இப்படிக்கு காலம்

வெற்றிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தோண்டி எடுங்கள்!!

அங்கே வாழ்வு முழுவதும் தோற்றவன் சரித்திரம் பொறிக்கப்படட்டும்!!

அவனுடைய போரட்டங்களும் அவனுடைய தியாகங்களும் செதுக்கபடட்டும்!!

நாயகன் தோற்ற கதை ஒன்று உலகுக்கு கூறுங்கள்!!

யாருக்காக போரிட்டானோ ? அந்த மக்களே அவனை எதிர்க்கும் நிலைக்கு மாற்றிய

நயவஞ்சகர்களின் குரவளைகளை கடித்து எறியுங்கள்...!!

நாட்டின் பல இரத்த சரித்திரங்களை சுய லாபத்திற்காக மாற்றிய துரோகிகளை சிற்றெரும்புகளுக்கு இறையாக்குங்கள் !!  

புரியட்டும் வீரனின் வலிகள், அவனும்
உணரட்டும் தியாகத்தின் கனிவை!!

போருக்கு சென்றவன் எல்லாம் வீரன் இல்லை!!
வெற்றி பெற்றவன் எல்லாம் மன்னன் இல்லை!!

மகுடம் பறிக்க பல சூழ்ச்சி செய்து, போர் வரம்புகளை மீறிய நாசக் காரர்களை பாழடைந்த கிணற்றினில் பாதி தூரத்தில் தொங்க விடுங்கள்!!

சூழ்சியின் இழப்பு புரியட்டும் அவனுக்கு
துரோகத்தின் அலரல் சத்தம் கேட்கட்டும் அவனுக்கு!!

விதிகளை உருவாக்கியவனுக்கு விதிகள் இல்லை!!

வலிகளை ஏற்பவனுக்கு ஆயிரம் விதிகள்!!

நீங்கள் ஏமாற்றியது போதும்!!

வஞ்சம் கொண்ட நீங்கள் மண்புழுக்களுக்கு வர்ணம் தீட்டுவதனால் அதன் தன்மை மாறிவிடாது ஒரு போதும்...

பட்டினியின் பாசை பெரும் இறைச்சலாக உங்கள் காதுகளை கிழிக்கத் தான் போகிறது...

வேள்வியால் நிலை பெற்ற மானுட தர்மம் இன்று
ஆசையால் அழிந்து கொண்டிருக்கின்றது...!

அரக்கர்களிடம் அன்பை எதிர்பார்பதும், கொடிய நாகத்திடம் கருணையை எதிர் நோக்குவதுமே மானுட இயற்கையானது !!

இப்படிக்கு
காலம்..

பேரொளியின் கருணை துகளில் இருந்து 
நான்:


Post a Comment

0 Comments