உயிர் தங்க வைத்ததேன்!?
உயிர் ஓட்டத்தினில்
எண்ணங்களை கொடுத்ததேன்?
அவற்றில் சரி தவறு என
பிரித்ததேனோ?
இப்படி பாகுபடுத்தி, பாடுபடுத்தி
கொடுக்கும் பாடம் புரிதலுக்காகவா!?
உணர்தலுக்காகவா?
ஊக்கமளிக்கும் உணவு பிரித்து, வாழ்வை பல பகுதிகளாக பிரித்து உடலில் இருந்து உயிர் பிரியும் வரை எத்தனை, எத்தனை பிரிவினைகள்
எல்லாம் பிரியும் என்ற போது
உடன் சார்ந்தோரோடு பிறியம் எதற்க்கு?
மானுடர்கள் கடைசி வரை புலம்பல்
என்றே புலம்பி, புலம்பி திறிய
பூலோகம் எல்லாம் நீ வாசம் செய்யவா?
கலி முற்றும், மனிதன் அவனை அவனெ அழிப்பான் அப்போது தான் வருவேன் என்றாய் மனிதர்கள் மீது அவ்வளவு வெறுப்பா உனக்கு?
அவ்வளவு காலம் பொருத்து இருந்து ஏன் வரவேண்டும்....
இப்போதே வந்து மனிதன் அந்த நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியாதா என்றால் நிச்சயம் முடியாது தான்...
என் சிறு வாழ்விலே நீ புரியவைத்திருக்கிறாய் என்பது உன்னை நான் திட்ட முற்படுகையில் எனக்கு நினைவூட்டினாய்....
எந்த அறிவுறையும் கேட்போர் இல்லை,
கேட்டாலும் செயல் புரிவோர் யாரும் இல்லை
காலத்தின் போக்கில் அவர்கள் அடிபட்டு
நொந்த பிறகே அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது...
உனது காத்திருப்பு நியாயம் தான்...
உன் வருகை வரை மானுட வேடத்தில் இருந்திட முடியாது தான்...இருந்திட விருப்பமும் இல்லை...
நீ பூலோகில் வாசம் செய்ய வரும் போது நான் படர்ந்து விரிந்த பெருவெளியினில் பேரொளியினில் ஐக்கியமாகி உன்
சேஸ்டைகளை காண ஆயுத்தமாக உள்ளேன்
பாவம் மானுடர்கள் எவ்வளவு அற்புதமான இடம் இந்த பூலோகம்...அதில் அவர்களை வாழ விடாமால் அவர்களில் சில பேருக்கு புத்தி எனும் நஞ்சை கொடுத்து அந்த சிலர் செய்யும் மோசமான செயல்களின் விளைவுகளை ஏதும் அறியாதவர்கள் அனுபவிக்க செய்வது தான் புரியாதா போதனை எனக்கு...
🍃நன்றி🍃
0 Comments
நன்றி