உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
கடும் பஞ்சம் ஒன்று பாராட்ட -போகிறதாம் !!
அதன் எச்சம் இன்று பொருளாதார
-மந்த நிலை என்பதவாம்..!!
இயற்கையின் பேரிடரும் அதற்கு ஒரு
-கூறாம்
பிணகூட்டங்களை வேட்டையாட பருந்து
-கூட்டங்கள் தயாரானவாம்..!!
மனித மாமிசமே, தஞ்சமாம் கொடும்
-பசிக்கு ...!
காக்கை கூட்டங்களே அதற்க்கு
-சான்றாம்!!
மதிப்புயர்ந்த காகிதங்களும்
-மண்ணில் உறமாச்சி...!!
கறையானின் கோபுரமாச்சி...
பொழுதிரண்டு இன்று பாதியாச்சி
-மதி கொண்டோர் சாம்பல் காற்றில்
கலவையாச்சி..!!
மூச்சற்று போயாச்சி...
- யான் பேரொளியிலிருந்து.
- பிரதீஸ்

NICE
ReplyDelete