காரணம் உண்டு
அகப்பட்டுக் கொண்ட பேருந்து நெரிசல், வாழ்வின் அடுத்தது என்ன என்று தெரியாத ஒரு விரக்தியான நிலை, நிம்மதி தராத வீடு, உறவுகள் மத்தியில் மவுனம் என அனைத்திற்கும் காரணம் உண்டு. அன்பின் ஓரவஞ்சனையை பார்த்திருக்கிறேன், கடும் சொற்கள் வீசி புன்னகைத்து செல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்னும் அடிமையாகவே வாழ துணிந்தவனுக்கு எதற்கு வாழ்வு ? என்ற கேள்வியுடன் கடந்து செல்கிறேன். வாழ்வு என்பது சாபமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது வரம் கிடைத்த வரத்தினால் சாபத்தை சரி செய்ய முயலுவதே இன்பம் அதனை தவிர வேறு ஏதும் இன்பமில்லை என்ற நிலைப் பாடு தான் என்னுடையது. படாத அவமானங்கள் இல்லை. பட்டும் திருந்தவில்லை என்றான பின் என்ன செய்வது. அப்படி என்னிடம் பல பேர் கூறியுள்ளனர் இப்போது நானும் பலரை பார்த்து கூறுகிறேன் இருந்தும் என்னையும் இன்னமும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை அனுபவங்களுக்கு பின்னும் நான் திருந்த வில்லையோ! இல்லையென்றால் இவ்வளவு தான பார்த்துக்கலாம் என்ற எண்ணமாக இருக்க முடியாது. சலிப்பின்றி தினமும் காவல் நிலையம் சென்று ஏதாவது வழக்கு என்மீது போடுங்க...
0 Comments
நன்றி