கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

இறையருள் பெற அறிவு தேவையில்லை அன்பிருந்தால் போதும்

ஓர் ஆன்மீகவாதி என்று என்னை நான் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த காலம் முதல் இன்று எனக்கு ஆன்மிகமும் தெரியாது வாழ்வியலும் தெரியாது ஏதோ மனம் போன போக்கிலேயே விதி என்று ஏற்றுக் கொண்டு காலத்தால் கடத்திச் செல்லப்படுபவன் என்ற இன்றைய நிலையிலும் பல அற்புதங்களை என்னைச் சுற்றியும் என்னிலும் இறைவன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான் என்னைச் சுற்றி இருக்கும் அற்புதமான மனிதர்களும் அதற்கு ஆதரவுக் கரம் கொடுக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையிலும் இவையெல்லாம் எனக்கு வரம் தான்.

ஓர் ஆன்மீக அனுபவம் என்றால் என்ன? பொதுவாகச் சாதாரண நிலையில் நமது வாழ்வியலில் நடக்கும் விடயங்கள் நமக்கு ஏதேனும் அறிவினைப் புகட்டினால் அது வாழ்வியல் அனுபவம் எனலாம். ஆன்மிகம் என்பதை (ஆன்மா + அகம்) என்பார்கள். அதாவது மனித உடலின் உள் அவனது உயிரோட்டமாக இருக்கும் ஆன்மாவை அறிதல் (புறம் உடலுக்கு வெளியே, அகம் உடலுக்குள்) அகத்தில் இருக்கும் ஆன்மாவை அறிய அல்லது உணர முற்படுவது ஆன்மீகம் அல்லது ஆன்மீகச் சாதனை எனக் கூறுவார்கள்.

இத்தகைய நோக்கத்தை மனதில் கொண்டு பயணிக்கும் போது ஏற்படும் அனுபவங்கள் உணர்வுப் பூர்வமாகும் போது அது ஆன்மீக அனுபவம் என்கிறார்கள். இப்படி எனக்கு நடந்த அனுபவங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றை மட்டுமே இப்போது பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

அலுவலகத்தில் அன்று மதிய உணவு முடித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். மனதில் ஒருவித ஆழ்ந்த அமைதி. தலையில் பாரம் போல் ஓர் உணர்வு. மூச்சின் வேகம் மிதமாக ஆழமாகச் செல்வதை உணர முடிகிறது. வேலையிலிருந்து கிளம்பி விடலாம். எங்காவது கடல் அல்லது மலைகளுக்குச் சென்று வரலாம் என்று தோன்றுகிறது. எப்படிக் கூறி அனுமதி வாங்குவது என்ற எண்ணம். அலுவலக மேலாளர் ஓர் அண்ணன் ஸ்தானம் என்பதனால் அவரிடம் நேரடியாக “கன்னியாகுமரி செல்வோமா?” என்று கேட்டேன். அவர் “எப்போது?” என்று கேட்டார். நான் “இப்போது” என்று கூறினேன். அவர் “ஐயோ, எனக்கு இப்பொழுது ஓர் இணைய வலி குழு உரையாடல் உள்ளது” என்றார். நானும் “சரி” என்று என்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

என்னால் இயல்பாக அமர முடியவில்லை. மனம் அமைதியாகிக் கொண்டே இருக்கிறது. தலை உச்சியில் ஓர் அழுத்தம் தொடர்ந்து இருக்கிறது. எனக்குப் பேசத் தோன்றவில்லை. அமைதியாக எங்காவது போய் அமர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இதை நான் யாரிடம் கூறமுடியும்? எப்படி விளக்க முடியும் என்ற எண்ணம் என்னில் எழ, நான் மடிக்கணினி முன் தலையைத் தாழ்த்தி கண்களை மூடி அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து மேலாளர் ஏதோ கூற, என்னால் என்ன என்று கேட்கக் கூட தோன்றவில்லை. இருந்தும் என் அகவுணர்வை மீறி நான் அவருடைய கேள்விக்குப் பதிலளித்தேன்.

நான் நடிப்பது போல் தோன்றியிருக்கலாம்! நான் நடிக்கவில்லை என்று நான் எப்படி நிரூபிக்க முடியும்? எந்த உணர்வை நான் அவரிடம் உணர்த்த முடியும்? சரி, நான் ஏன் அவரிடம் நிரூபிக்க வேண்டும்? எதற்காக விளக்கம் கூற வேண்டும் என்ற பல கேள்விகள் ஒரு புறம் மனதில் இலேசாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எனக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையெனில் இறையின் அழைப்பு எனில் அனைத்தும் அதுவாக நடக்கட்டும். நான் யாரிடம் அனுமதி கேட்க முடியாது என்று எனக்குள் நான் திட்டவட்டமாக முடிவு செய்துக் கொண்டேன்.

எப்படியாயினும் என்னால் இயல்பு நிலைக்கு மாற முடியவில்லை. தாமதமாக, தாமதமாக அக உணர்வு ஆழ்ந்து சென்று கொண்டே இருந்தது. மனதில் கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள பால் குளம் என்னும் ஊரில் உள்ள சித்தர் ஒருவரின் நினைவு மேலோங்குகிறது. அங்கு அவர் அழைப்பது போல் இருந்தது. ஏன் எனக்கு இந்த பிரமை ஏற்படுகிறது என்று அமைதியாக இருக்க முயன்றும் மனம் வேகம் எடுத்தது. என்ன தோன்றியதோ அந்த நொடி மேலாளரிடம் அனுமதி கேட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டேன். சித்தரை நோக்கி காவல் கிணறு நால்வழி சாலையில் பயணம் துவங்கியது. பாதை சரியாக நினைவில் இல்லை. இணையத்தில் தேட முயற்சிக்க இணைய இணைப்பு நாள் முடிவுற்று இருந்தது. அப்போது தான் தெரிகிறது, சரி யாரிடம் அதுவாவது கேட்டு செல்லலாம் என்று மெதுவான வேகத்தில் மழை நீரால் குளிர்விக்கப்பட்டிருந்த அந்தத் தார்ச் சாலையில் மழை நீர் சாரல் வாகன சக்கரத்தில் சிதற சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் கையை உயர்த்தி பயண உதவி கோரினான்.

மழை என்பதனால் மெதுவாக அழுத்தம் கொடுக்க உந்துருளி அந்தச் சிறுவனைக் கடந்து இரண்டு மூன்று அடி தொலைவில் நின்றது. அவன் ஓடி வந்து “அண்ணா, அஞ்சு கிராமம் போவீர்களா?” என்றான். அவனிடம் நான் “பால் குளம் எங்கு உள்ளது? அஞ்சு கிராமம் கடந்து உள்ளதா இல்லை அதற்கு முன்பு வருமா?” என்றேன். அவன் எனக்கு “தெரியலையே” என்றான். சரி டா வா என்று அவனை அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். சிறிது தொலைவில் இன்னொரு சிறுவன் கையை உயர்த்தி “அண்ணா” என்று கூப்பிட்டான். அவனையும் கூட்டிச் செல்வோம் என்றான் என் மனதில். என்ன கனமோ மனம் மறுத்துவிட்டது. நான் நிற்காமல் சென்றேன். அதன் பின் மனம் இலேசாகி அவனை ஏற்றிச் செல்வதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று எண்ணித் திரும்பி வந்து அவனைத் தேடினால் காணவில்லை.

மனம் வருந்தியது. என்னுடன் இருந்த சிறுவனிடம் “எங்கடா உன்னுடைய பிரண்டை காணோம்?” என்று கேட்க, அதுதான் “நானும் பாக்கே எங்க போனானென்று தெரியலன்னே” என்றான். சரி இனி என்ன செய்ய? யார் சோதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல ஏதோ இறைவனின் சோதனையில் தோற்றுவிட்ட உணர்வு மேலோங்கியிருந்தது. என்றாலும் அந்த அகவுணர்வு கொஞ்சமும் மாறவில்லை. 

சோகமும் இல்லை பாரமும் இல்லை என்னமோ நடக்கிறது நடக்கட்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு செல்ல அஞ்சு கிராமம் ஊர் செல்லும் நான்கு வழி சந்திப்பு வர அங்கு ஒருவரிடம் பால் குளம் எப்படி போகனும்னே என்று கேட்டேன் தம்பி இப்படியே போ இங்கேயிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பாலம் வேலை நடக்கும் அதுல லெப்ட்ல போ பால் குளம் தான் வரும் என்றார் சரியென்று அந்தச் சிறுவனை அங்கு வழியனுப்பி விட்டுச் சென்றேன். 

நீண்டு வளைந்திருந்த அந்த நால்வழி சாலை தொலைவில் முடிவது போல் தோன்ற அங்கு ஒரு சிறு மலைக் குன்றுகள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருந்தது, இலேசான மழைச் சாரல் தலைக்கவசம் முகப்பு கண்ணாடியில் சிறு புள்ளி கோலம் போடா முயன்று கொண்டிருந்தது மழைக்கால மாலை இன்னமும் புதுமை அதிகரிக்கச் செய்திருந்தது. தொலைவில் தோன்றிய அந்த மலை உச்சியில் உலகை வெறுத்து நடுவெளி கடந்து தனிமையின் ஒய்யாரம் கண்டு கொண்ட கிழவன் ஆனந்தமாய் இரண்டு மூண்டு சுருட்டை ஒன்றாகப் புகைப்பதைப் போன்று கார்மேகம் வானை நோக்கி உயர்ந்து வளைந்து மலையின் பின்புறம் நோக்கி காற்றினால் தள்ளப் பட்டிருந்தது 

இயற்கைக்கு மயங்காத மனமும் உண்டோ என்பது போலத் தான் ரசித்துக் கொண்டே சென்றேன் அந்த மலை இன்னமும் இருநூறு அல்லது நூறு மீட்டர் தொலைவில் இருக்கலாம் என்ற உத்தேசம் வரும் போது அந்த வழிகாட்டிக் கூறிய வேலை நடந்து கொண்டிருந்த பாலத்தை வந்தடைந்தேன் அங்கு என் எதிர்புறம் இடமிருந்து வந்த அந்த மீன்காரரிடம் அண்ணே பால் குளம் எப்படி போகனும் என்று கேட்க இது தான் பால் குளம் உங்களுக்கு பால்குளத்தில எங்க போகனும் என்றார் நான் அண்ணா சித்தர் கோவில் எங்களூருக்கு ? தம்பி இப்படியே நேரா போ ரோகிணி கல்லூரி அடுத்த வலப்புறம் ஒரு ரோடு வரும் அங்க போயி கேளு என்றார் சரியென்று கூறி ரொம்ப தெங்கஸ்னே என்றேன் சரி சரி இருக்கட்டும் என்று சென்றார் 

ஏற்கனவே அங்கு நான் இரண்டு முறை சென்றிருந்தாலும் இந்தமுறை நான் செல்வது வேறு ஒரு பாதை எனக்கு அவ்வளவு பரிட்சியம் இல்லை என்பதனால் கொஞ்சம் தடுமாற்றம் 

என்னுடைய நண்பருடன் திருவண்ணாமலை சென்றிருந்த போது கிரிவலம் முடித்து ரமண மகரிஷி குகைக்குச் செல்ல அழைத்தார் அவருடன் அங்குச் சென்று பத்துப் பதினைந்து நிமிடங்களில் தியானம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பலாம் என்று நினைக்கும் போது நண்பர் மலைக்கு மேலே செல்லலாம் என்றார் எனக்கும் வேண்டாம் என்று கூற தோன்றவில்லை அப்போது செல்லும் பாதையில் ஒரு சிறிய ஆசிரமம் அங்கு வெளிக் கதவில் ஒரு சித்தரின் படம் ஒட்டப் பட்டிருந்தது அதைப் பார்த்ததும் அங்கிருந்தவரிடம் இது பால் குளம் சித்தர் தானா என்று கேட்டார் அவர் ஆமாம் என்றார் 

நான் அதற்குக் கேள்வி பட்டிராத பெயராக இருந்தது அதன் பின் நான் எனது நண்பனிடம் யார் அவர் என்று கேட்க அவர் கூறினார் கன்னியாகுமரி அருகில் பால் குளம் ஊரிலிருந்து ஒரு சித்தர் பதினேழு வருடங்கள் மலையின் மேல் இருந்து தவம் செய்தார் இப்போது அவர் அவர் பால் குளம் சென்றுவிட்டார் என்று கூறினார் அதன் சரியென்று மலைப்பயணம் தொடர்ந்தது சிரமமான அந்தப் பாதையில் இருவர் ஆளுக்கொரு குடத்தில் தண்ணீரும் பூஜைக்குத் தேவையான பொருட்களையும் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள் 

ஒரு வழியாக மலையுச்சியை அடைந்தோம் அங்குதான் பால் குளம் சித்தர் அவர்களின் குடில் இருந்தது அங்கு ஐயா அமர்ந்து தியானம் செய்த இடம் பூஜைக்காகப் பயன்படுத்தப்பட்டது ஐயா தியானம் செய்த இடத்தை வணங்கிவிட்டு அமர்ந்திருந்தோம் பிரசாதமாக பால் அதில் சில மூலிகைகள் கலந்து கொடுத்தார்கள் ஐயா தினமும் ஒருவேளை மட்டும் ஒரு சிறிய சிரட்டை (தேங்காய் ஓட்டில்) கொஞ்சம் இந்த மூலிகை கலந்த பாலை உணவாக எடுத்துக்  கொள்ளுவாராம் அவ்வளவு தான் உணவு இப்படி பதினேழு ஆண்டுகள் இருந்துள்ளார் ஆச்சர்யமாக இருந்தது 

அதன் பின் அவரை ஊருக்கு வந்ததும் சென்று பார்க்க எண்ணி நண்பர் சென்றுள்ளார் ஆனால் பார்க்க முடியவில்லை உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறினார். இப்போது ஏற்பட்ட உணர்வு போலவே அப்போது எனக்குள் குழப்பம் இல்லாத ஓர் எண்ணம் அவரை சென்று பார்க்க வேண்டும் என்று எனது ஊரிலுள்ள நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்றேன் மனதில் மாலை பழங்கள் எல்லாம் வாங்கி செல்லத் தோன்றியது என்னுடன் வந்தவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள் அவரை பார்க்கவே விடமாட்டார்கள் இவன் இத்தனையும் ஏன் வாங்குகிறான் என்று, தனிப்பட்ட அனுபவங்கள் பகிரப்படும் போது அது யாராலும் புரிந்துகொள்ள முடியாது, அதனால் அவற்றை விளக்க முற்படுவது முட்டாள் தனம் என்று பலமுறை நான் உணர்ந்துள்ளேன்

ஆகையால் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை மணக்குடி வழியாக பால் குளம் சென்றடைந்தோம் வெளியில் இருந்த அவருடைய சீடர்களிடம் உள்ளே வந்து ஐயாவைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன் அவர்கள் ஐயா யாரையும் பார்ப்பது இல்லையென்று கூறிய அடுத்த நொடியே பொறுங்கள் ஒரு நிமிடம் என்று கூறி அவர் உள்ளே சென்று ஐயாவிடம் உத்தரவு கேட்க அவர் வரச் சொல்லுங்கள் என்று அனுமதியளித்து விட்டார் அருகில் விடவில்லை சிறிது எட்டுத் தொலைவில் நின்று வணங்கினோம் அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் 

மகிழ்ச்சியாக அங்கிருந்து வீடு திரும்பினோம் அதன் பின் ஐயா ஜீவசமாதி அடைந்த பின் நண்பர் தெரிவித்தார் காலை யில் இன்று சமாதி யில் வைக்கவிருக்கிறார்கள் என்று நான் எனது நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தேன் அவர் உடலைத் தொடும் பாக்கியம் கிடைத்தது சமாதியில் அமர்த்தும் போதும் அதில் பங்கு பெற ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன் ஒரு புறம் நான் அவரை தாங்கியிருந்தேன் சமாதி பூஜை முடிந்து அன்னதானத்தில் கலந்து உணவு அருந்தி விட்டு வீடு திரும்பினோம். 

அதன் பின் இப்போது தான் செல்கிறேன் நான்குவழிச் சாலையிலிருந்து இடது புறம் செல்லும் வழியில் ரோகிணி கல்லூரி கடந்து சிறிது தூரத்தில் வலது புறம் திரும்பும் பாதை வழியாகச் சென்று ஐயா கோவில் எங்கிருக்கிறது என்று கேட்டால் அனைவரும் கூறுவார்கள் 

அந்தப் பாதையில் திரும்பாமல் இருபது அடி முசென்றால் அங்கு ஒரு சுடலை மாடன் கோவில் உள்ளது அதில் பால் குளம் சித்தர் அவர்களின் சீடர் ஒருவர் அமர்ந்திருப்பார் நன்றாகப் பேசிப் பழகுவார் அவர் சொந்த ஊர் மதுரை அவர் குருவிற்கு திருவண்ணாமலையில் சேவை செய்து வந்துள்ளார் அவர் ஊர் திரும்பிய பின் இங்கு வந்து அமர்ந்து கொண்டிருக்கிறார். சித்தர் பார்க்க வரும் யாரிடமும் பேசுவது இல்லை ஆனால் அவரை பார்த்த பின்பு இங்கு வந்து இவரைப் பார்த்தால் அவர்கள் எண்ணி வந்த வற்றை அவர்கள் கேட்காமலேயே கூறுவார் என்று சொல்வார்கள் எனக்கு அவரிடம் அப்படி எந்த அனுபவமும் ஏற்படவில்லை ஆனால் நன்றாகப் பேசி பழகியுள்ளோம் என்னிடம் உடலைக் குறைக்கக் கூறினார் இவ்வளவு உடல் யோகிக்குத் தேவையில்லை என்று கூறினார் நானும் சரி அய்யா உடலைக் குறைக்க முயல்கிறேன் என்று கூறினேன் அவர் சில வேளைகளில் அங்கு இருப்பார் சிலவேளைகளில் எங்காவது சென்றுவிடுவார் சொந்த ஊருக்கோ அல்லது வேறு ஏதும் கோவில்களுக்குக் கூட இருக்கலாம். 

ஒரு வழியாக நான் சமாதியை அடைந்தேன் நான் ஐயாவின் சமாதி முன்பு அமர்ந்தேன் யாரும் இல்லை அங்கு. பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் குரல் அங்கும் இங்கும் கேட்டுக் கொண்டிருந்தது நான் ஏற்கனவே ஓர் ஆழ்ந்த தியான நிலையில் இருந்த உணர்விலேயே இருந்தேன் அதனால் அமர்ந்த சிலவினாடிகளில் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஒரு பெரும் நிசப்தம் நிலவியது எவ்வளவு நேரம் என்று தெரியாது மெது மெதுவாக வெளியில் உள்ள சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன அப்போது என்முன் கோவணத்துடன் சித்தர் நின்று கொண்டிருந்தார் நான் கண்களை மூடிய நிலையிலேயே புருவ மத்தியில் அவரை நிஜத்தில் காண்பதைப் போல் காண்கிறேன் நான் அவரை வணங்கவில்லை எதுவும் கேட்கவில்லை என்ன நிலையில் நான் இருக்கிறேன் என்பதை உணரவே முடியவில்லை முதலில் 

நான் அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன் மனம் இலேசாக சயனிக்கத் துவங்கியது அவர் தனது வலது கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்துச் சென்றுவா என்று கூறினார் புன்னகைத்தபடி அப்படியே மறைந்தார் என்னில் ஏற்பட்டிருந்த ஒருவித ஆழ்ந்த நிலை இப்போது முற்றிலும் மாறி நான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தேன். எதற்காக நான் அங்கு அழைக்கப் பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதும் புரியவில்லை சித்தரை வணங்கி இங்கிருந்து வெளியில் வர மழை சிறிது தூறல் ஆரம்பித்து இருந்தது என்னுடைய தொலைப்பேசியை பையில் வைத்து கையை வெளியே எடுக்க உள்ளிருந்து என்றோ வைத்திருந்த நூறு ரூபாய் வந்து வெளியே தென்பட்டது 

பக்கத்து வீட்டில் இருந்த அக்காவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து பூஜைக்குக் கொடுத்து விடும் படியாகப் பணிந்து கொண்டேன் அவர்கள் அன்னதானத்திற்குக் கொடுக்கலாம் என்றார்கள் சரி அக்கா நன்றி என்று கூறி மிகவும் ஒரு விட்ட ஆனந்தத்தில் அங்கிருந்து திரும்பினேன்.

காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை என்று எனது குரு கொண்டை முனி சித்தர் அடிக்கடி கூறுவார் ஆனால் அனைத்திற்கும் காரணம் தேடி அலைவதும் வீண். நல்லதே நடந்துள்ளது நல்லதே நடக்கும் என்று நம் கடமையைச் செய்து கொண்டே இருக்கே ஒரு நாள் காரணம் அனுபவத்தின் வாயிலாகப் புலப்படும் என்பார். குரு கூறியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்தி மயங்கிக் கொண்டிருந்தது இருளின் பிடியில் அந்த மாற்றத்தை ரசித்தபடியே சென்றேன். 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *