Posts

Showing posts from July, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

வடு

Image
வடு  காற்றினில் மிதந்து வரும் இலை,  அது வானுயர்ந்த ஒரு மரத்தினது  என்றறிந்தவர் உண்டோ ? ஓடையில் தவழும் மீனுக்கு அதன்  பிறப்பு காவேரி என்று தெரியுமோ  ? மண்ணில் நெழியும் புழு நட்சத்திர மண்டலங்கள் அறியுமோ ? காட்சிகள் எல்லாம் பிழை என்றானபின்  வர்ணனைகள் மட்டும் தஞ்சம் கொள்வது  ஏன் ? ஒற்றை வார்த்தையால், மொத்த வாழ்வையும்  கலகமாக்கிய நீ; இன்று வார்த்தைகளுக்கு வர்ணம்  பூசி செல்கிறாய் !! இடி விழுந்த ஆற்றின் வலியை யாரும்  அறிந்திட மாட்டார்கள் !! கடந்து சென்றே பழக்கப்பட்ட ஆற்று  நீருக்கு  பாரமென்ன ? பாவமென்ன ? பழிதான் என்ன? அத்தனையும் வடுவாய்; அக நீரோட்டத்தில், யாரும் காணாத அதன் மறுபக்கம்  பேரொளியின் கருணை துகளில் இருந்து நான்  பிரதீஸ் 

வலி (Pain !!)

Image
ஆற்று மீனுக்கு நீருக்கு என்ன பஞ்சம் ? நாணல் செடிகளுக்கு அரவணைப்பிற்க்கு என்ன பஞ்சம் ? தோகை விரிக்கும் மயிலுக்கு அழகுக்கு என்ன பஞ்சம் ?  கடல் நீருக்கு உப்பிற்க்கு என்ன பஞ்சம் ? ஆம், தஞ்சம் கொண்ட நெஞ்சுக்கு மனிதர்களின் சூட்சியினால் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது... அன்பிற்க்கு..... வார்த்தைகள் வற்றின; காற்றின் நெசவு மட்டும்  மனதை ஒருங்கே அழைத்துச் செல்கிறது... பேரொளியின் கருணை துகளில் இருந்து  நான் 🍃🍃🍃 -பிரதீஸ் 

எதை யாரிடம் நிரூபிக்க முயற்ச்சி செய்கிறாய் ?

Image
                       நம்மை நாம் யாரிடமோ. . நிரூபிக்க நினைக்கிறோம் ..   அதற்காக முயற்சி செய்கிறோம், அது வேலைக்காவோ! அல்லது வியாபரத்திற்காகவோ! ஏதோ தொழிலுக்காகவோ இருக்கலாம் … நாம் ஏன் நம்மை நிரூபிக்க வேண்டும் ? எந்த கோட்பாட்டின் மையத்தில் சுற்றி வருகிறோம் ? நிரூபிக்க நினைக்கும் காரணம் என்ன ? நம் திறமைகள் இங்கே பணமாக்க படுகின்றனவா ? பாராட்ட படுகின்றனவா ? பணம், பாராட்டு இவைகள் இல்லையென்றால் இந்த திறமைகள் என்னவாயிருக்கும் ? ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ஒவ்வொரு செயலும் நகருகிறது … அது மனிதனுக்கு பாராட்டு அல்லது பணம் என்ற பலனை எதிர்நோக்கி உள்ளது ; மற்ற உயிர்களுக்கு உணவு என்பதனை தாண்டி வாழ ஓர் இடம் அல்லது கூடு என்பதனை மையமாக கொண்டு நகருகிறது … மனிதனும் இப்படி இருந்து தான் தனது தேவைகளை அதிகமாக்கிக் கொண்டான் என்பது அனைவரும் அறிந்த கதை தான் … இருந்தும் ஏதோ ஒன்று வாழ்வின் தேடுதலாக்க பட்டிருக்கும் நிச்சயம், தேடுதல் இல்லாத வாழ்வு என்பது நிச்சயம் அர்த்தம் அற்றது தான் !! தேடுதல் மட்டுமே வாழ்வை முழுமையட செய்யும் … தமது தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொண்டி

ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்?

