கள்ளச் சாராயம்

 மனித இறப்புகள் தடுக்க முடியாதவை என்ற போதும், இறப்பு நிகழும் சூழல் என்ன என்பதைப் பொறுத்து அதன் விகிதத்தை மாற்றலாமே தவிற வேறு ஏதும் செய்துவிட முடியுமா என்றால் இல்லை.

பிறந்த ஒவ்வொரு உயிரும் மரணம் நோக்கிய காலத்தையே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்த மரணம் வந்து சேர்வது இயற்கை யாக இருப்பினும் சோகம் தான். செயற்கையாக இருப்பினும் சோகம் தான். சோகம் இல்லாத மரணம் என்பதை நான் இவ்வுலகில் இதுவரை பார்த்தது இல்லை.

நன்றாக வாழ்ந்து ஆண்டு அனுபவித்து இறந்தவர்களுக்கு கூட ஆடி பாடி அடக்கம் செய்யும் முன் சில துளி கண்ணீர் செலுத்தாமல் இல்லை. அவர்கள் நம்முடன் வாழ்ந்த நாட்கள் தான் நினைவில் வந்து செல்லும்.


ஆனால் போக்குவரத்து விபத்து தவிர்க்க கூடியது, இப்படி வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் விபத்துகள் அனைத்திற்கும் அது ஏற்படும் அல்லது ஏற்பட உள்ள வாய்ப்புகளைப் ஆய்ந்து அறிந்து அவற்றிற்கு ஏற்ற வாறு சட்டங்களை வகுத்துள்ளனர். கடுமையான சட்டங்கள் தான் மனிதர்களை வழிப் படுத்துகிறது. 

அப்படி உயிர்கள் மரணிக்கும் விகிதங்களை கூறு போடும் அரசு இந்த “கள்ளச் சாராயம்” என்பதை கண்டுக் கொள்ளாமல் விட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இன்று நாற்பது மேல்பட்ட மரணங்கள் நடந்த பின்பு அரசு அவசரம் அவசரமாக செயல்படுவதும், காவல் துறையின் அதிரடியும் பெரும் நாடகமாகவே தோன்றுகிறது.

இத்தனை நாட்கள் நடக்கும் ஒரு சமூகக் குற்றம் காவல் துறைக்குத் தெரியாமலா இருந்திருக்கும். சரி தெரியாமல் இருந்து விட்டு போகட்டும். பஞ்சாயத்திற்கு, பஞ்சாயத்து காவல் நிலையங்கள் எதற்க்கு உள்ளன ?

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்குத் தான் இத்தனைக் குற்றங்களுக்கும் காரணம். இல்லை இல்லை இந்த மரணங்களுக்கு காரணம். இப்படி மரணம் நிகழ்ந்த பின்னும் அரசு மானியம் அறிவிக்கிறது தவிற மது ஆலைகளை மூடவோ அவற்றை அழிக்கவோ எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தற்போதைய ஆட்சி கும்பல் குடும்பமாக மதுவிலக்கு போராட்டம் நடத்திய காணொளி தற்போது வைரல் ஆவதை பார்க்கும் போது இன்னமும் இவர்கள் எத்தனை நாட்களை இப்படி நாடகங்கள் மூலம் கடத்திச் செல்வார்கள் என்று தெரியவில்லை.

அரசு என்று முழுவதும் அரசை மட்டும் குற்றம் சாட்டிவிடவும் முடியாது ஒவ்வொரு மனிதனும் அவன் தனிப்பட்ட பாதுகாப்பை அவன் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments