கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி மூன்று) Birth of Yogi ( Part 3 )

                              



நாங்கள் அங்கிருந்து எழுந்து நண்பனின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பாதை எங்கும் இருள் சூழ்ந்திருக்க வீடுகளில் மின்னும் மண்ணெண்ணை விளக்குகள் ஆங்காங்கே நிழல் படங்களை திரையிட்டுக் கொண்டு இருந்தன.

 நண்பன் முன் செல்ல நாங்கள் அவனைத் தொடர்ந்தோம். நண்பன் கையில் வைத்திருந்த சிறிய டார்ச் லைட் சரியாக வேலை செய்யவில்லை என்று கைகளில் வைத்து தட்டினான் அது அவன் எதிர்பார்த்த படி வேலை செய்ய ஆரம்பித்தது தவறாக.

குழந்தைகள் குளம், கறை என்று வட்டமிட்டு தாவி தாவி விளையாடும் விளையாட்டுப் போல வெளிச்சம், இருள் என்று கையில் வைத்திருந்த அந்த மின்னணு விளக்கு விளையாடிக் கொண்டிருந்தது அந்த கலியுக செயற்கை மின் மினியை தொடர்ந்தோம், மின்னணு விளக்கில் இருள் முடிந்து வெளிச்சம் வர தெருவில் படுத்திருந்த நாயின் கண்கள் சற்று மிரள செய்து விட்டது மனைவியும் என் மகனும் அலறி விட்டார்கள்.

பிறகு என்ன சொல்லவா வேண்டும் நாய்களும் அவர்களுக்கு இசைப்பாட்டு பாட ஆரம்பித்து விட்டது. அருகில் வீட்டு திண்ணையில் இருந்து ஒரு விளக்கு உயர்ந்தது அங்கு அமர்ந்திருந்த கிழவி ஒருத்தி யாருய்யா அது பரணியா என கேட்க ? நண்பன் இல்லை அத்தை நான் சக்கர என்றான் !! 

பொழுது போக்குகள் எல்லாம் ஒருவொருக்கொருவர் நாட்டு நடப்புகளை பேசி கொள்வது தானே !! யாரிடம் அசைபோடலாம் என காத்திருந்த கிழவிக்கு நண்பன் சர்க்கரை தொக்காக மாட்டியது போல தோன்றியது எங்களுக்கு.

நண்பன் லேசாக முனு முணுக்கிறான், இனி கொஞ்ச நேரம் விட மாட்டாங்களே என்று முளிக்கின்றான் காவலர்களிடம் சிக்கிய வழிப்போக்கன் போல.

 எங்களையும் விட்டு வைக்கவில்லை எனக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதைப் போல தோன்றியது அத்தனை கேள்விகள்.  இருந்தும் எனக்கு மனதளவினில் புன்னகை  தான் இருந்தது. 

என்னுடைய முப்பாட்டன் வரை யாருன்னு கேக்காம விடாது போலே என்று தோன்ற செய்துவிட்டால் கிழவி. பொறுமை இழந்த நண்பன் சக்கர, அத்தை மணியாச்சி அவனும் இனி கிளம்பனும் காலைல விவரத்த சொல்லுற என்றான்.

கிழவியோ ஆமா... ஆமா... பேசிட்டு இருந்ததுல மாட்டுக்கு வைக்கோல் போட மறந்துட்டேன்னு சொல்லிட்டு பாத்து போங்கயா வாரத்துக்கு நாலு பேர கடிச்சிடுத்துங்க இந்த நாய்ங்க, என்று சொல்லி பீதியை கிளப்பிவிட்டு திரும்பிச்சி. 

நண்பன் சொன்னான் ஊருலயே பழசு இது தான் நுறுக்கு மேல ஆச்சி வயது கேட்டா தொனுத்தூ ஒண்ணுனு சொல்லிட்டு திரியுது என்றான்.

 

மனதில் ஏதோ  ஒரு பாரம் தொற்றிக் கொண்டது போல உணர்வதாக நண்பன் சக்கரையிடம் கூறினேன். அவனுக்கு அது புரியவில்லை என்ன ஆச்சி என்று கேட்டான் ? 

ஆம் என் உணர்வுகள் எப்படி அவனுக்கு புரியும்!? எனக்கு அந்த ஊர் மிகவும் பிடித்து விட்டது. மாலை நேரத்தை விட இந்த இரவு எனக்குள் ஏதோ செய்கிறது என்று நண்பனிடம் கூறினேன்.