Image
 ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்? கூடாது என்று கூற கூற!! அது கூடி கொண்டே அல்லவா செல்லும், இது உணர்வுகளுக்கு மேல் தொடுக்கும் வன்முறையல்லவா!? ஏன் செல்ல பிராணி களாகவே இருக்க விரும்புகிறோம்? யாருடைய விருப்பங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம்? கடமைகளுக்குள் கட்டுப் பட்டு விட்டால், கடைசி வரை போராட்டம் தான் கவலைகளுடன்!!(வாழ்வுடன்) ஒரு உயிரின் வளர்ச்சியையும் வளரும் சூழ்னிலையையும் யாரோ தீர்மானிக்க!  ஏன் இந்த தனித்தனி அறிவு? தனித்தனி வடிவமைப்பு !! ஒரு 🐰 முயல் அழகாய் பிரந்தது பாவமா? மானிடரிடம் அகப்பட்டு தன் சுகந்திரத்தை இழந்து சோம்பல் பட்டு உண்டு உறங்க பழகி விட்டது !! பழக்கப்படுத்தியது நாம் தான் !! உதாரணத்திற்கு முயலை குறிப் பிட்டேன் ஆனால் !? எத்தனையோ உயிர்கள் அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன; உல்லாசமாய் வாழ வேண்டிய வாழ்வை மனம் கனமாய் கூண்டிலே அடைபட்டு அல்லல் உறுகின்றன; இப்படி தான் காமமும் அது அடைத்து வைக்கபட வேண்டியது அல்லவே!! அது என்ன என்று தெரியாத வரை யாருக்கும் பாரம் இல்லை!! ஆனால் நீங்களோ ! எங்களை சுற்றி மற்றும் எங்களுக்குள்,… கடுமையான ஆபாசங்களை அல்லவா விதைக்கின்றீர்கள்!? இந்த காலம் மாற்

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி இரண்டு) Birth of Yogi (Part 2)

Image
  நண்பன் தொடருகிறான்...                                                       அவர் இதற்கு முன்பும் இதே ஊரில் பிறந்து நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் தான் என்றான்! எனக்கு  ஆச்சர்யமாகக  இருந்தது!! என்ன கூறுகிறாய் என்று  ஆச்சர்யத்துடன்  கேட்டேன் ? நண்பன் ஆமாம் அவரை எனது அப்பா பார்த்துள்ளார் எங்களுடைய ஊரில் பல பேர் பார்த்துள்ளனர் அவர் அந்த ஜென்மத்தில் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தார்.  அவரது முப்பத்துமூன்று வயதுவரை அதன் பின்பு முழுவதும் யோகத்தில் இறங்கிவிட்டார் தன்னுடைய  முப்பத்துஐந்து  வயதில் திருமணம் செய்தார் இரண்டு வருடம் குழந்தையில்லை அனைவரும் அவருடைய  மனைவியை  தவறாக பேசினார் என்ன கூறியிருப்பார்கள் என்று  சொல்லவேண்டியதுயில்லை  என்று நிலைக்கிறேன்..?  ஆம் ஆம் புரிகிறது நீ கூறு அதன்பின் என்ன நடந்தது என்று கேட்டேன்?   அவர் அன்று இரவு அனைவர்  முன்னுலையிலும்  கோவிலில் அதோ அங்கு  வைத்து  தான் பேசினார் என்று கூறுவார்கள் அந்த நினைவாகவே அங்கு அந்த கற்சிலை வைக்கப்பட்டுள்ளது.   சரி அவர் அனைவர் முன்னிலையிலும் என்ன கூறினார்? என்று நான் கேட்டேன்? அவன் கூற ஆரம்பித்தான்... அப்போது கோவில்  கீழ்சாந்தி  அந்த மு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *