செட்டியாரு அவரோட தோப்ப சுத்தி பாக்குராரு பலவருடம் நெல் விவசாயம் நடந்த இடம் விளைச்சல் குறைவு விலைவாசி இல்லாததுனால் தென்னையை கொண்டு நட்டாங்க தேங்காய் வியாபாரம் கொடி கட்டி பரந்துச்சி இங்க நிக்கிர தென்னுங்களுக்கு எல்லாம் குறைந்தது 40 வயது இருக்கும் இப்போம் கொஞ்சம் வருடமா தென்னைக்கு ஊடுபயிரா வாழை போடுராங்க எல்லாம் நேந்திர பழ வாழை இங்க இருந்து எல்லாம் கேரளாக்கு வியாபாரத்துக்கு போகுது நல்லா லாபம் தந்த தொழில் தா புயல் ல நிறைய சேதாராம் ஆச்சிது அப்புறம் இந்த கொரோனா னால வியாபாரம் எல்லாம் முடிங்கி போச்சி
எல்லாம் சாதாரண விசியம் இல்ல விவசாயிக்கு தான் அதோட கஷ்டம் தெறியும்...
செட்டியார ஊருல இருந்து ஒரு பயன் போய் பாக்குறான்
பையன்; ஐயா வணக்கம்
செட்டியாரு : வணக்கம் தம்பி வாங்க
நீங்க...
பையான் ; ஐயா நான் செல்லகண்ணு பயன்
செட்டியார் ; அவரோட பயனா நீ அதான எங்கயோ பாத்த மாதிரி ஞாபகம் அப்பா எப்படி இருக்காரு?
பையன் ; அவருக்கு முன்னால மாதிரி உடம்பு முடியல
செட்டியாரு : என்ன என்ன ஆச்சி
பையான் ; ஐயா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்
நீங்க விவசாயம் பண்ணுரிங்க ஊருல 70% சொத்து உங்களோடது தான் இங்க மட்டும் இல்ல நிறைய ஊருல உங்களுக்கு சொத்துகள் நிறைய இருக்குது எல்லா இடத்துலயும் வாழை தென்னை எல்லா பயிரும் விவசாயம் பண்ணுரீங்க எல்லாத்துக்கும் செயற்கை உறம் தான் வெக்குறீங்க அத மாத்த முடியாது உங்கள பொருத்த வரை இது தொழில் முதலுக்கு அதிகமா வருமானம் வரணும் அது தான் உங்களோட போராட்டமா இருக்கும்
ஆனா எங்களுக்கு வாழுரதே போராட்டமா இருக்குது. நீ வியாபரம் பண்ணுர பொருள தான் நாங்க வாங்குரோம் செயற்கை கலந்தது தான் சரி பரவால சின்ன சின்ன செடிகளா நீங்க பாக்குர இதோட நிறைய மூலிகை செடிகளும் கலந்து இருக்குது நீங்க தோப்பு கழைக்குறது நல்லது ஆனா அதுக்கு முன்னாலா எல்லா செடிகளுக்கும் களை கொல்லிங்குற விசத்த தெளிச்சி செடியோட சேத்து எல்லாத்துக்கும் மண்ணுக்கும் மனுசனுக்கும் விசத்த தெளிக்கிறீங்க ஊருல வாழுற மக்கள் எல்லாம் இந்த காத்த தான் சுவாசிக்கிறாங்க உங்க கிட்ட வேலை செய்தவரு தான் எங்க அப்பா களை கொல்லி அவரு தான் அடிச்சிட்டு இருந்தாரு இப்போம் மூச்சுத்திணறல் சுவாச கோளாரு ஏற்பட்டு படுத்த படிக்கையாகிட்டாரும் எனக்கு வந்தது எங்க ஊர் மக்களுக்கு வர கூடாதுனு தான் உங்க கிட்ட சொல்லிரேன்
உங்களோட வாழ்க்கையை முன்னேற்ற எங்க உயிர எடுக்குரீங்க
மிஞ்சி இருக்கிற கொஞ்சம் மூலிகைகளையும் மக்களளையும் காப்பத்த உங்கள போல முதலாளிங்கதான் முதல்ல மாற்றத்த கொண்டு வரணும் ஆளும் வர்க்கம் மாறுனா சாதாரண மனுசன் அவனும் மாரிடுவான்.
நம்மளோட அடுத்த தலைமுறைங்களுக்கு விதையை விருட்சமா மாத்துரது மன்னுக்கு தெறியாம போய்ட கூடாது மண் மலடானா மானுடன் மட்டும் இந்த இந்த உலகமே கரிகோள் பந்தாகும்...
செட்டியாரு வீட்டுல போய் உக்காருராரு அவரால அமைதியாக இருக்க முடியல அவரு மனசுல திரும்ப திரும்ப அவன் சொன்ன வார்த்தைகள் கேக்குது அவரு எல்லாரயும் இயற்கை உரத்துக்கு மாற சொல்லுராரு...
Comments
Post a Comment
நன்றி