Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சூப்பு கடை அக்கா


 வளக்கமாக வேலை முடித்து வரும் பாதை கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிட இருசக்கர பயணத்தின் பின் ஊரை அடைய ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் இருக்க

“ஆட்டுக் கால் சூப்” என்று ஒரு பெயர் பலகை கடை ஆரம்பித்து ஒரு சில மாதங்கள் இருக்கலாம் நான் அந்த பாதைக்கு அன்று புதியவன் வழக்கமான பாதையில் மழைவெள்ளம் தேங்கியிருந்ததால்.

அதிக உடல் உழைப்பு செய்ய வேண்டுமானால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல உணவுகளும் உணவு கட்டுபாடுகளும் முக்கியம் என்றெல்லாம் மனம் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தது. சூப் கடை அக்காவிடம் “அக்கா இரண்டு சூப் பார்சல் என்றேன்” நேரம் ஒன்பதை கடந்திருந்ததால் கடையில் யாரும் இல்லை. 

கடைக் கார அக்கா சூப்பை பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்கள் சூப் எவ்வளவு என்று கேட்டேன் அறுபது ரூபாய் தம்பி என்றார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளத்தில் வாங்கியது பதினைந்து ரூபாய் தான் ஒரு சூப் நான் அந்த அக்காவிடம் அக்கா மத்த கடையில எல்லாம் ஒரு சூப் பதினைந்து ரூபாய் தான் என்றேன் 

கடைக்கார அக்கா தம்பி… சூப் இங்க இருந்து குடிக்கிறது பதினைந்து ரூபாய் தான் ஒரு கப் வரும் இதில் பார்சல் என்றால் இரண்டு கப் ஊற்றுவோம் அதனாலயே விலை முப்பது. அப்புறம் தம்பி இன்னொரு கடை கூட கம்பேர் பண்ண கூடாது ன்னு சொன்னாங்க. 

நான் சிரிச்சேன் ஏன் தம்பி சிரிக்குறீங்கன்னு அந்த அக்கா கேக்க “அக்கா… கடைக்கு துணி எடுக்க போரிங்க ஒரே கடையில வாங்கிடுவிங்களா இல்ல இரண்டு கடை ஏறி இறங்குவிங்களான்னு கேட்டேன்.” இப்போ அந்த அக்கா லேசா சிரிக்க

நான் தொடர்ந்தேன், அக்கா கம்பேர் பண்ணாம எப்படி அக்கா கடையில சூப் நல்லாயிருக்குன்னு சொல்லுறது என்றேன் ! சரி குடிச்சி பாருங்க தம்பி தினமும் வருவீங்க அப்படினு அக்கா சொல்லிட்டு ஊரு பேரு எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சிது பார்சல் சூடு கம்மியா இருக்கேன்னு கேக்க எல்லாம் முடிஞ்சி போச்சி தம்பி கடை அடைக்க போற நேரம் நீங்க வந்துருக்கீங்க ன்னு சொல்லி கசா வாங்கி சில்லறை கொடுத்துட்டு என்ன நினசித்தோ தெரியல 

சுதான்னு கூப்ட அக்கா பொண்ணு வீட்டுக்குள்ள இருந்து வந்துச்சி அழகா. 

அண்ணனுக்கு ஒரு குடல் வறுவல் எடுத்துட்டு வான்னு சொல்லுச்சு, அக்கா நான் கேக்கவே இல்லையே ன்னு சொல்ல பரவால தம்பி கொண்டு போங்க ன்னு கொடுத்துச்சு. 

சும்மா வாங்க விருப்பம் இல்ல அதுக்கும் காசு கொடுத்துட்டு வந்தாச்சி அடுத்த நாள்ல இருந்து தினமும் போய்ட்டு இருந்தேன் சூப் வாங்க மட்டும் தான். 


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...