Posts

Showing posts from August, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி மூன்று) Birth of Yogi ( Part 3 )

Image
                               நாங்கள் அங்கிருந்து எழுந்து நண்பனின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம் . பாதை எங்கும் இருள் சூழ்ந்திருக்க வீடுகளில் மின்னும் மண்ணெண்ணை விளக்குகள் ஆங்காங்கே நிழல் படங்களை திரையிட்டுக் கொண்டு இருந்தன.  நண்பன் முன் செல்ல நாங்கள் அவனைத் தொடர்ந்தோம். நண்பன் கையில் வைத்திருந்த சிறிய டார்ச் லைட் சரியாக வேலை செய்யவில்லை என்று கைகளில் வைத்து தட்டினான் அது அவன் எதிர்பார்த்த படி வேலை செய்ய ஆரம்பித்தது தவறாக. குழந்தைகள் குளம் , கறை என்று வட்டமிட்டு தாவி தாவி விளையாடும் விளையாட்டுப் போல வெளிச்சம் , இருள் என்று கையில் வைத்திருந்த அந்த மின்னணு விளக்கு விளையாடிக் கொண்டிருந்தது அந்த கலியுக செயற்கை மின் மினியை தொடர்ந்தோம், மின்னணு விளக்கில் இருள் முடிந்து வெளிச்சம் வர தெருவில் படுத்திருந்த நாயின் கண்கள் சற்று மிரள செய்து விட்டது மனைவியும் என் மகனும் அலறி விட்டார்கள். பிறகு என்ன சொல்லவா வேண்டும் நாய்களும் அவர்களுக்கு இசைப்பாட்டு பாட ஆரம்பித்து விட்டது. அருகில் வீட்டு திண்ணையில் இருந்து ஒரு விளக்கு உயர்ந்தது அங்கு அமர்ந்திருந்த கிழவி ஒருத்தி யாருய்யா அது பரணியா என கேட்க ? நண்

மெய்ஞான புலம்பல்

Image
உடல் என்னும் மாயையில் உயிர் தங்க வைத்ததேன்!? உயிர் ஓட்டத்தினில்  எண்ணங்களை கொடுத்ததேன்? அவற்றில் சரி தவறு என  பிரித்ததேனோ? இப்படி பாகுபடுத்தி, பாடுபடுத்தி  கொடுக்கும் பாடம் புரிதலுக்காகவா!? உணர்தலுக்காகவா? ஊக்கமளிக்கும் உணவு பிரித்து வாழ்வை பல பகுதிகளாக பிரித்து உடலில் இருந்து உயிர் பிரியும் வரை எத்தனை, எத்தனை பிரிவினைகள்? எல்லாம் பிரியும் என்ற போது! உடன் சார்ந்தோரோடு பிறியம் எதற்க்கு? மானுடர்கள் கடைசி வரை புலம்பல்  என்றே புலம்பி, புலம்பி திறிய.... பூலோகம் எல்லாம் நீ வாசம் செய்யவா? கலி முற்றும், மனிதன் அவனை அவனே அழிப்பான் அப்போது தான் வருவேன் என்றாய் மனிதர்கள் மீது அவ்வளவு வெறுப்பா உனக்கு? அவ்வளவு காலம் பொருத்து இருந்து ஏன் வரவேண்டும்.... இப்போதே வந்து மனிதன் அந்த நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியாதா என்றால் உன் பதில் நிச்சயம் முடியாது தான்... என்பது யாம் கண்ட உண்மை இந்த வையகத்தினில்...  மனிதன் தான் என்ற ஆணவத்தில் அடர்ந்து இருண்டுள்ளான்...  எந்த அறிவுறையும் கேட்போர் இல்லை, கேட்டாலும் செயல் புரிவோர் யாரும் இல்லை... காலத்தின் போக்கில் அவர்கள் அடிபட்டு நொந்த பிறகே அவர்களுக்கு அன

நட்பு

Image
வரம்புகள் இல்லாத நட்பு ஓர் வரம் தான்... வார்த்தைகள் தடுமாறும் வரை,  காலம் களவாடும் வரை, மனம் விட்டு பேசி கொண்டாடுங்கள் உங்கள் உண்மையான நட்புடன்:- 🫠🍃🍃🍃 பேரொளியின் கருணை துகளில் இருந்து  நான்🍃🍃🍃

இப்படிக்கு காலம்

Image
வெற்றிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தோண்டி எடுங்கள்!! அங்கே வாழ்வு முழுவதும் தோற்றவன் சரித்திரம் பொறிக்கப்படட்டும்!! அவனுடைய போரட்டங்களும் அவனுடைய தியாகங்களும் செதுக்கபடட்டும்!! நாயகன் தோற்ற கதை ஒன்று உலகுக்கு கூறுங்கள்!! யாருக்காக போரிட்டானோ ? அந்த மக்களே அவனை எதிர்க்கும் நிலைக்கு மாற்றிய நயவஞ்சகர்களின் குரவளைகளை கடித்து எறியுங்கள்...!! நாட்டின் பல இரத்த சரித்திரங்களை சுய லாபத்திற்காக மாற்றிய துரோகிகளை சிற்றெரும்புகளுக்கு இறையாக்குங்கள் !!   புரியட்டும் வீரனின் வலிகள், அவனும் உணரட்டும் தியாகத்தின் கனிவை!! போருக்கு சென்றவன் எல்லாம் வீரன் இல்லை!! வெற்றி பெற்றவன் எல்லாம் மன்னன் இல்லை!! மகுடம் பறிக்க பல சூழ்ச்சி செய்து, போர் வரம்புகளை மீறிய நாசக் காரர்களை பாழடைந்த கிணற்றினில் பாதி தூரத்தில் தொங்க விடுங்கள்!! சூழ்சியின் இழப்பு புரியட்டும் அவனுக்கு துரோகத்தின் அலரல் சத்தம் கேட்கட்டும் அவனுக்கு!! விதிகளை உருவாக்கியவனுக்கு விதிகள் இல்லை!! வலிகளை ஏற்பவனுக்கு ஆயிரம் விதிகள்!! நீங்கள் ஏமாற்றியது போதும்!! வஞ்சம் கொண்ட நீங்கள் மண்புழுக்களுக்கு வர்ணம் தீட்டுவதனால் அதன் தன்மை மாறிவிடாது

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *