கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

இருள் சூழ்ந்தவன்

 


அடிச்சி அவன் மண்டைய உடைக்காமல் நான் இங்கிருந்து வர மாட்டன் தாயோளி இன்னைக்கு அவனா நானான்னு பாக்கணும் ல மக்கா. என்ற இளமை பருவ வீரத்துடன் நின்றிருந்தான் தினேஷ் பத்து வருடங்களுக்கு முன்பு. வீரம், அந்த வீரத்துடன் பேசிய வார்த்தைகள் எல்லாம் பருவ மாற்றங்கள் போல மாறிக் கொண்டே இருந்தன. 

வார்த்தைகள் ஊற்றுப் போல பெருகிக் கொண்டே இருந்தன நரம்புகளின் இறுக்கம் குறைந்து விட்டது ஊரெங்கும் வம்பை விலைக்கு வாங்கியவன் என்று சமாதான படுத்திக் கொண்டிருக்கிறான் அனைவரையும். திருமணம் முடிந்தது, குழந்தை பிறந்தது என்ற தனிப்பட்ட வாழ்க்கை ஏற்படுத்திய மாறுதல்களாக கூட இருக்கலாம். 

வீரர்களை எல்லாம் திருமணம் கோழையாக மாற்றி விட்டது என்று கூறி விட முடியாது ஏனென்றால் வீரன் என்றும் வீரன் தான். ஆனால் அவன் இப்போது பொறுப்புள்ளவனாக முன் பின் நடப்பதை புரிந்து கொண்டவனாக இருக்கலாம். தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்தவனாக இருக்கலாம். 

யார் எப்படி இருந்தாலும் அனைவரும் அடுத்த அடுத்த வளர்ச்சியில் சோதிக்கப் படுவார்கள் என்பது போலவே, தினேஷ் இன்று நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கிறான்.

உடலுள் வலு இல்லாமல் இல்லை ஆனால் ஏனோ மனம் சோர்ந்து விட்டது. யாரிடம் வாக்கு வாதம் செய்யவோ அல்லது சண்டையிடும் மனநிலையோ இல்லாமல் போனது. இன்னமும் இரண்டு அடி கூட அடித்து விட்டு போகட்டும் என்ற மனநிலைக்கு அவன் என்றோ வந்து விட்டான். 

“தீபாவளி பண்டிகை” வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பியவர்கள் ஏராளம். ஊருக்கு வந்த நண்பர்கள் பண்டிகையை கொண்டாட காலை கோவிலுக்கு சென்று வீடு வந்து மனைவி குழந்தைகளை விட்டு விட்டு கறி கட்சிக்கு சென்று தேவையானதை வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று கடற்கரையோ அல்லது அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று மது விருந்து கொண்டாடுவது தான் வழக்கம். 

வருடம் வருடம் இதுவோ தொடர்கதை. மதுவின் உச்சம் அதன் பின் என்ன நடக்கிறது என்ற சுயநினைவு அற்ற நிலை. தினேஷின் நண்பன் எதிர் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவனை அடித்து விட்டான் அவர்கள் சூழ்ந்து கொள்ள. என்ன இது தேவையற்ற சண்டை என்று நண்பர்கள் அனைவரும் தடுக்க முயற்சிக்க யாரோ ஒருவர் வீசிய கால் தினேஷின் நெற்றியில் பட்டு பொழ பொழ வென்று ரத்தம் அடுத்த இரண்டு வினாடிகளில் சண்டை முடிவிற்கு வந்துவிட்டது. 

அப்படியொரு சண்டை நிகழ ஒரே ஒரு காரணம் போதை, ரத்தம் கொட்ட கொட்ட தினேஷ் விலகி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான். யார் மீது வருத்தம் கொள்ள சும்மா சென்றவர்களை அடித்து சண்டையை துவங்கிய நண்பனிடமா! இல்லை கல் கொண்டு வீசியவனையா!

யாரிடமும் கோபப்பட்டோ, வருத்தம் கொண்டோ இனி என்ன ஆகப் போகிறது சரி ஆனது ஆகட்டும் இது இத்தோடு முடியட்டும் என்ற நினைப்பிலேயே. அவன் அமைதியாக வே நின்றிருந்தான். அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அக்கறை கொண்ட நட்புகள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். வீட்டில் அவனுக்காக காத்திருந்த உறவுகள் நெஞ்சம் நேரமாக நேரமாக பதை பதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக நள்ளிரவு வீடு சென்றவனுக்கு யாரை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கோபமாக திட்டி விட்டு யாரும் அவனிடம் நெருங்க முடியாத அளவு கோபத்தைக் காட்டி விட்டு சென்று விட்டான் அவனது அறை நோக்கி 

ஒரு சாதாரண பிரச்சினைப் போல தெரிந்தாலும் அவனது குடும்ப சூழ்நிலை யை நினைத்தும் மது அருந்தியது நினைத்தும் அவன் நிச்சயம் வருத்தம் மட்டுமே கொண்டிருந்தான் வேலையிலும் ஒரு நிலைப்பு இல்லாத ஒரு சூழல் நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் மனதில் உருவாக்கிக் கொண்டு வாழ்வை நகர்த்திச் சென்றான். 

அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க வழி வேண்டும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்க வழி யென்ன என்று சிந்திக்க தோன்றியது 

ஒட்டு மொத்த பிரச்சனைகளும் ஒருவனை சூழ வேண்டுமென்றால் ஏதோ ஒரு பெரும் தவறு எங்கோ நடந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறியாமல் அதற்கான தீர்வை காண முடியாது. இன்றில்லாமல் என்றோ ஒரு நாள் நாம் ஏதோ தவறு செய்திருக்கலாம் அதன் விளைவு இன்றாக கூட இருக்கலாம் அல்லவா! 

என்று அவன் நினைத்திருந்தான். இனியும் நினைப்பான் தீர்வு கிடைக்கும் வரை….

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *