விஜயின் அரசியல் பயணம்
- Get link
- X
- Other Apps
யார் யாரோ என்னவெல்லாமோ பேசினார்கள் பல ஆயிரம் விமர்சங்கள் இது விஜய் க்கு மட்டும் தான என்றால் இல்லை. ஆழும் கட்சி, ஆழ்ந்த கட்சிகள் என அனைவரும் சுமந்த ஒன்று தான். கட்சிகளுக்கு மட்டும் தானா என்றால் இல்லை தனிபட்ட மனிதனுக்கும் உண்டு. சரி இப்போது அரசியல் களம் புகுவோம்.
எப்படி மக்கள் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கிறார்கள் ? ஏதோ ஒரு காரணம் மக்களுக்கு பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம், உதாரணமாக நான் ஒரு படிப் பரிவில்லாதவன் எனும் போது நான் பார்க்கும் படங்கள் என்னுடைய தனிப்பட்ட குணங்களுடனும் அல்லது வாழ்வியல் உடனும் இணையும் போது எனக்கு அது பிடித்துப் போகிறது. அந்த கதாபாத்திரத்தை நான் என்னுடைய ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள நேரலாம் எல்லாம் உணர்வு வயமாகும் போது.
இப்போது அவர் அரசியலுக்கு வருகிறார் எனும் போது அவர் என்ன செய்வார் என்ற அறிவு தேவைபடுவதில்லை. எனக்கு பிடித்த ஒருவர் வெற்றிப் பெற வேண்டுமென்பது என்னுடைய விருப்பமாகிப் போனது. நான் சொன்னால் கேட்போர் உண்டெனில் நானும் அவருக்காக அரசியலுக்கு செல்லாமலேயே கட்சிக்கு அல்லது ஓட்டுக்கு ஆள் சேர்க்க கூடும். படித்த ஒருவர் நன்கு அரசியல் அறிந்தவர் என்னிடம் எத்தனை உயர்ந்த அரசியல் தெளிவு பற்றி விளக்கம் கூறினாலும் என்னால் அவரை விட்டுக் கொடுக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் அவர் என் உறவுகளை விட நான் நேசிக்கும் மனிதராக மாறியிருப்பார் சந்திக்கமாலயே.
இப்படியே எனக்கு உருவாகிய விருப்பம் போல இன்னொருவருக்கு வெறுப்பு வந்திருக்கலாம் ! இது இவருக்குள்ள வேற்றுமை இப்படியே பல ஆயிரம் மக்களில் இருவராக பிரியும் போது குழுவாகிறது. இப்படி சேரும் கூட்டம் தான் அனைவருக்கும் இன்னமும் சிலர் ஏதோ மாற்றம் வேண்டும் அல்லது ஒரு சுவாரஸ்யம் வேண்டுமென்ற நிலையிலும் புதிதாக ஒருவரை ஆதரிக்கலாம்.
கொள்கைகள் எல்லாம் யாரும் கேட்பது இல்லை தேவை என்னவோ மாற்றம் மட்டுமே. மக்கள் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் விரும்பிய ஒருவரை கொண்டாடுகிறார்கள். இது மக்கள் இரத்தத்தில் ஊறி விட்டது.
அப்துல் கலாம் ஐயாவை பிடிக்காதவர்கள் உண்டு என்று கூறுவது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை ஏன் காமராஜரை பிடிக்கத்வர்கள் உண்டு. இப்படி அனைவரையும் அனைவரும் விரும்புவதும் இல்லை, வெறுப்பதும் இல்லை.
இந்த நிலைப்பாடு தான் மக்களுக்கு அறிமுகமான பெரிய பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் செய்வதற்கான முதன்மை காரணம். ஹார்பிக் விளம்பரம் செய்த பிரபாஸ் வாய்ப்பு இழந்த போதும் பலர் மனதில் நீங்காமல் இருந்தார் அதே வேளையில் ஹார்பிக் விளம்பரமும், வியாபாரமும் படு ஜோராக நடந்தது.
