Posts

Showing posts from September, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

திடீரென நிச்சயமான திருமணம்!!

Image
திடீரென நிச்சயமான திருமணம்!! ஒரு பவுன் தங்கமாவது தாலிக்கு போட வேண்டும் என்பது உத்தேசம்!! ஏற்கனவே வாங்கிய வட்டி கடன்கள்  -எராளாம்!! யாரை தேட!?  கொடுக்க நினைக்கும் மனங்களுக்கு கையில் இருப்பு இல்லை!! இருப்பு தான் இல்லை கொஞ்சம் கூட  மாட ஒத்தாசை பண்ணலாமுனு  சில மனசு!! இருப்பு இருக்கும் கைகளுக்கு தகுதி தட்டுபாடானது... நடுபகல் பொழுது என் கண்களை மட்டும் -காரிருள் சூழ்ந்திருந்தது. சில சொந்தங்கள் எல்லாம் என் ஏற்பாடு என்று ஆகாய கங்கையை உச்சந்தலையில் பாய்ச்சினர் - குளிர்ச்சி  அடங்கும் முன்பு பணத்தை மட்டும் நீ  கொடுத்து விடு என்று குளிருக்கு  இதமற்ற நெருப்பு மூட்டி சென்றனர்!! செலவுகளுக்கு வர்ணமளித்து கொடுத்தனர் அதன் கனம் கூட!! எல்லாம் கடமைக்கு செய்வதாயின்  சொந்தங்கள் எதற்கு?  கடமையை முடிக்க கடைசியில்  வாய்க்கரிசி போட்டு சென்றால்  போதுமல்லவா!! வாழ உதாவாதா சொந்தங்கள்  ஓலை பாயில் போகும் போது வந்து  எதற்கு!? நாம் உறவுகள் என்று நினைக்கும் பலரும் நம்மை அவ்வாறு நினைக்கவில்லை என்பது ஒரு சில சூழ்நிலைகள் தானே தெரிய - படுத்துகிறது இருந்தும் உதவவில்லை, உதவ மனமும்  -இல்லை சில சொந்தங்களுக்கு!?? காரணங

ஏன் இந்த பூமி ?

Image
ஏன் இந்த பிரபஞ்சம் ? ஏன் இந்த பூமி ? ஏன் இந்த வாழ்க்கை? கருத்துகள்... கற்பனைகள்....  ஆராய்ச்சிகள்....   ஆயிரம் இருந்தும் மனம் ஏனோ அனைத்தையும் நிராகரித்து புதிதான புதிரொன்றை எதிர்நோக்கியே நகர்கிறது... கதைகளில் கிடைக்கும் சுவாரஸ்யத்தை விட அனுபவங்கள் கொட்டும் சுவாரஸ்யம் கற்பனைகளின் சுவாரஸ்வரத்தையும் ஒரு முட்டு முட்டிவிகிறது... புத்தக கண்காட்சியில் மனதை கவரும் தலைப்புகள் பல அனைத்தையுமே வாங்க வேண்டும் என்ற ஆவலில் சட்டென இருளை தூவும் நினைவு அது சட்டை பை காற்றில் பறக்கும் வேகம்... அனைத்து தலைப்புகளுக்கும் மனம் ஒரு மாபெரும் கட்டுரை எழுதி கழைப்பாருகிறது... புரிதல் இல்லாத பதில்கள் !! போட்டி இல்லாத விளையாட்டு !! பாரபட்சம் காட்டும் கருணை !! நம்பிக்கையில்லாத உறவுகள் !! வயோதிக வாழ்கை !! என எல்லாமே வீண் தான்.! யான் பேரொளியிலிருந்து -பிரதீஸ்

பஞ்சமாம் பாரில் (Famine)!!

Image
  கடும் பஞ்சம் ஒன்று பாராட்ட - போகிறதாம் !! அதன் எச்சம் இன்று பொருளாதார -மந்த நிலை என்பதவாம்..!! இயற்கையின் பேரிடரும் அதற்கு ஒரு -கூறாம் பிணகூட்டங்களை வேட்டையாட பருந்து -கூட்டங்கள் தயாரானவாம்..!! மனித மாமிசமே, ‌தஞ்சமாம் கொடும் -பசிக்கு ...! காக்கை கூட்டங்களே அதற்க்கு -சான்றாம்!! மதிப்புயர்ந்த காகிதங்களும் -மண்ணில் உறமாச்சி...!! கறையானின் கோபுரமாச்சி... பொழுதிரண்டு இன்று பாதியாச்சி -மதி கொண்டோர் சாம்பல் காற்றில் கலவையாச்சி..!! மூச்சற்று போயாச்சி... - யான் பேரொளியிலிருந்து. - பிரதீஸ்

ஒரு யோகியின் பிறப்பு ( பகுதி நான்கு ) Birth of Yogi ( Part 4 )

Image
ஏதோ கூடு விட்டு கூடு பாய்ந்த உணர்வு திடீரென நினைவு திரும்பியது வீட்டின் திண்ணையில் நன்கு உரங்கிவிட்டேன் நேரம் பத்து கடந்திருந்தது. பூச்சிகளின் இரைச்சல் இதமானது மனதிற்க்கு, காரிருள் சூழ்ந்திருக்க மின்மினி பூச்சிகள் ஊரை அலங்கரித்து இருந்தது... கஸ்தூரி அம்மா எங்க போனா ? இவ்வளவு நேரம் ஆகியும் காணலயே!! தம்பிக்கு போன் பண்ணி கேளு என்றேன் ? நான் தான் சொன்னேனே என்றாள்  அவள்!!  எனக்கு விளங்கவில்லை!!  எப்போது சொன்னாள் என்ற அககேள்வியுடன்! என்ன சொன்ன என்று கேட்டது தான் தாமதம்?  இடியுடன் கூடிய மழையென சட்டன பொழிந்தாள்... கொஞ்சம் வீட்டு ஞாபகத்தில் இருங்க சாமியாரு எங்கேயும் போய்ட மாட்டாரு... எப்பவும் அவர பத்தியே பேசிட்டு...!! இப்போம் ஏ கத்துற ?  நான் என்ன வீட்ட கவனிக்கலனு சொல்லுறியா? வீட்டை கவனிக்க சொல்லல போசுரத கொஞ்சம் காது கொடுத்து கெளுங்கணு தான் சொல்லுறே... நான் என்ன கேக்கல? நீ சொல்லி...!!  ம்....திரும்பவும் சொல்லுறேன் கேட்டுகோங்க.!! அத்தை உங்க தம்பி வீட்டுல தான் இருக்காங்க. கிழக்க பானுவோட தங்கச்சி புருஷன் காஷ்மீர் எல்லையில் டுடீல நிக்கும் போது பனி சருக்கில் சிக்கி இறந்துட்டாராம்.... பாட

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *