கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்?

 ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்?



கூடாது என்று கூற கூற!! அது கூடி கொண்டே அல்லவா செல்லும், இது உணர்வுகளுக்கு மேல் தொடுக்கும் வன்முறையல்லவா!?

ஏன் செல்ல பிராணி களாகவே இருக்க விரும்புகிறோம்?

யாருடைய விருப்பங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம்?

கடமைகளுக்குள் கட்டுப் பட்டு விட்டால், கடைசி வரை போராட்டம் தான் கவலைகளுடன்!!(வாழ்வுடன்)

ஒரு உயிரின் வளர்ச்சியையும் வளரும் சூழ்னிலையையும் யாரோ தீர்மானிக்க! 

ஏன் இந்த தனித்தனி அறிவு? தனித்தனி வடிவமைப்பு !!

ஒரு 🐰 முயல் அழகாய் பிரந்தது பாவமா?

மானிடரிடம் அகப்பட்டு தன் சுகந்திரத்தை இழந்து சோம்பல் பட்டு உண்டு உறங்க பழகி விட்டது !!

பழக்கப்படுத்தியது நாம் தான் !!

உதாரணத்திற்கு முயலை குறிப் பிட்டேன் ஆனால் !?

எத்தனையோ உயிர்கள் அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன;

உல்லாசமாய் வாழ வேண்டிய வாழ்வை மனம் கனமாய் கூண்டிலே அடைபட்டு அல்லல் உறுகின்றன;

இப்படி தான் காமமும் அது அடைத்து வைக்கபட வேண்டியது அல்லவே!!

அது என்ன என்று தெரியாத வரை யாருக்கும் பாரம் இல்லை!!

ஆனால் நீங்களோ ! எங்களை சுற்றி மற்றும் எங்களுக்குள்,…

கடுமையான ஆபாசங்களை அல்லவா விதைக்கின்றீர்கள்!?

இந்த காலம் மாற்றத்திற்கான காலம், மாற்றத்தினில் மத்தியில் சிக்கிக் கொண்டது எங்களுடைய தலைமுறை மட்டுமே!!

இருந்துவிட்டு போகட்டும்…

ஆனால் நீங்கள் எதை மறைக்க முயற்சி செய்தீர்களோ!?

அதுவே தானாகவே இன்று வெளிப் படை யாகிக் கொண்டு இருக்கிறது!!

காணும் இடம், செல்லும் இடம் என எல்லா இடங்களிலும் ஆபாசத்தை நிரைத்து வைத்துள்ளீர்கள்!!

ஆனால் பார்க்க தடை விதிக்கப்பட்டது!!

அம்மணமாய் உருவாகிய நாம் மீண்டும் அம்மணத்திற்க்கே மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்;

செடியில் புதிதாய் துளிரும் கிழையைப் போலவே தான் காமமும்!!

அது துளிரும் போது அதனை கிள்ளி எறியாதீர்கள்;

அதற்க்கான சுகந்திரத் தைக் கொடுங் கள்; 

துளிரும் இடத்தினில் ஏதேனும் தடை இருந்தால் அந்த மரக் கிளை அது சுகந்திரமாய் வளர வழி தேடி செல்லும்..

அதை தடுத்திட முடியாது சிறிது நாட்களில் இருந்த தடைகளை எல்லாம் தகர்ந்து எறிந்து விட்டு அது பிரமாண்டமாய் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும்….

அது போலத் தான் வேண்டாம் வேண்டாம் என்று கூற, கூற அது வேண்டும், வேண்டும் என்று மனம் கிரகித்துக் கொள்ளும்…

அதன் வேகம் கூடும்…

தேவைகள் நிறைவேறும் போது மட்டுமே வாழ்கை நிறைவு அடைகிறது….

உடல் தேவை மனத் தேவையாக மாறி அது நிறைவேறாது… 

போக போக அதன் தாக்கம் நமது வாழ்வில் வேறு ஏதாவது செயலில் நம்மை முழுமை படுத்த விடாது;

நாம் நம்மால் புரிந்து கொள்ள இயலாத படி ஏதாவது ஒரு மன அலுத்தத்தில் இருந்து கொண்டே இருப்போம்;

பார்க்கும் பாவை எல்லாம் ஆபாசமாக சித்தரிக்க தோன்றும்!!

கண்ணன் அந்த கிருஷ்ணன் மானுட ரூபத்தில் காமம் தவறு என்று கூறவில்லை; காமம் வேண்டாம் என்று சொல்லவில்ல;

ஆனால் இயற்கையை மீறவில்லை யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை

அந்த காமம் எப்படியோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டான்!!

அப்படியே இயற்கையை தடுக்காதீர்கள் அதன் போக்கிலேயே அதனை சீரான வழிமுறையில் அறிந்து கொள்ளுவோம்!!

வாழ்வில் இல்லாதை ஒன்றை இருப்ப தாக நம்பி ஏமாற வேண்டாம்….

நாம் நாமாக நம்மால் முடிந்த நல்லதை செய்வோம்… 


நன்றி....







Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *