உண்மையில் இப்படித் தான் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை தெளிவு அனைத்துப் பெண்களுக்கும் வேண்டும் என்பது தான் நமது எண்ணம். உண்மையோ அல்லது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் முகம் மாற்றம் செய்த வீடியோவோ தெரியவில்லை என்ற போதும். ஒரு பிரபலமான பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியே வந்துள்ளது என்பது அனைவரும் அதனை பார்க்க புள்ளி வைக்காத இடமே இல்லை.
எத்தனையோ ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ள மனிதர்கள் இன்னமும் சிறிதும் ஆர்வம் குறையாமல் உள்ளனர். அப்படி என்ன புதுமையை பார்த்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனோ ஏதோ ஒன்று அவர்களை அப்படி தூண்டியிருக்கலாம். சரி அனைவரும் தேடி, தேடி பார்த்ததின் பயன் என்ன யாருக்கு என்ன கிடைத்தது ?
வக்ரம் இல்லாதவர்கள் யார் ? என்ற கேள்வியும் எழுகிறது. பெண்களும் இதனை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு இருந்தது இன்னமும் ஆச்சர்யம். ஆணை மட்டுமே தவறாக சித்தரிக்கும் உலகம் அவர்களை என்ன சொல்லும்!
ஆண், பெண் சரி சமம் என்று கூறும் காலம் இது என்பதனால் இந்த நிலையா ? உண்மை தான் எனலாம் சமீபத்தில் இஃது போல் நடந்த ஒரு ஆணின் சுய இன்ப காணொளியும் இப்படியே அதிகமாக பெண்களால் பரப்ப பட்டது.
யாரும் எதையும் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. எல்லாம் கொஞ்சம் நாள் சமூகத்தில் ஒரு பிரமாண்டத்தை உருவாக்கி விட்டு உறங்கி விடுகிறது.
அதன் பின் பாதிக்க பட்டவர்கள் வாழ்க்கை எந்த நிலைக்கு செல்கிறது என்பதை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. அனைவரும் அடுத்த ஒன்று பற்றிப் பேச நகர்ந்து விடுகிறார்கள்.
இனி வரும் காலங்களும் இப்படியே இருக்கப் போகிறது. இரண்டு நாள் ஒரு செய்தி பரவுகிறது என்றாலே அது தான் மிகவும் பெரியதொரு நிகழ்வாக இருக்கலாம். சென்னையில் மழை பெய்யும் என்பது எத்தனை பரபரப்பான மற்றும் முக்கியமான செய்தியாகி போனது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.
என்றாலும் செய்தி பொய்த்து விடின் அனைவருக்கும் ஆனந்தமே. யாரையும் குறை கூறாமல் யாராலும் வாழ்வை நகர்ந்த முடியாது என்ற சூழ்நிலை தான் இன்றைய நிலை.
அனைவரும் சமூகத்துடன் அவ்வளவு இணக்கமாக அல்ல ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர். மற்றுமொரு முக்கிய காரணம் இன்றைய சமூக ஊடகம் அனைவருக்கும் அவர்களுடைய பதிவு க்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்றார் போல பணமும் கொடுப்பதால்
எந்த மாதிரியான செய்தி அதிக வருமானத்தை ஈட்டு தரும் என்று குறி பார்த்து செய்திகளை உருவாக்குகிறார்கள். மக்களும் அதன் உண்மை தன்மையை பற்றி கவலைப் படுவது இல்லை.
இன்றைய நாளுக்கு ஏதோ ஒரு செய்தி அதனை கண்டன்ட் ஆக்கி பெரியதாக அனைவரையும் பேச வைக்காமல் விடுவது இல்லை.
வெகு எளிதாக ஒரு பொய் உண்மையாக சித்தரிக்க படுகிறது.
ஆனால் ஓவியா என்ற அந்த நடிகை மிகவும் அழகாக, சாமர்த்தியமாக அதனை கடந்து செல்ல வைத்து விட்டார் என்றாலும் இரண்டு நாடுகளில் முடிய வேண்டிய ஒரு செய்தியை ஒரு வாரங்களில் பேச வைத்து சமூகத்தில் பல பெண்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ளார் எனலாம்.
இவளவு தைரியம் அனைத்து பெண்களுக்கும் வேண்டும்.
என்ன ஆகி விட போகிறது ஆபாசத்தை இவர்கள் பார்ப்பதால் என்ற தெளிவு வேண்டும். வெளியில் எத்தனை வன்மம் கொட்டப் பட்டாலும் நம் மனம் நமக்கு சாதகமாக இருந்தால் போதும்.
ஏனென்றால் அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கும் இடம் நம்முள் இருந்து தான் தேவையற்ற குழப்பங்களை உருவாக்குவதே மனம் தான் அதனால் நம் மனதை நாம் பக்குவமாய் வைத்திருக்க வேண்டும் அவ்வளவே…
0 Comments
நன்றி