Posts

Showing posts from September, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

நீரின்றி அமையாது உலகு (Water falls)

Image
நதிகளின் ஓட்டம் எங்கோ துவங்கி எங்கங்கோ சென்று மாபெரும் ஆழி பெருங்கடலில் வந்து சேர்கிறது இடையில் அதன் பயணம் கால சூழ்நிலையாலோ அல்லது பல சில எதிர்ப்புகளினாலும் அதன் பாதையை அதுவே மாற்றிக் கொண்டு எங்கும் எதனுடனும் விருப்பு வெறுப்பு அற்று வந்த பாதையில் ஆயிரம் நலம் செய்து ஓராயிரம் உயிர் சுமந்து எண்ணிலடங்கா சனம் வாழ வாழ்வு தந்து எதன் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்ளாது ஓடி கொண்டே இருந்தது எத்தனை தடைகளின் போதும் அதன் பயணத்தை அது நிறுத்தியது இல்லை நிறுத்த நினைத்ததும் இல்லை சில உயிர் பலிகளும் ஏந்தியிருக்கும் அபாயம் உண்டு அதை பொருட்டு கவலையும் இல்லை எல்லாம் அடங்கும் கோடான கோடி ஜனன சாம்ராஜ்யம் செய்யும் வேளையில் சில மரண சாம்ராஜ்யங்களுக்கான பாதையும் ஊடே நிலைக் கொள்ளுகிறது மண்ணின் திறம் எத்தனையானாலும் அதன் திடம் அவிழ்க்கும் மாபெரும் சூட்சுமம் அறிந்தது. கடும் பாறைகளும் அதற்க்கு சான்று கரையோர கோவில்களில் இறைவன் கால்நனைத்து சுமந்து வந்த உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வரும் அழகும் அதற்க்கு இசைந்தார்ப் போல காற்றும் அதன் கரம் தாழ்த்தி உதவும் காதலும் இயற்கையின் கொடை நதிக்கு திருவிழா என்பது எத்தனை பழமை வ

(ஒரு யோகியின் பிறப்பு பகுதி ஐந்து) Birth of Yogi (Part 5)

Image
உன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒன்று முப்பத்தாறு வருடங்களாக காவலாக நிற்க அதன் காலம் முடிந்து அது பிறவிக்கு செல்ல ஆயத்தமாகிறது அதன் தேவைகளை செவ்வனே செய்து வை அது உன் தலைமுறையை காக்கும், உன் மூத்த கணக்கு நிலையில்லாத புத்திக் கொண்டு திரியுது என்ற கவலை வேண்டாம் அவன் தான் உன்னை காக்கும் ரட்சகன் நாளை காலை நான் வரும் போது அரிசி பருப்பு சிறிது காய்ந்த வத்தல் எடுத்துக் கொடு அதன் பின் உன் குல தெய்வ பூஜையை செய் தடை பட்டு கிடக்கும் மனை வேலைகள் விலகும் இப்படி சொன்னால் ரவி எனக்கு பயமாவே இருந்தது காலைல அவன் வருவான்னு பார்த்த வரவில்லை அவன் எங்க தங்கியிருக்கான்னு கேட்டு சொல்லுடா காலைல ஒரு எட்டு பாத்துட்டு வருவோம் என்று பட படத்தப் படி கூறினாள் அம்மா அம்மா அவன் சாம்பார் வைக்க கேட்டுருப்பான் வேறு வீட்டுல இதை விட அதிகமாக கிடைச்சிருக்கும் அதான் வரவில்லை விடுமா வந்தா பாத்துக்கலாம் என்றேன் விளையாடாத டா ரவி எல்லாத்துலயும் அவன் எப்படி வீட்டு வேலை தடை பட்டிருக்கத சரியா சொன்னான் என்றாள் அம்மா, வீடு கட்டுனா எல்லாரும் கடன் படுவது இயல்பு தானமா அதை சொல்லுறதுல என்ன இருக்கு என்றேன் ! சரி உன்னோட கடைசி தம்பிய பத்தி எப்படி

கற்பனைகளின் தாக்கம்

Image
நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *