நண்பன் தொடருகிறான்...
அவர் இதற்கு முன்பும் இதே ஊரில் பிறந்து நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் தான் என்றான்! எனக்கு ஆச்சர்யமாகக இருந்தது!! என்ன கூறுகிறாய் என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன் ? நண்பன் ஆமாம் அவரை எனது அப்பா பார்த்துள்ளார் எங்களுடைய ஊரில் பல பேர் பார்த்துள்ளனர் அவர் அந்த ஜென்மத்தில் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தார்.
அவரது முப்பத்துமூன்று வயதுவரை அதன் பின்பு முழுவதும் யோகத்தில் இறங்கிவிட்டார் தன்னுடைய முப்பத்துஐந்து வயதில் திருமணம் செய்தார் இரண்டு வருடம் குழந்தையில்லை அனைவரும் அவருடைய மனைவியை தவறாக பேசினார் என்ன கூறியிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதுயில்லை என்று நிலைக்கிறேன்..?
ஆம் ஆம் புரிகிறது நீ கூறு அதன்பின் என்ன நடந்தது என்று கேட்டேன்?
அவர் அன்று இரவு அனைவர் முன்னுலையிலும் கோவிலில் அதோ அங்கு வைத்து தான் பேசினார் என்று கூறுவார்கள் அந்த நினைவாகவே அங்கு அந்த கற்சிலை வைக்கப்பட்டுள்ளது.
சரி அவர் அனைவர் முன்னிலையிலும் என்ன கூறினார்? என்று நான் கேட்டேன்? அவன் கூற ஆரம்பித்தான்... அப்போது கோவில் கீழ்சாந்தி அந்த முதியவர் எங்களிடம் வந்து தம்பி நடை சாற்ற வேண்டும் என்று பணிவுடன் கூறினார்.
நண்பன் சரி ஐயா என்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் நாங்களும் குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து நண்பன் வெளியே அழைத்துச் சென்றான்... ஆனால்!!
என்னுடைய மணமோ அந்த இளம் வயது அர்ச்சகரைப் பார்த்தாக வேண்டும், அவரிடம் பேசவேண்டும், அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று முழுக்க முழுக்க அவரை பற்றியே சிந்தனைகள் ஓடியது...
நான் நண்பனிடம் கேட்டேன் நண்பா அந்த பூஜாரியை நேரில் சந்தித்து பேச முடியாத ? என்று; நண்பன் கூறினான்; இப்போது பார்க்க முடியாது இரவு நேரங்களில் அவர் யாரையும் சந்திப்பது இல்லை.
அதுமட்டுமல்ல அவர் கோவில் நடைதிறந்த பின்பு யாரிடமும் பேசுவது இல்லை. முழு மௌனத்தில் இருப்பார். பூஜை முடிந்த பின் மறுநாள் காலைவரை கோவிலின் வெளிப்புறத்தில் வடக்கு வாசலில் முழுவதும் தவத்தில் இருந்து விடுவார்.
அவரை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள், ஆனால்; இரவு நேரங்கள் பல முறை அவர் அருகினில் பாம்பு அல்லது பெரிய நரி உறங்குவதை ஊரில் பலரும் கண்டுள்ளனர்!!
நரியா இந்த ஊரில் இப்பொழுதும் நரிகள் உள்ளனவா என்று கேட்டேன்? ஏனென்றால் நகரமாக மாறிவரும் பலகிராமங்களில் நரிகள் என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது, என்னுடைய சிறுவயதில் இருந்து நான் சுற்றியுள்ள ஊர்களில் நரிகளை பார்த்ததே இல்லை!!
அதனால் தான் உடனே எனக்குள் அப்படியொரு கேள்வி எழுந்தது! அப்படியிருக்க ஒரு நரி அதுவும் பெரிய நரி எப்படி சாத்தியம்! என்று தோன்றியது? ஆனால் நண்பன் கூறினான்; ஆம் இல்லை தான், அதனால் தான் அனைவரும் அதனை ஆச்சர்யமாக கூறுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் நரி போகர் சித்தரின் வாகனம் என்றும் கூறுவார்கள்...
சித்தர் போகர் அருள் அவருக்கு முழுவதும் உள்ளது என்பதை ஊர் மக்கள் அப்படித்தான் அறிந்து கொண்டனர்... ஆம் நானும் கேள்விபட்டிருக்கிறேன் போகர் சித்தரைப்பற்றி.
அதுமட்டுமல்லாமல் அடிகடி வரும் அந்த பாம்பு சக்தியின் வடிவம் என்றும் கூறுவார்!! இப்படி பல ஆச்சர்யங்களை கூறிக்கொண்டே இருக்கும் போது இன்னும் ஒரு அதிசய உண்மையை நண்பன் கூறினான்.
அது தான் கீழ்சாந்தி பற்றியது, ஆம் அந்த கீழ்சாந்தி வேறு யாரும் இல்லையாம் அவர்தான் பூசாரியின் பூட்டனார் அதாவது பூசாரியின் முந்தைய ஜன்மத்தில் அவருடைய தாத்தா அப்படி என்றால் பூசாரி அவரின் கொள்ளு பேரனா ? என்று கேட்டேன் ?
ஆம் அவர் தான் கொள்ளு பேரன் என்றான்; எனக்கு இப்படியொரு அதிசயத்தை கேட்டு உடல் புல்லரித்தது போகரின் அருள், சக்தியின் கருணை, இரவு தவம் என அனைத்தும் என் சிந்தையுள் என்னை உருகச்செய்தது.
அப்படியிருக்க அனைவரும் அவரை சாதாரணமாகவே கடந்து செல்கின்றனர்களே யாருக்கும் அவருடன் இருக்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லையா என்று கேட்டேன்?
நண்பன் கூறினான்; அனைவருக்கும் அவரிடம் பேச வேண்டும், அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று ஆசைதான், என்ன செய்ய ஊரே அவருக்கு செய்த துரோகத்தால் வெட்கி, விலகி நிற்கிறது.
என்ன!! என்ன? நடந்து அப்படி என்று நான் பதற்றத்தோடு கேட்க ? நண்பன் கூற ஆரம்பித்தான் !....
அனைத்தும் விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன் என்றான்
தொடரும்.....
பேரொளியின் கருணைத் துகளில் இருந்து நான்.....
பிரதீஸ்
I'm waiting for next episode
ReplyDelete