தமிழ் கவிதைகள்

1. காணாத கடவுளை காண வேண்டி
கால் கடுக்க கடும் குளிரினில்
கடல் நடுவே பெரும் பயணம் மூழ்க மூழ்க !!

எத்தனிக்கும் போதெல்லாம் நான் விடும் மூச்சு 
உனக்காக தானடி...சகியே!!

2. காதல் படித்து
உந்தன் கைகள் பிடித்து
கடலோர கரையினிலே 

கடல் அலை நம் கால் நனைக்க
ஏகாந்தம் பூசிய மாலை வெயில்
நம் காதல் கண்டு கண்ணயரட்டும்
புது விடியல் வரை மட்டும்!!

3.  ஒரு நாள் ராத்திரிலயே என் வாழ்கை
தலை கீழா மாறிடும்னு நான் நினைக்கல...

நான் எப்பவும் தோல்விய பாத்து பயந்தது இல்ல

ஆனா நான் ஜெய்ச்சிர மாட்டனானு பல நாள் ஏங்கிருக்க

கூட வந்தவங்க எல்லம் ரொம்ப தூரம் போய்ட்டாங்க 

நானும் போய்ட்டு தான் இருக்க ஆனா ரொம்ப பொருமயா உலகத்தோட முதுகுல ஒய்யாரமா 
இயற்கையை ரசிச்ச படியே நடக்குர...

4.  வண்ண வண்ண மலர்கள் கொண்ட
சின்னஞ் சிறு வன கொடியே!!
நான் போகும் திசை நீ அறிவாயா ?
மேக மழைத் தூரலில் உன் குளியல் கண்ட என் மீது இன்னும் ஏன் இந்த நாணமோ?

பாடி திறியும் பறைவைகள் ஈன்ற கொடியே!!

தேசம் விட்டு தேசம் வந்தும்
நம் நேசம் மாரலயே!!

அது போல உன் நாணம் எனக்கு பொருக்கலயே!!

சாய்ந்து சாய்ந்து நீ ஆட!

மாய்ந்து தான் நானும் போரேனே! சின்னவளே!

சிகரம் தொட நினைப்பவளே என்னையும்
உன்னோட கூட்டிபோயே!!

Post a Comment

0 Comments