உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
ஆற்று மீனுக்கு நீருக்கு என்ன பஞ்சம் ?
நாணல் செடிகளுக்கு அரவணைப்பிற்க்கு என்ன பஞ்சம் ?
தோகை விரிக்கும் மயிலுக்கு அழகுக்கு என்ன பஞ்சம் ?
கடல் நீருக்கு உப்பிற்க்கு என்ன பஞ்சம் ?
ஆம், தஞ்சம் கொண்ட நெஞ்சுக்கு மனிதர்களின் சூட்சியினால் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது...
அன்பிற்க்கு.....
வார்த்தைகள் வற்றின; காற்றின் நெசவு மட்டும்
மனதை ஒருங்கே அழைத்துச் செல்கிறது...
பேரொளியின் கருணை துகளில் இருந்து
நான் 🍃🍃🍃
-பிரதீஸ்
Comments
Post a Comment
நன்றி