Posts

Showing posts from April, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

நாலு பேரு நாலு விதமா பேசுனா

நாலு பேரு நாலுவிதமா பேசதான் செய்வாங்க என்று கூறுவார்கள், ஆனால் அந்த நாலு பேரு யாருண்ணு இது வரைக்கும் யாரும் பாத்தது இல்லை, ஆனால் அந்த நாலு பேரு இன்னமும் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஏன் அவர்களை பார்க்க முடியவில்லை என்றால் நாலு பேர் என்று நான்காக பிரிக்கும் பட்சத்தில் தெருவிற்க்கு நாலு பேர் அல்லது ஊருக்கு நாலுபேர?  என்பது போல்! எழும் கேள்விகள்! அந்த நாலு பேர் காலம் காலம் இருக்கிறார்கள் எனும் போது நிச்சயம் அவர்கள் நாலு பேர்கள் மட்டும் அல்ல, அந்த நாலு பேர் இடத்திற்க்கு இடம் நேரத்திர்க்கு நேரம் மாறுபடுகின்றார்கள், சில நேரங்களில் அந்த நாலு பேரில் ஒருவர் நாமாக கூட இருக்கின்றோம் என்பதை யாராலும் மறுக்க இயலாது, உண்மையாக உங்களை நீங்களே கேட்டு பாருங்கள் பிறர் கதைகளை பற்றி நான் பேசியதே இல்லை என்று ஒருவர் கூட கூற இயலாது. அந்த நாலு பேரை இது வரை காணமுடியாததன் மர்மம் அதில் நாமும் இருப்பதால் தான்....

மானுட வள்ளி அவள்

Image
வாசிக்க வாசிக்க நேசிக்கத் தோன்றும் கவிஞன் இல்லை நான்!! பார்க்க பார்க்க இரசிக்கத் தோன்றும் அழகன் இல்லை நான்!! பேச பேச கேட்கத் தோன்றும்  பேச்சாளன் இல்லை நான்!! சொல்ல சொல்ல புரியத் தோன்றும் புலவன் இல்லை நான்!! ஏதும் இல்லா என்னிடம் நீ ஏது கண்டாய்!? என் கரம் பற்றி !!  என்னையே சுற்றி வந்த மாயம் என்ன? மாயவளே என் மாசில்லாத தூயவளே!! என் கற்பனை காட்டினில் தீ மூட்டி இரசித்தவளே!! பற்றி எறியும் நேரம் விட்டுச் சென்றவளே!! அல்லியே, இரக்கம் இல்லா செல்லியே!! என்னை வாட்டும் மானுட வள்ளியே!! போதும் என்னை விட்டு விடு !! இல்லையேல் என்னை கொன்று விடு!! உன் காதல் கூட்டினில் அகபட்ட  கற்ஜனை அடங்கிய மானுட சிங்கம் நான்!!

சிவன் பாடல் இதுவரை யாரும் கேட்டிடாத வரிகள்

Image
*மனமாய்....கதைக்கிறேன்....* காலம் சென்றது!! வாழ்வும் நின்றது!! அறிவை கொன்றது!! நினைவை தின்றது!! மனமா வென்றது!! குணமே என்றது!! ஜலமாய் சென்றது!! உயிராய் நின்றது!! உணர்வை கொன்றது!! உடலை தின்றது!! காணும் யாவையும் கண்ணால் தின்றது!! எண்ணக்கடலில் மிதவாய் என்றது!! வாழ்வாய் என்றது!! வீழ்வாய் என்றது!! புத்தன் என்றது!! பித்தன் என்றது!! மெய்யும் என்றது!! பொய்யும் என்றது!! நரம்புகள் பிளவுபட கத்து என்றது!! நோய் என்றது!! பேய் என்றது!! என்னையின்றி உனக்கு பலமில்லை என்றது!! *அறிவாய்.....கதைக்கிறேன்* மனமே என்றேன்!! நினைவை கொன்றேன்!! காலம் வென்றேன்!! ஞானம் பெற்றேன்!! தெளிவாய் நின்றேன்..... உன்னால் உன்னால் உன்னால்............. சிவமே.....சிவனே......என் சீவனே..... அறமே....அகமே.....அன்பே......என் சிவமே..... பிறந்தேன் நான் பிறந்தேன் உன்னால் சிவமே.... வளர்ந்தேன் நான் வளர்ந்தேன் உன்னால் சிவமே.... அணுவாய் மறைந்தாய் அகிலம் தெறிந்தாய் முக்தி என்பதை முடிவில் தந்தாய்!! இடையில் ஏனோ பலபிறப்புகள் என்றாய்!! பாவம் என்றாய்!! புண்ணியம் என்றாய்!! படைப்புகளில் ஏனோ பல மாற்றம் தந்தாய்!! உணர்வும் தந்தாய், வலியும் தந்

உன்னை நினைத்து

Image
உன்னிடம் காதல் சொல்ல ! உன்னை வர்ணித்து கவிதை சொல்ல ! உன்னை நேசிக்க ! உன்னோடு உறவாடா ! இதையும் தாண்டி,  உனக்கு பிடித்த பலர்   இருக்கலாம் ! இந்த அவனியில். ஆனால் உன்னையே நினைத்து ! உன்னை மட்டுமே இதயத்தில் தாங்கி ! நீ என்னுடன் பேசும் நேரத்திர்க்காக காத்து கிடந்து ! உன்னை காணும் நாட்களுக்காக தவித்து இருந்து ! ஆயிரம் காதலை மனதில் கொண்டு ! உன்னிடம் கூறாது காத்திருக்கும், அந்த வேதனையுடன் கூடிய ஒரு இன்பத்தை  நொடி நொடியாய் அனுபவிக்கின்றேன் !! மனதின் குமுறல்களை கொட்டிவிட தான் ஆசை, வேண்டாம் துயரங்கள் என்னோடு போகட்டும்...! உனக்கு வந்த வாழ்த்துகளில் இதும் ஒன்றாக என் நேசம் கடந்து விட கூடாது.... இப்படிக்கு... உன்னை நினைத்து தவித்து தவம் இருக்கும் தூர தேசத்து காதலன்...

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *