வடு
காற்றினில் மிதந்து வரும் இலை,
அது வானுயர்ந்த ஒரு மரத்தினது
என்றறிந்தவர் உண்டோ ?
ஓடையில் தவழும் மீனுக்கு அதன்
பிறப்பு காவேரி என்று தெரியுமோ ?
மண்ணில் நெழியும் புழு
நட்சத்திர மண்டலங்கள் அறியுமோ ?
காட்சிகள் எல்லாம் பிழை என்றானபின்
வர்ணனைகள் மட்டும் தஞ்சம் கொள்வது
ஏன் ?
ஒற்றை வார்த்தையால், மொத்த வாழ்வையும்
கலகமாக்கிய நீ; இன்று வார்த்தைகளுக்கு வர்ணம்
பூசி செல்கிறாய் !!
இடி விழுந்த ஆற்றின் வலியை யாரும்
அறிந்திட மாட்டார்கள் !!
கடந்து சென்றே பழக்கப்பட்ட ஆற்று நீருக்கு
பாரமென்ன ? பாவமென்ன ? பழிதான் என்ன?
அத்தனையும் வடுவாய்; அக நீரோட்டத்தில்,
யாரும் காணாத அதன் மறுபக்கம்
பேரொளியின் கருணை துகளில் இருந்து நான்
பிரதீஸ்
0 Comments
நன்றி