ஆம் அது உனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் அந்த உணர்வு தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில். ஏன் என்று கேட்டேன் ?

அது தான் தவத்தின் வலிமை என்றான்.! நான் கேட்டேன் யாருடைய தவத்தின் வலிமை என்று ? நான் தான் கூறினேனே கோவிலில் வைத்து அந்த பூசாரி.. என்றான் நண்பன். 

அப்போது தான் எனக்கு நினைவு திருப்பியதாயுணர்ந்தது, ஆம் அந்த யோகியின் இரவு நேர தவம் நினைக்கு வந்தது. 

நண்பன் தொடர்ந்தான் இனி இரவு முழுவதும் ஐயாவின் தியான அலை அனைவரையும் அவர் வசபடுத்தும். 

பரிகாரங்கள், பிராயசித்தங்கள் தேடி பலர் வர கூடும் அவர்களில் பலர் கீல்சாந்தியின் அறிவுரை படி இங்கேயே தங்கியிருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பாவங்களை பொறுத்து அவர்களது விமோட்சனம் என்பார்கள். 

ஒரு இரவில் குணம் அடைந்து சென்றவர்களும் உண்டு மாதங்கள் பல இங்கேயே தங்கியவர்களும் உண்டு. காசியை போன்றதொரு முக்தியளிக்கும் புனித பூமியாக இன்னும் சில காலங்களில் எங்கள் ஊரும் மாறிட கூடும், என்றான் நண்பன் சர்க்கரை.  

இப்போதே கேட்டு தெரிந்து விட வேண்டும் என்ற ஆவலில் ஆம் பூசாரியின் முந்தைய ஜன்மத்தில் கோவில் வைத்து ஏதோ கூறினார் என்றாயே அது என்ன என்றேன் ? 

பூச்சிகளின் சத்தம் மனதை அதன் ரகசிய இருக்கையை பார்க்க வா என்று அழைப்பதாகியிருந்தது.

எண்ணங்களின் ஓட்டம் அப்படி. இருளினால் இடம் அறிந்திர வில்லை நாங்கள் நண்பன் வீடு வந்து விட்டது என்றான். 

இங்கே சிறிய கல் இருக்கிறது பார்த்து வாருங்கள் என்றான்! அந்த மின்னணு கக்கிய கடைசி பழுப்பு நிற ஒளியில் எனது மகன் அந்த கல்லை தாண்டி குத்திதான் சட்டன.

நான் டேய் கவனமா போட என்றேன்! வாங்க பா நீங்க மெதுவா  என்று வயோதிகத்தை  நினைவு படுத்தி சென்றான். எனது நண்பணோ சிரித்தான். அன்று இரவு உணவு நண்பன் சர்க்கரை  வீட்டிலேயே உண்டோம்.

மணி எட்டாச்சி இனி இங்கே தங்கி காலையில போகலாம் என்றான் நண்பன். எனது மனமும் அந்த வார்த்தையை எதிர்நோக்கியே இருந்தது. இருந்தும் மனைவிக்கு புது இடம் ஒத்து வராது என்பதனால் நண்பனிடம் இன்னொரு நாள் வருவதாக சொல்லி விட்டு அந்த ரிக்சாவில் ஏறி அமர்ந்தோம். 


மாமா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருவோம் நீங்க மீதி கதையை 
சொல்லணும் என்றான் எனது மகன்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அங்கும் இங்கும் விளையட்டு தனமாக
இருந்தான் இவ்வளவு சுவாரஸ்யமாக கதையை கேட்டிருக்கிறானே என்று!

அனைத்தியையும் உடனே கிரகித்துக் கொள்ளும் பருவ வயது ஆன்மீகத்தில் ஈடு படுவது மிகவும் நல்லது தான். 

என்று அகம் மகிழ்ந்தேன். நண்பன் கண்டிப்பாக வாங்க என்று வழியனுப்பினான். 

வீடு சேர்ந்து  முப்பது நிமிடங்கள் ஆயிற்று இன்னமும் மனம் நண்பனின் ஊரிலேயே உள்ளது. சாதாரண மனிதர்களுக்கே ஆயிரம் சோதனை கொடுக்கும் இறைவனிடமிருந்து யோகிகளும் தப்பிப்பது இல்லை தான். 

என்ன வித்தியாசம் என்றால் மனிதன் சோதனையை அறிவதில்லை யோகி உணர்ந்து கொள்கிறான்... 
 
யோகி வருவார்...
 
 
பேரொளியின் கருணை துகளில் இருந்து 
நான் 
பிரதீஸ்  

  



Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *