அறியாமலும்
அதனை
அறிந்திட
முற்படுகையில்
அரேங்கேற்றம்
முடிந்தும்
போக...

என்ன
தான்
இந்த
வாழ்வு
என்று...

வாழ்வை
தகர்த்த
போராடுகையில்
தத்துவங்கள்
ஆயிரம்
முன் 
வந்து
விழுகின்றன...

படிக்க
படிக்க
எல்லாம்
எனக்கே
எழுதியதாக
உணர்கிறேன்...

என் ஈர்ப்பு
எல்லாம் 
தத்துவத்தின்
சாரல்
விழும்பினை
கவ்வி
கொண்டு
வாழ்வையும்
நகர்த்தியது...

வாழ்வு 
இது 
தான்
என்றது...

எத்தனை 
உயிர்கள்
மண்ணில்
ஜனித்தாலும்.
ஒவ்வொன்று
-க்கும்....

காரண
காரியங்கள்
மட்டுமே
அதன்
பிறப்பின்
காரணமாக
இருக்கும்...

மனிதன்
இத்தனை
வகை
அவன்
செயல்
இத்தகையது...

இந்த 
நிகழ்வில்
இப்படி
தான்
செயலாற்ற
முடியும்...

என 
அனைத்தையும்
புரிந்தாய்வு
செய்யும்
படி
விட்டு
விட்டான்....

புரிதலின்
பக்குவம்
ஏற்படின்
உன்னை 
எந்த 
நிகழ்வும்
ஏதும்
செய்திட
இயலா....

எல்லாம்
புரிந்து
விடும்....

உன்
மனம்
உன்னை
வருந்த
செய்ய
முடியாது....

உன்
மனம்
உன்னை
மகிழச்
செய்ய
முடியாது....

நீ ஒரு 
மாபெரும்
மலையை
போல
உணர்வு
கொண்டு
செயற்று
ஆரவாரமற்று
உன்னுள்
நீயே
ஐக்கியமாகி....

பேரமைதியின்
பேரானந்தத்தில்
திழைத்து
இருப்பாய்....

அன்று
தோன்றும்
இதற்க்கு
தானா
இத்தனை
ஆர்பாட்டங்கள்
என்று...

அனைவரும்
வாருங்கள்
நான் 
உங்களை
வேறொரு
நிலைக்கு
மாற்றுகிறேன்
என்று
அழைப்பு
விடுப்பாய்....

நீங்கள்
தேடுவது
உண்மையில்
நிறந்தர
ஆனந்தமற்றது
என்பாய்....

சிதறிய
சர்கரை
துண்டுகளை
சுவைக்க
வந்த
எறும்புகளாக...

கூட்டம்
அலை
மோதும்
இனிப்பு
சற்று
குறைந்து
விட்டாலும்
வேறொரு
சுவை
தேடி
அலையும்...

அந்த கூட்டம்
கடைசி
வரை 
தேடி
அலைந்து
கொண்டே
இருக்கும்....

நீ 
எடுத்துரைக்க
விரும்பியது
இனிப்பை
எப்படி 
நாம் 
இருக்கும்
இடம்
தேடி
வரவைப்பது
என்ற
இரகசியத்தை...

ஆனால்
தேடி
திரியும்
அந்த
எறும்புகளுக்கு
அத்தனை
பொறுமை
இல்லை....

அவர்கள்
காலம்
முழுவதும்
தேடிகொண்டே
இருக்க
விரும்புகின்றனர்...

காலம்
அவ்வளவு
எளிதினில்
எதையும்
கொடுத்து
விடுவதும்
இல்லை...

அது
பயணிக்க
துவக்கிய
பின்பு
தானே
புறியும்...

பயணம்
இனிதே
ஆரம்பமாகட்டும்
ஒவ்வொரு
எறும்பிற்க்கும்...



ஓம் நமசிவாய


பேரொளியிம் கருணை துகளில் இருந்து நான்

பிரதீஸ்

Post a Comment

0 Comments