இவ்வளவு தான் மக்கள் "மக்களாகிய நாங்கள் அனைவரையும் எழிதில் நம்பிவிடுவோம்." அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற ஆழ்ந்த தெளிவிர்க்குள் செல்ல நேரமும் இல்லை தேவையுமில்லை.
தொலைக்காட்சி "நீயா நானா" என்ற நிகழ்ச்சியில் எப்போதும் இரு தரப்பு வாதங்கள் உண்டு வாதிடுபவர்களும் உண்டு என்றாலும் சில நிகழ்சிகளில் இடைவேளை க்கு பிறகு இவ்வளவு நேரம் நடந்த விவாதத்தில் எதிர் தரப்பு பக்கம் நியாம் உண்டு நான் அங்கு சென்று அமர்ந்து கொள்கிறேன் என்று சென்றவர்கள் பலர் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஒருவர் மனம் மாற சில வினாடிகள் போதும்
தேர்த்தல் நேரத்தில் கடைசி நாட்களில் தங்கள் சாமர்த்தியமான பேச்சால் ஆட்சி பிடித்தவர்கள் ஏராளம்.
விஜய் நேற்று பேசியது ஓர் அனல் பேச்சு என்று யாராலும் மறுக்க முடியாது! விஜய் நேரடியாக ஆழும் கட்சியை எதிர்ப்பார் என்று யாரும் நினைக்கவில்லை இனி வரும் காலங்கள் இரு தரப்பு உறுப்பினர்களும் கார சாரமான பல வாக்கு வாதங்களில் ஈடுபடலாம். அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களுக்கா இவர்கள் அடித்துக் கொள்வார்கள். இந்த இடத்தில் பல பேர் மன மாற்றம் அடையலாம். உறுப்பினர்கள் இடம் பெயரலாம்.
பல பெரிய பொறுப்புகள் கொடுத்து பணமும் கொடுத்து தன் கட்சிக்கு இழுக்கலாம் இப்படி இனி வரும் தேர்தல் நாள் வரை அரசியல் பல நிகழ்வுகளை நடத்தும் என்றாலும் மக்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.
விஜய் பேசிய உணர்வு பூர்வமான பேச்சுக்கள் அனைவர் மனதில் புல்லரிக்க செய்து விட்டன. சினிமா அனைவர் வாழ்விலும் கலந்தது என்று கூறியவர் அதில் ஒழுக்கமாக கடைசி நான்கைந்து படங்களில் நடித்திருக்கலாம் என்பது அனைவர் எண்ணமுமாக இருக்கலாம்.
அடுத்த அடுத்த அரசியல் களம் காண பலரும் ஆர்வமாக இருப்பார்கள். செய்தி சேனல்கள் விஜகாந்திர்க்கு செய்தது போல முயற்சிக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.
"இருக்க வீடு, பசிக்கு சோறு, அதுக்கு ஒரு வேலை" இவ்வளவும் கொடுக்காத அரசு இருந்தா என்ன இல்லன்னைன்னா என்ன செமையான கேள்வி"
"மீன் பிடிக்க தெரிந்தவன் பிடிக்கட்டும் தெரியாதவனுக்கு நாம பிடிச்சிக் கொடுப்போம்" என்ற நிலைப்பாடு பாராட்டுக் குரியது.
வாழ்த்துகள்.
- Get link
- X
- Other Apps
Comments
Movieku block money vankuvaru, import car ku tax katta mataru, pondati pasankala vittu nadigai kuda iruparu. Ana makkal mattum nermaia irundu ivara CM akanum. Nee first olunka irunda vennai
ReplyDeleteதனிப்பட்ட வாழ்கையில உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காட்டியது ரொம்ப குறைவான அரசியல் வாதிகள் தான்! நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதேன்னு சொல்ல காரணமும் அதுதான். பல துர்திஸ்ட்ட சம்பவங்கள் தான் நம்மை வேறு பாதை நோக்கி பயணிக்கச் செய்யும். இனி வரும் காலங்கள் எப்படியென்று பார்க்கலாம்
Delete