Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

மன நோய் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது.!

நெல்லையில் இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர்கள் இல்லை, என்ற அளவு மிகவும் பிரபலமான அந்த கடையில் தயாரிக்கப் படும் அல்வாவில் உள்ள ருசிக்கு கொஞ்சமும் மாறாத அளவு சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவும் இருக்கிறது. ஆனால் மக்கள் அதிகம் விரும்புவது இருட்டுக் கடை அல்வா என்ற ஒரு பெயரை தான். 

சாந்தி ஸ்வீட்ஸ் கூட முறையாக தன்னுடைய கடையின் பெயரை பதிவு செய்யாத காரணத்தால் இன்று நெல்லை புதிய பழைய பேருந்து நிலையங்களில் அனைத்து கடைகளின் முன்பும் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயர் பலகையும் அதனுடன் அவர்கள் விற்கும் அல்வாவில் கொடுக்கப் படும் பாலித்தீன் பையிலும் சாந்தி ஸ்வீட்ஸ் என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கும். அனைத்து கடைகளிலும் இதுவே 

சில கடைகளில் அவர்களே தயாரிப்பது உண்டு சுட சுட அல்வா என்ற வியாபாரம் தான் சூடு பிடிக்கவும் செய்கிறது. இப்போது என்ன அல்வாவை உண்டால் என்ன கிட்ட தட்ட அனைத்தும் ஒரே மாதியான சுவைதான். விலையும் ஒன்று தான் ஆனால் மக்கள் வேண்டும் என்று நினைப்பதும், கொண்டாடுவதும் இருட்டுக் கடை அல்வாவை தான்.

ஏனென்றால் அவ்வளவு பிரபலம் மக்கள் மத்தியில் இதில் கொஞ்சம் விவரமானவர்கள் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் கடை நெல்லை பழைய பேருந்து நிலையத்தருகில் உள்ளது அங்கு சென்று வாங்கிக் கொள்வார்கள். புதிய பேருந்து நிலையம் செல்பவர்கள் அங்கு ஏதோ ஒரு கடையில் வாங்கிக் கொண்டு எல்லாம் ஒரே அல்வா தான் என்று தங்களை தாமே தேற்றிக் கொள்வது தான் வளக்கம்.

வேறு என்ன செய்ய அவசர பயணங்களில் வீட்டிற்கு அல்லது விருந்தினருக்கு ஏதாவது வாங்கி கொண்டு செல்ல வேண்டும். தேடி அலைந்து இருட்டுக் கடை அல்வாவிர்க்கோ அல்லது ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்டுக்கோ முக்கியத்துவம் இல்லை அங்கு  அவ்வளவு தான் அந்த நேரங்களில் நம் மனதை நாமே கட்டுபாடு செய்து கொள்வதில்லையா!

நீங்கள் புதிய பேருந்து நிலையத்தில் அல்வா வாங்க உங்கள் நண்பர் அல்லது மனைவி யாரோ உங்களிடம் இது ஒரிஜினல் கிடையாதே என்று கூறினால் உங்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் ஒவ்வொருவரும் ஓர் விதம் என்பது போல சிலர் "அது எல்லாம் ஒன்னுமில்லடே, எல்லாம் ஒரே டேஸ்ட்டு தான்" என்பார்கள். இன்னும் சிலர் "அது என்னவோ உள்ளது தான் ஆனால் இப்போ நேரம் போதாது டேய் அங்க வர போய் வாங்க கடக்கத வாங்கிட்டு போவோம்" கடிகாரர் டேஸ்ட்டு பாக்க கொஞ்சம் கொடுக்க "நல்லா தாண்டே இருக்கு" என்று வாங்கி செல்கிறார்கள்.

மற்றையோர் சிலர் சரி அங்க போய் வாங்குவோம் என்று பழைய பேருந்து நிலையம் செல்வதுண்டு. காரில் செல்பவர்கள் நிச்சயமாக இருட்டுக் கடை அல்வா நோக்கி செல்வார்கள் மாலை பொழுது மட்டுமே கடை இருக்கும் என்பதால் சாந்தி ஸ்வீட் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறது அன்று அவர்களுக்கு அது தான் ஸ்பெசல் ஆகிறது இப்படி மனித மனம் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதனை புரிந்துக் கொண்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளும் வல்லமை கிடைக்கும்.

ஆம் அனைவரும் சூழ்நிலைகளைப் பொறுத்து தான் முடிவுகளை எடுக்கிறார்கள் இதில் பிடிவாதம் என்பது மன நோய், கோபம் என்பது மன நோய் ஒரு உதாரணத்திற்காக கூறப்பட்டது தான் அல்வா கதை ஆனால் இது போல பல நிகழ்வுகள் வாழ்வில் நடக்கும். மனதில் ஓட்டத்தை கட்டுப் படுத்த முடியாது. அப்படி இப்படியென்று பல கதைகள் இருந்தாலும், நாம் அனைவரும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு தான் வாழ்கிறோம் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருந்து விட முடியாது.

ஒரு கார் அல்லது செருப்பு வாங்கும் இடத்தில் கூட மனம் விரும்பிய ஒன்றை வாங்க பணம் தடையாகும் போது மனதை மாற்றிக் கொண்டு, இருக்கும் பணத்திற்கு என்ன கிடைக்குமோ அதனையே வாங்கிக் கொண்டு வருகிறோம். 

மனம் கொள்ளும் பரவசத்திற்கு எல்லாம் ஆடிப் பாடிட முடியாது. இந்த கட்டுப் பாடுகளை நாம் அதீத உணர்ச்சிவப் படும் போது இழக்கிறோம். 

கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து பார்த்தாலே நம்முடைய முக்கால் வாசி குழப்பங்களும், பிரச்சனைகளும் தீர்ந்து விடும் நேரம் இல்லை, நேரம் இல்லையென்று முழு நேரங்களையும் நாம் வீணாக கழுத்துக் கொண்டிருக்கிறோம்.

நிதானமான சுவாசம் நிம்மதியை தரும் உங்கள் பதற்றங்களை குறைக்கும். உங்கள் உள் அன்பு அதிகமாகும் போது ஆசைகள் பெருமளவில் குறைந்து விடும். 

சுவாசம் உள்ளவரை நேசிப்போம்...😊

 









Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...