Posts

Showing posts from December, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் திருக்கோவில்

Image
அனைவருக்கும் வணக்கம் நாம் இங்கு பார்க்கவிருப்பது ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் திருகோவில் அற்புதங்களைத் தான் விஸ்வாமித்ரா கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் விஜயாபதி எனும் ஊரில் அமைந்துள்ளது கூடங்குளம் அனுமின் நிலையம் செல்லும் பாதை சுற்றி உள்ள கிராமங்கள் இராதாபுரம் எனும் ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் நாகர்கோவில் பொதுவான இடமான காவல் கிணறு என்ற இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவு, மற்றும் திருச்செந்தூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலவு கன்னியாகுமரியில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் கோவில் அமைந்துள்ளது. அருள்மிகு விசுவாமித்திரர் திருக்கோவில் தவச்சாலை, விஜயாபதி . சற்குரு சத்திய ஞான தர்மசாலை சற்குரு சத்திய ஞானபீடம் முலைப்பால் தீர்த்தம். திரு அண்ணாமை அறக்கட்டளை சார்பாக தினமும் காலை 8:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மகரிஷிக்கு அபிஷேகவும், நெய்வேத்தியமும், பிராத்தனையும் நடைபெற்று, உலக மக்கள் நலம் பெற, இயற்கை சீற்றங்கள் வராமலும், கொடிய நோய்கள் வராமலும் வேண்டி தினசரி அருள்பிரசாதம் எனும் அன்னதானம் நடைபெறுகிறது. அதுபோல மாதத்தோரும் விசாக நட்சத்தி

காமம்

காமம் ஏன் அனைவராலும் தவறக பார்க்க படுகிறதா? காமம் என்றால் என்ன ? ஏன் காமம் என்று வெளிப்படையாக பேசுவதில்லை? காமம் சார்ந்த கேள்விகள் தவறா? காமம் பற்றி பேசலாமா? இங்கு எல்லாம் புரிதலின் அடிப்படையில் தான் உள்ளது. காமம் தவறு என்று புரிந்து கொண்டு இருப்பவர்களிடம் அதனை விளக்கி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. காமம் புனிதமானது என்பர்கள் மத்தியில் அதனை பற்றிய விளக்கம் இருக்காது!! அதனை பற்றி பேசுவதை விட செயல்புரிவதே நல்லது என்பார்கள், பேச கூச்சப்படுவார்கள். அவர்கள் தான் தெரு கூத்தில் ஆபாச வார்த்தை பேசும் கலைஞர்களுக்கு உர்சாகம் கொடுப்பார்கள். அவர்களை பொருத்த வரை காமம் பற்றி அவர்கள் பேசுவது தான் தவறு!! உண்மையில் காமம் நமது பார்வையில் என்ன? காமம் இல்லாமல் இந்த பூமி இயங்காது, இங்கு அனைத்துமே காமத்தால் தான் மலர்கிறது!! காமம் இல்லாமல் எப்படி இத்தனை வளர்ச்சி? காமத்திற்க்கு தூண்டுதலாக இருக்கும் மோகம் தான் அனைத்து படைப்பிற்க்கும் காரணம்!! காமம் பேசுவது செயல் புரிவது இரண்டும் தீங்கு அல்ல, மனதிற்க்கு எப்போதும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆவல் அத

எதுவும் கற்பனையே

Image
             வாழ்கையே     கற்பனை    என்றால்     நம்ப முடியுமா நம்மால்? ஆனால் மரணத்திற்க்கு பின்பு கண்ணால் காணவே முடியும்!!              இதற்க்கு யார் சான்று என்று கேட்டேல் நானே தான், ஆம் நான் செத்து பிழத்தவன். செத்து பிழைத்தவர்கள் வரிசையில்    நானும்        ஒருவன்                இது நம்ம முடியாமல் இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை, நான் விழித்தெழுந்த      இடம் நான் வாழ்ந்த ஊர் தான், எதுவும் மாறிட   வில்லை               உடல் அல்லாது புறகண்கள்      கொள்ளாது நான் எதை பார்த்தேனோ     அதுவே     நிஜத்திலும் கண்டது, நான் வாழ்ந்தது இங்கு    தான்       அப்படி               இருக்க கற்பனை என்று எவ்வாறு கூறிவிட முடியும், உண்மை தான் நிஜத்தில்             உன்னால் கண்டு ரசித்திட முடியும் தொட்டு     உணர    முடியும்              ஆனால் எதையும் மாற்றிட முடியாது. நான் கூறுவது ஒருவரின் தேவயை முழுதாக      பூர்த்தி செய்ய இயலாது, தேவையை      உணர முடியாது              ஆனால்     மரணத்திற்கு     பின்னால் அனைத்தும் சாத்தியம் தான், ஒருவரிம் தேவையை உன்னால் முழுவதுமாக     நிறைவேற்ற        முடியும்             உனது கற்

ஈசனிடம் ஒரு கேள்வி

Image
உடல் என்னும் மாயையில் உயிர் தங்க வைத்ததேன்!? உயிர் ஓட்டத்தினில்  எண்ணங்களை கொடுத்ததேன்? அவற்றில் சரி தவறு என  பிரித்ததேனோ? இப்படி பாகுபடுத்தி,          பாடுபடுத்தி  கொடுக்கும் பாடம் புரிதலுக்காகவா!? உணர்தலுக்காகவா? ஊக்கமளிக்கும் உணவு பிரித்து, வாழ்வை       பல பகுதிகளாக பிரித்து உடலில் இருந்து            உயிர் பிரியும் வரை எத்தனை, எத்தனை பிரிவினைகள் எல்லாம் பிரியும் என்ற                     போது உடன் சார்ந்தோரோடு பிறியம் எதற்க்கு? மானுடர்கள் கடைசி வரை புலம்பல்  என்றே புலம்பி, புலம்பி திறிய  பூலோகம் எல்லாம் நீ வாசம் செய்யவா? கலி முற்றும், மனிதன் அவனை              அவனெ அழிப்பான் அப்போது தான் வருவேன் என்றாய் மனிதர்கள் மீது அவ்வளவு வெறுப்பா  உனக்கு? அவ்வளவு காலம் பொருத்து இருந்து ஏன் வரவேண்டும்.... இப்போதே வந்து மனிதன் அந்த           நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியாதா என்றால் நிச்சயம் முடியாது தான்... என் சிறு வாழ்விலே நீ புரியவைத்திருக்கிறாய் என்பது உன்னை நான் திட்ட     முற்படுகையில் எனக்கு நினைவூட்டினாய்.... எந்த அறிவுறையும் கேட்போர் இல்லை,  கேட்டாலும் செயல் புரிவோ

நான் ஒரு தேசாந்திரி

Image
        பயணங்களில் சுவாரஸ்யம் எதிலும் இல்லை பல கோணங்கள், பார்வையையும் மனதையும் விசாலபடுத்தும் காட்சிகள்,          மனம் அதையறியாமலயே தன்னை தான் லயித்து நிற்க்கும், அற்புதம் நிகழ்ந்தும் இந்த இயற்கை.         போதிமரஙகள் தேவையில்லை, பனி துளியை சுமக்கும் புல் நுனி போதும், ஞானம் பிறக்க பற்பல அற்புதம் காண கிடைக்கும்.         ரசனை இல்லாதவனும் ரசிகன் ஆவான் உன் அற்புதத்திற்க்கு, உனக்கென்ன ஆரவாரம் செய்யாது பேரமைதியாய் இருக்க         கோர தாண்டவம் ஆடவும் தயங்கியது இல்லைதான் நீ! விழி மூடவும் மறுக்கிறது உன்னை விட்டு அகன்றிடவும் முடியாது!        நீ செய்யும் ஜாலம் எல்லாம் மாயமமில்லா அற்புதம் தானோ? தவத்தின் உள்ளொரு மாபெரும் தவம் புரியும் ரகசியம் தான் என்ன?       எங்கும் சிதறி நீ கிடக்க காணும் இடமெல்லம் என்னை திணரடிக்க, ஒவ்வொரு நொடிக்கு ஒரு முறை உன்னை நீயே செதுக்கி கொள்கிறாயே!!       உன்னுள் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள், மனிதன் இன்னும் வெளிபுலபடாத புதையலையும், ஆழ் கடலையும் ஆராய்ந்து,      ஆராய்ந்து மாண்டு போகிறான், உன் புனிதம் புறியாத மடையர்கள் அவர்கள், எ

தமிழ் கவிதைகள்

1. காணாத கடவுளை காண வேண்டி கால் கடுக்க கடும் குளிரினில் கடல் நடுவே பெரும் பயணம் மூழ்க மூழ்க !! எத்தனிக்கும் போதெல்லாம் நான் விடும் மூச்சு  உனக்காக தானடி...சகியே!! 2. காதல் படித்து உந்தன் கைகள் பிடித்து கடலோர கரையினிலே  கடல் அலை நம் கால் நனைக்க ஏகாந்தம் பூசிய மாலை வெயில் நம் காதல் கண்டு கண்ணயரட்டும் புது விடியல் வரை மட்டும்!! 3.  ஒரு நாள் ராத்திரிலயே என் வாழ்கை தலை கீழா மாறிடும்னு நான் நினைக்கல... நான் எப்பவும் தோல்விய பாத்து பயந்தது இல்ல ஆனா நான் ஜெய்ச்சிர மாட்டனானு பல நாள் ஏங்கிருக்க கூட வந்தவங்க எல்லம் ரொம்ப தூரம் போய்ட்டாங்க  நானும் போய்ட்டு தான் இருக்க ஆனா ரொம்ப பொருமயா உலகத்தோட முதுகுல ஒய்யாரமா  இயற்கையை ரசிச்ச படியே நடக்குர... 4.  வண்ண வண்ண மலர்கள் கொண்ட சின்னஞ் சிறு வன கொடியே!! நான் போகும் திசை நீ அறிவாயா ? மேக மழைத் தூரலில் உன் குளியல் கண்ட என் மீது இன்னும் ஏன் இந்த நாணமோ? பாடி திறியும் பறைவைகள் ஈன்ற கொடியே!! தேசம் விட்டு தேசம் வந்தும் நம் நேசம் மாரலயே!! அது போல உன் நாணம் எனக்கு பொருக்கலயே!! சாய்ந்து சாய்ந்து நீ ஆட! மாய்ந்து தான் நானும் போரேனே! சின்னவளே! சிகரம் தொட நினைப்பவளே எ

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *