அனைவருக்கும் வணக்கம் நாம் இங்கு பார்க்கவிருப்பது ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் திருகோவில் அற்புதங்களைத் தான்
விஸ்வாமித்ரா கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் விஜயாபதி எனும் ஊரில் அமைந்துள்ளது
கூடங்குளம் அனுமின் நிலையம் செல்லும் பாதை சுற்றி உள்ள கிராமங்கள்
இராதாபுரம் எனும் ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர்
நாகர்கோவில் பொதுவான இடமான காவல் கிணறு என்ற இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவு, மற்றும் திருச்செந்தூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலவு கன்னியாகுமரியில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விசுவாமித்திரர் திருக்கோவில் தவச்சாலை, விஜயாபதி.
சற்குரு சத்திய ஞான தர்மசாலை சற்குரு சத்திய ஞானபீடம் முலைப்பால் தீர்த்தம். திரு அண்ணாமை அறக்கட்டளை சார்பாக தினமும் காலை 8:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மகரிஷிக்கு அபிஷேகவும், நெய்வேத்தியமும், பிராத்தனையும் நடைபெற்று, உலக மக்கள் நலம் பெற, இயற்கை சீற்றங்கள் வராமலும், கொடிய நோய்கள் வராமலும் வேண்டி தினசரி அருள்பிரசாதம் எனும் அன்னதானம் நடைபெறுகிறது.
அதுபோல மாதத்தோரும் விசாக நட்சத்திரத்தினன்று மகரிஷிக்கு மிகச்சிறப்பு பூஜை நடைபெரும்.
தியானம் பழகுபவர்கள், தவசிகள் இங்கு பலர் வந்து செல்கின்றனர், எப்போது சென்றாலும் மகரிஷி கோவிலை சுற்றி யாரவது ஒருவர் காட்சி தருவார்கள்,
மகரிஷியின் அருள் சன்னதிக்குள் நுளையும் போதே உணர முடியும், மகரிஷி சந்நதிக்கு இடது புறம் வினாயகர் சன்னதி உள்ளது. ஓம குண்ட வினாயகர் சன்னதி என்பதாகும் முதலில் அங்கு சென்று பிராத்தனை செய்து பின் மகரிஷியை பிராத்தனை செய்வது வளக்கம்.
விநாயகர் சந்நிதிக்கு இடது புறம் மகரிசி யாகம் செய்த இடம் உள்ளது இப்போது மழை நீர் நிறம்பி உள்ளது.
கோவில் வரறாறு ஆனது பிரம்மரிஷி இங்கு தஙகியிருந்து யாகம் செய்த இடம் அங்கு ஐயனுக்கு கோவில் எழுப்பி வழிபாடு செய்கின்றார்கள்.
1000 வருட பழமையான கோவில் பிரம்மரிஷி வரலாறு பின் ஒரு பதிவில் பார்க்கலாம்.
மற்றும் மகரிஷி கோவிலின் வலது புறம் சாய் பாபா சந்நிதியும் உள்ளது
அதன் பிறகு ஐயன் சிவபெருமான் ஆகிய ஆனந்தகூத்தன் கோவிலும் அருகில் அன்னை ஆனந்த வள்ளி திருக்கோவிலும் உள்ளது
பிரம்மரிஷி கோவிலில் இருந்து பார்க்கும் போது சிவபெருமான் கோவில் காட்சி இங்குள்ள சிவபெருமான் விஸ்வாமித்ரரால் வழிபாடு செய்த ஆனந்தகூத்தன் என்று அழைக்கப்படுகிறார்
மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும் அப்பன் பிரம்மரிஷி அருகின் சென்று அனைவரும் தரிசனம் செய்ய முடியும்.
இந்த பதிவை பார்பவர்கள் மகரிஷி அருள் பெற்றவராவீர்கள்.
நன்றி
🕉️
ReplyDelete