கொஞ்சம் வீட்டு ஞாபகத்தில் இருங்க சாமியாரு எங்கேயும் போய்ட மாட்டாரு...
எப்பவும் அவர பத்தியே பேசிட்டு...!!
இப்போம் ஏ கத்துற ?
நான் என்ன வீட்ட கவனிக்கலனு சொல்லுறியா?
வீட்டை கவனிக்க சொல்லல போசுரத கொஞ்சம் காது கொடுத்து கெளுங்கணு தான் சொல்லுறே...
நான் என்ன கேக்கல? நீ சொல்லி...!!
ம்....திரும்பவும் சொல்லுறேன் கேட்டுகோங்க.!!
அத்தை உங்க தம்பி வீட்டுல தான் இருக்காங்க. கிழக்க பானுவோட தங்கச்சி புருஷன் காஷ்மீர் எல்லையில் டுடீல நிக்கும் போது பனி சருக்கில் சிக்கி இறந்துட்டாராம்....
பாடி இன்னும் கிடைக்கலையா அதுக்காக தான் எல்லாரும் அங்க காவல் இருக்காங்க என்றாள் கஸ்தூரி.
அவரு மட்டும் தான் டூடில இருந்தாரா என்று கேட்டேன்?
அவரு மட்டும் எப்படிங்க நிப்பாரு அது என்ன அவரு வீட்டு வேலையா?
கூட நின்னவங்கள்ல இரண்டு பேரு மட்டும் தான் தப்பிச்சிருக்காங்க மீதமுள்ள எட்டு பேரு பனி சருக்கில் மாட்டிருக்காங்க...
அதுல ஆறுபேர் உடல் கிடைச்சிருக்குது. பானு தங்கச்சி புருஷன் பாடியும், அப்புறம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து இன்னொருத்தர் பாடியும் இன்னும் கிடைக்கலையாம்.
இதை தான் அறை மணி நேரத்திற்கு முன்பே கூறினேன் என்று...
சோகம் கலந்த சலிப்போடு கூறிவிட்டு நீங்க ஒங்க தம்பிக்கு போன் போட்டு கேளுங்க என்று நான் சொன்ன வேலையை எனக்கே சாதுர்யமாக கொடுத்து விட்டு கனவுலகில் தனது சமையல் வல்லமையை காட்ட சென்று விட்டாள்...
செய்திகள் எப்படி எப்படி வந்து சேருகின்றன ?
என்னுடன் தான் இவ்வளவு நேரம் இருந்தாள் எப்படி அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறாள் என்பது ஆச்சர்யம் இல்லை ஏனென்றால் செய்திகளை அறியும் அல்லது தெரியப்படுத்தும் வேகத்தில் ஊரில் பெண்களை மிஞ்ச யாரும் உண்டோ ?!!
என் மனம் முழுவதும் இன்னமும் அந்த இளம் வயது யோகியின் அந்த தெய்வீக முகம், உடல், அந்த புன்னகை என நினைக்க நினைக்க உடல் புல்லரித்தது கொண்டிருந்தது.
உண்மையில் அது தான் வியப்பு நண்பன் சக்கரை கூறியது எல்லாம் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சித்தர்களையும் ஞானிகளையும் தேடி தேடி அலையும் மாந்தருக்கு அவர்கள் அறிவுரைகள் ஏற்க்க உடன்பாடில்லை.
ஆனால் பிராத்தனைகள் நடைபெற வேண்டும். தேவைகள் பூர்த்தியாகிட வேண்டும். தனக்கு தேவையான எல்லாம் கிடைத்திட வேண்டும்...
அப்படி நடந்தால் அவர்கள் கொண்டாட படுகிறார்கள்.
இல்லையென்றால் அவருக்கு புத்திசுவாதினம் இல்லாதவர், பிச்சைக்காரன் என ஏதேனும் பட்டம் கட்டிட கூடும்...
உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்பாவர்களும் உண்டு...
ஆனால் அங்கு சென்றால் அசைவம் சாப்பிட கூடாது, மது அருந்த கூடாது!! என்று தனக்கு தானே யாரோ ஒருவரின் கேள்வியை தனக்குள் பதிலாக்கி கொண்டு குழம்பி நிற்கின்றனர்.
எல்லாம் குழப்பம் தானே ! குழம்பிய குட்டையே தெளிகிறது.
தேவைகளை பொறுத்து தன்னை மாற்றிக் கொள்வார்கள்... மனிதர்கள்.
இப்படியாக எண்ணங்கள் ஒரு புறம் என்னை சிறை பிடிக்க, சரி... தம்பி வீடு வரை சென்று வருவோம் என்று எண்ணி நான் அங்கு புறபட்றேன்.
மகனாரும் நன்கு உரங்கிவிட்டான். உரங்கடும் காலை பள்ளி செல்ல வேண்டுமே!!
தெரு நெடுவே அங்கும் இங்குமாக நான்கு மூன்று பேர் கூடிய கூட்டங்களாக நின்று கொண்டு அந்த இராணுவ வீரனின் உடன் அவர்களுக்கு நடந்த அனுபவங்களையும் அவர் செய்த செயல்களையும் ஒருவருக்கு ஒருவர் அசைபோட்டு கொண்டிருந்தனர்...
இன்னொரு புரம் அதறக்கு முன்பாக நடந்த இராணவ வீரர் மரணம், அரசியல் நிலைபாடு, என வரலாற்று விவாதம் தலையோங்கியிருந்தது சாராய கலவையுடன்...
பானுவின் கணவன் பெயர் சேக் அப்துல்லா ஊரில் அனைவரும் அப்துல் என்று கூறுவார்கள் இளம் வயது திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது....
நாம் நட்டு வளர்த்த மரம் நம் கண்முன்னே வீழ்ந்தால் எங்கனம் ஏற்று கொள்ள முடியும்?
ஒரு பெண் குழந்தைக்கு தந்தை அவன். காலம் போடும் கணக்கிற்கு அதன் விடை இப்படியும் இருக்கத்தான் செய்கிறது...!!
யார் வாழ்வும் விதிவிலக்கல்ல...
தம்பி... வீட்டின் முன் வாசல் நிறைந்து காணப்பட்ட கூட்டம் அங்கிருந்து சர சரவென கலைந்தது சிற்றெரும்புகளாக...
தெருக்களில் தம்பி வீட்டில் மட்டுமே அந்த தொலைக்காட்சி இருந்தது என்பதனால் அனைவரும் அங்கு கூடி நின்று செய்தியை பார்த்து சென்றிருந்தனர்...
இரவு பத்து மணி செய்தி அது அதன் பின் காலை ஆறு மணி செய்தி வரை காத்திருக்க வேண்டும்.
இடை இடையே ஊரிலிருந்து இராணுவத்தில் அதே எல்லையில் பணிபுரியும் வேலன் இருந்தது நல்லதாக இருந்து.
அவனுடைய தொலைபேசி அழைப்பும் நிலவரங்களை விளக்கிக் கொண்டு இருந்தது.
நான் அந்த கூட்டத்தில் ஊடே புகுந்து அம்மாவை தேடினேன்...
அம்மா.....!!
நான் தம்பியிடம் அம்மா எங்கே என்று கேட்க? அம்மா தூங்கிட்டானே என்றான். !!
நான் இப்போம் தூங்கியிருக்க மாட்டாளே என்று எனக்குள் முன் முனுத்துக் கொண்டேன்..
அப்படியே தொடர்ந்தேன்...
சரி டா என்ன சொன்னாங்க நியூஸ் ல தெரிந்ததா? என்று கேட்டேன் ?
இன்னும் இல்லை அண்ணா...!!
Comments
Post a Comment
நன்றி