உறவுகள் மேம்பட
• கானகத்தின் நடிவே பெரும் பள்ளம் நோண்டி யாரும் காணாத வண்ணம் வாழுங்கள்.
• உதவி தேவைப்படின் சிறுத்தை குட்டிகளை நாடுங்கள்.
• தப்பி தவறி கூட உறவுகள் என்று தேடி அலையாதீர்கள்.
• பண தேவை ஏதேனும் வந்தால் அதை கூறு போடுங்கள் ஆசைக்கா இல்லை மருத்துவ தேவையா என....ஆசைக்காக என்றால் நீயே பெரும் பாறையின் இடையே சிக்கி மாண்டுவிடு.
• மருத்துவ தேவை என்றால் பயபடாதே மனதை இயற்கையோடு இணைய முற்படு நோயெல்லாம் காணாமல் போகும், போகவில்லை என்றாலும் போராடு மரணம் வரை.
• நீ செல்வ செழிப்போடு நன்றாக இருக்கிறாய் என்றால் உறவுகளை தேடி தேடி அவர்கள் தேவையை பூர்த்தி செய். வள்ளுவன் வாக்குப் போல.
• உறவுகள் மேம்பட அவர்களுக்கு உதவி செய் உறுதுணையாய் இறு அவர்கள் இன்ப துன்பத்தில், ஆனால் அதனை அவர்களிடம் எதிர்பார்காதே.
• உறவுகள் மேம்பட உன்னிடம் இருக்கும் எல்லாம் அவர்களுக்கு கொடுத்து மகிழ், ஆனால் நீ அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்காதே.
• சட்டென பற்றி எறியும் தீக்குச்சியாய் வாழ்வை வாழ ஆசை, சில நொடி வெளிச்சம் தந்து அந்த வெளிச்சத்தில் மூலம் பிராமாண்ட பேரொளி ஏற்படுத்த, சில நொடி தாண்டி இருந்தாலும் அணைக்கப்படுவோம்.
• உன்னை நம்பி வாழ்வை நகர்த்து, இல்லை என்றால் காணாதா கடவுளிடம் ஒப்படைத்து விடு எல்லாம் சிறப்பாய் அமையும்
பேரோளியில் இருந்து நான்.
பிரதீஸ்
1 Comments
👍
ReplyDeleteநன்றி