உழைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, உழைப்பு மனம் சார்ந்தது உடலில் வலு இருந்த போதிலும் சில வேலைகளில் நாம் சோம்பலை உணர்ந்திருப்போம். என்று வேலை செய்ய வேண்டாம் என்று எண்ணியிருப்போம். அல்லது நன்றாக என்று நித்திரைக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஓங்கியிருக்கும். ஆனால் நாம் அதையும் செய்யாமல் அன்றைய நாளை வீணாக கழிப்போம். இந்த சோம்பல் எங்கிருந்து குடி கொள்கிறது உடல் அசதியை அந்த சோம்பல் எண்ணமே உருவாகியிருக்கும். மனம் அசட்டையாக இருக்கும். ஆரோக்கியம் முதலில் மனதிற்கு தான் தேவை. மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது எந்தவித சலிப்பும், சோம்பலும் உடலை தாக்காது. அப்படி மனம் உற்சாகம் ஆகவில்லையெனில் நன்றாக ஓய்வு தேவை என்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். இருள் நிறைந்த அறையில் நல்ல தூக்கம். அதுவே உடலுக்கும் மனதிற்கும் போதுமானது. தேவையான அளவு உணவு அவ்வளவு தான். உழைக்கும் நேரம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு நமக்கு என்றும் இருக்கவேண்டும். உணர்தல் என்பது மனிதனுக்கு இயற்கை கொடுத்த பெரிய வரம். மனிதனால் உள்ளும் புறமும் உணர முடியும் என்றாலும் அவன் எதன் பின்னோ அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்....
இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம். அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும். ஒவ்வொர...
மேகக் கூட்டங்கள் பகுதி 1 பெரும் காடு அந்த காட்டின் உயிர்ப்பை தன் வசம் கொண்டு எல்லைகளற்றவையாய் கிளைகளின் ஊடேயும், பாறைகளிலும் குடியிருப்பவனாய் எண்ணிலடங்கா தன் இனத்தின் அடைக்கலம் கொண்டு அவர்களே கதியென்று வெளியுலகம் பார்க்காது தன் கூட்டத்தின் நிழலிலேயே இருந்து. எண்ணியிராத பெரும் காற்றில் தனித்து கொண்டு வரப்பட்ட சிறு தேனியைப் போலவே அன்று கோமுகி பதறிக் கொண்டிருந்தாள். எந்த திசையில் செல்வதென்பது அவளுக்கு விளங்காமல் இருந்தது. உயிர் இருந்தும் அவள் உயிரை இழந்தவள் போலவே உணர்ந்தாள். அந்த இருள் சிறு விளக்கின் உஷ்ணம் தாங்கியிருந்தது. கடும் குளிர் அதன் ஒளியை மங்கச் செய்திருந்தது. நிழலாடும் அதன் தீபம் அவளை இன்னமும் நெஞ்சடைக்கச் செய்திருந்தது. எங்கோ தூரமாய் கேட்ட கானாக ஓசை அவளுக்கு அலறலாகவே கேட்டது. இசை அதன் உயிர் இழந்திருந்தது அவள் காதுகளில் நுழையும் போது. பத்து அறைகளுக்கு மேலிருந்த அந்த வீடு மானுட நடமாட்டத்தை ஏனோ விரும்பாமல் இருந்தது. ஊரின் எல்லையில் காவலன் போல காட்சியளிக்கும் அந்த கல் அடுக்குகளால் ஆனா வீடு மனிதர்களுக்கு என்னவோ நரகத்திற்கான வழியாகவே தெரிந்தது. இரவு நேர இரைச்ச...
1 Comments
👍🏻
ReplyDeleteநன்றி