Posts

Showing posts from December, 2020

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

நிலா

Image
நிலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது?  அப்படித்தான் நானும். அது ஒரு காலை பொழுது. மார்களி மாதம். கோவிலில் திருவெம்பாவை பாடல் பெண்கள் அனைவரும் கூடி பாடும் இதமானா காலை. மனதை கொள்ளை கொள்ளும் வரிகள். நான் குழிக்கச் சென்றேன் ஊரிலுள்ள குளத்தில்  எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். ஒரு பெண். அதற்க்கு முன் அவளை நான் பார்த்ததே இல்லை. மனதில் நான். யாராக இருப்பாள் இவள்.? இந்த அதிகாலையில் நட்சத்திர ஒளியை மழுஙகடிக்க செய்திருந்தது அவளுடைய பிரகாசம். என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அங்கேயே என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன். என்னை, ஒரு வித கோவம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அவள். கோலத்தை பாதியில் விட்டு விட்டு வீட்டிற்க்குள் ஓடினாள். நானும் சற்று பயந்து போனேன். எதிர் வீட்டு காரனுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. தெருகுழாயில் தண்ணீர் எடுப்பது முதல் மழை நீர் நிறைந்தோடும் ஓடைக்காக வரை, இருவரும் மாறி மாறி வாக்கு வாதம் செய்து கொள்வோம். எங்கள் இருவருடைய கருத்தும் ஒரு போதும் ஒத்து போனது கிடையாது. நான் இனி இங்கு நிற்பலாகாது என்றுணர்ந்து. அங்கிருந்து நகர்ந்தேன். இருப்பினும்

பெண்கள் தேவதைகள்

Image
பெண்கள் தேவதைகள் என்பது வெறும் வார்த்தை இல்லை அண்ட பேறண்ட வெடிப்பு எவ்வளவு உண்மையோ !  அவ்வளவு உண்மை !! ஆண் உடலளவில் வலிமை கொண்டவனாக இருக்கலாம் ஆனால் மனதளவில் பெண்ணே பெண்மையே வலிமை கொண்டவள்... இறைவன் மிகவும் இரசனை கொண்டவன் என்பதை என்னால் மறுக்கவே முடியாது ஏனென்றால் பெண்ணை படைக்கும் முன் அவன் நீண்டதொரு பெரும் ஆலோசனையில் ஆழ்திருக்கிறான் .... அவள் உச்சம் முதல் மச்சம் என அவள் எச்சில் வரை வர்ணிக்க வர்ணிக்க வார்த்தைகளுக்கே பஞ்சம் வரசெய்திருக்கிறான் !! ஆனால் அவள் மனதிற்க்குள் துடிக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அவள் முழுவதும் அனுபவிக்க முடிகின்றதா ? இறைவன் இத்தனை நீள யோசனை செய்து அவள் அங்க நரம்புமண்டலங்களில் செலுத்திய கவனத்தை சிறிது அவள் வாழ்வியலிலும் கொடுத்திருக்கலாம் !!  Mind Voice ; என்ன சொல்வது அப்படி இறைவன் கொடுத்திருந்தாலும் நாம் அதிலும் ஏதாவது குறை கண்டு அதற்காக ஒரு கட்டுரை எழுதினாலும் எழுதுவோம்... சரி உண்மையில் பெண்கள் மனதளவில் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்கே தோற்றுப் போகின்றார்கள் ? என்றால் அது பெரும்பாலும் அன்பும், பிறர் மீது கொண்ட நம்பிக்கையுமாகவே இருக்கும்.

போகும் பாதை

Image
தவிப்புகள் தன்னடக்கம் தலைசாய்வு இவைகள் பெண்ணின்  குணமாம். பொக்கிஷங்களை தொலைத்த பெரியதொரு காவிய கதை ஒன்று காதலை மையம் கொண்டு திளைக்குமோ? தோன்றல் எல்லாம் தோற்றுப் போகும் போது மீதம் இருக்கும் நம்பிக்கை மட்டுமே வாழ்வின் மிச்ச தூரத்தை கடக்க செய்யுமோ? போகும் பாதையை தேர்வு செய்து இன்னும் பயணத்தை தொடங்காமல் காலத்தை தானாக கரைபுறண்டு ஓட செய்து வேடிக்கைப் பார்ப்பது என்ன நிலை? பிறந்தாயிற்று ஏதோ ஒன்றை தர்மமாக செய்து அல்லது தர்மத்தின் பாதையிலாவது செல்ல பழகி கொள்ளலாம் என்றால், தர்மம் என்றால் எதை செய்வது என்ற கேள்வி தோன்றுகிறது... இருப்பது அனைத்தையும் தர்மமாக கொடுத்து விட்டு ஆண்டியாக காசி சென்று விடலாமா என்று, ஆமாம் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டால் காசிக்கு எப்படி செல்வது என மனம் கேட்க  நடந்து தான் என்று உன் மனம் ஒன்று கூற நாம் அமைதியாக இருந்தாலும் வெளியுலகத்தோரோடு எந்த வாக்கு வாதமும் இல்லாவிட்டாலும் அகத்தில் கூச்சலும், வாக்குவாதமும், குழப்பமும் ஒரு போதும் தீர்ந்த பாடில்லை... இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் மாறாமல் இருப்பது இந்த அகத்தில் நடக்கும் கேலிகளும் கூத்துகளும் தான் பல நேரங்க

வார்த்தைகள்

Image
நாம் பேசும் வார்த்தைகளுக்கு நிச்சயம் வர்ணங்கள் பூசியாக வேண்டும். இல்லை நான் இப்படித்தான் யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் என்று அவ்வளவு எளிதாக கூறி கடந்து செல்லமுடியாது!! ஏனென்றால் நாம் பேசு வார்த்தைகள் அனைத்திற்க்கும் நாம் தான் பொருப்பு ஏற்று ஆக வேண்டும் வாய்க்கு வந்த படி பொருளற்று ஏதேனும் உளறி செல்லலாகாது !! வார்த்தைகள் உண்மையில் அற்புத சக்தி கொண்டவை தான் நம் வார்த்தைகளால் ஒருவரை வீழ்த்தவும் முடியும், வீழ்ந்து கிடக்கும் ஒருவனை எழ வைக்கவும் முடியும்!! சிரிக்க வைக்கவும் முடியும், அழ வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும், இந்த வார்த்தைகளும் அதற்க்கு முன் தோன்றும் எண்ணங்களும் தான் இன்று வரை உலகை ஆளுகின்றன!! இந்த மாயாஜால வார்த்தைகளால் ஒருவரை அன்பில் கட்டி போட முடியும் என்றால் உண்மையில் எத்தனை அற்புத சக்தியை கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள், குறைவாக பேச வேண்டும் சிந்தித்து பேச வேண்டும், நேரம் காலம், இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள்  ஆனால்! நாம் எத்தனை பேர் அதனை சரியாக கடை பிடித்திருப்போம்!? மேற்கூறிய அனைத்தும் புத்திசாலித்தனமான செயல்க

மனமே மாமருந்து

Image
காலம்  வேகமாக செல்கின்றது !! கடமைகள் நிறைய உள்ளது !! காலத்திற்கு ஏற்றார் போல், வேகமாக பயணிக்க வேண்டியுள்ளது... எண்ணங்களின் ஓட்டங்களையும் அதன் வேகத்தையும் நான் என்றும் நிறுத்த முற்படுவது இல்லை, நான் மனதிற்கு நல்லது கெட்டது என எதையும் பிரித்து காட்டுவது இல்லை அதன் போக்கிலேயே விட்டு விடுகிறேன்,  நான் எண்ணங்களை காட்ச்சிப்படுத்தி திரைப்படம் போல் கண்டு ரசிக்கிறேன் !! ஒருவேளை மனதிற்கு நான் இவை தவறானவை அவை சரியானவை என பிரித்து காட்டியிருந்தால் அவைகள் தவறென கூறியவற்றில் மீதே அதிக நாட்டம் காட்டியிருக்கும், ஏனென்றால் தவறென நாம் கூரும் எல்லாவற்றிலும் அதாவது எல்லா செயலிலும் வார்த்தைகளிலும் பயத்தையே  முன்னிறுத்திக்கிறோம். பயம் என்ற ஒரு குட்டி வார்த்தை மனிதனின் மனத்தையும் அவனது செயலையும் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது  எனக்கு அப்போது எட்டு வயது ஊரிலுள்ள நடுநிலை பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், பயம் என்றால் என்னை பொறுத்த வரை இருளில் பேய் வரும் என்ற பயம், படிக்கவில்லை எனில் வாத்தியார் அடிப்பார் என்ற பயம், சாப்பிடவில்லை எனில் அம்மா அடிக்கும் இல்லையென்றால் பூச்சாண்டி பிட

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *