Posts

Showing posts from October, 2024

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

விஜயின் அரசியல் பயணம்

Image
 யார் யாரோ என்னவெல்லாமோ பேசினார்கள் பல ஆயிரம் விமர்சங்கள் இது விஜய் க்கு மட்டும் தான என்றால் இல்லை. ஆழும் கட்சி, ஆழ்ந்த கட்சிகள் என அனைவரும் சுமந்த ஒன்று தான். கட்சிகளுக்கு மட்டும் தானா என்றால் இல்லை தனிபட்ட மனிதனுக்கும் உண்டு. சரி இப்போது அரசியல் களம் புகுவோம். எப்படி மக்கள் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கிறார்கள் ? ஏதோ ஒரு காரணம் மக்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம், உதாரணமாக நான் ஒரு படிப் பரிவில்லாதவன் எனும் போது நான் பார்க்கும் படங்கள் என்னுடைய தனிப்பட்ட குணங்களுடனும் அல்லது வாழ்வியல் உடனும் இணையும் போது எனக்கு அது பிடித்துப் போகிறது. அந்த கதாபாத்திரத்தை நான் என்னுடைய ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள நேரலாம் எல்லாம் உணர்வு வயமாகும் போது. இப்போது அவர் அரசியலுக்கு வருகிறார் எனும் போது அவர் என்ன செய்வார் என்ற அறிவு தேவைபடுவதில்லை. எனக்கு பிடித்த ஒருவர் வெற்றிப் பெற வேண்டுமென்பது என்னுடைய விருப்பமாகிப் போனது. நான் சொன்னால் கேட்போர் உண்டெனில் நானும் அவருக்காக அரசியலுக்கு செல்லாமலேயே கட்சிக்கு அல்லது ஓட்டுக்கு ஆள் சேர்க்க கூடும். படித்த ஒருவர் நன்கு அரசியல் அறிந்தவர் என்னிடம்

மன நோய் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது.!

Image
நெல்லையில் இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர்கள் இல்லை, என்ற அளவு மிகவும் பிரபலமான அந்த கடையில் தயாரிக்கப் படும் அல்வாவில் உள்ள ருசிக்கு கொஞ்சமும் மாறாத அளவு சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவும் இருக்கிறது. ஆனால் மக்கள் அதிகம் விரும்புவது இருட்டுக் கடை அல்வா என்ற ஒரு பெயரை தான்.  சாந்தி ஸ்வீட்ஸ் கூட முறையாக தன்னுடைய கடையின் பெயரை பதிவு செய்யாத காரணத்தால் இன்று நெல்லை புதிய பழைய பேருந்து நிலையங்களில் அனைத்து கடைகளின் முன்பும் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயர் பலகையும் அதனுடன் அவர்கள் விற்கும் அல்வாவில் கொடுக்கப் படும் பாலித்தீன் பையிலும் சாந்தி ஸ்வீட்ஸ் என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கும். அனைத்து கடைகளிலும் இதுவே  சில கடைகளில் அவர்களே தயாரிப்பது உண்டு சுட சுட அல்வா என்ற வியாபாரம் தான் சூடு பிடிக்கவும் செய்கிறது. இப்போது என்ன அல்வாவை உண்டால் என்ன கிட்ட தட்ட அனைத்தும் ஒரே மாதியான சுவைதான். விலையும் ஒன்று தான் ஆனால் மக்கள் வேண்டும் என்று நினைப்பதும், கொண்டாடுவதும் இருட்டுக் கடை அல்வாவை தான். ஏனென்றால் அவ்வளவு பிரபலம் மக்கள் மத்தியில் இதில் கொஞ்சம் விவரமானவர்கள் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் கடை நெல்லை

இறையருள் பெற அறிவு தேவையில்லை அன்பிருந்தால் போதும்

Image
ஓர் ஆன்மீகவாதி என்று என்னை நான் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த காலம் முதல் இன்று எனக்கு ஆன்மிகமும் தெரியாது வாழ்வியலும் தெரியாது ஏதோ மனம் போன போக்கிலேயே விதி என்று ஏற்றுக் கொண்டு காலத்தால் கடத்திச் செல்லப்படுபவன் என்ற இன்றைய நிலையிலும் பல அற்புதங்களை என்னைச் சுற்றியும் என்னிலும் இறைவன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான் என்னைச் சுற்றி இருக்கும் அற்புதமான மனிதர்களும் அதற்கு ஆதரவுக் கரம் கொடுக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையிலும் இவையெல்லாம் எனக்கு வரம் தான். ஓர் ஆன்மீக அனுபவம் என்றால் என்ன? பொதுவாகச் சாதாரண நிலையில் நமது வாழ்வியலில் நடக்கும் விடயங்கள் நமக்கு ஏதேனும் அறிவினைப் புகட்டினால் அது வாழ்வியல் அனுபவம் எனலாம். ஆன்மிகம் என்பதை (ஆன்மா + அகம்) என்பார்கள். அதாவது மனித உடலின் உள் அவனது உயிரோட்டமாக இருக்கும் ஆன்மாவை அறிதல் (புறம் உடலுக்கு வெளியே, அகம் உடலுக்குள்) அகத்தில் இருக்கும் ஆன்மாவை அறிய அல்லது உணர முற்படுவது ஆன்மீகம் அல்லது ஆன்மீகச் சாதனை எனக் கூறுவார்கள். இத்தகைய நோக்கத்தை மனதில் கொண்டு பயணிக்கும் போது ஏற்படும் அனுபவங்கள் உணர்வுப் ப

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *