என்று அருபடுமோ உறவெனும் ஊஞ்சல் கயிறு?

நிஜம் என்று தான் நினைத்து இருந்தேன்
நித்தமும் உன் சேவை கண்டு!!

நிழல் தான் நான் என்று ஊர்ஜிதப்படுத்தினாய்
உன் பிரிவை எனக்கு தந்து!!

கடல் என்று தான் ரசித்து இருந்தேன் 
பெரும் பிரளயமாகி  மூழ்கடித்தாய்!!

புல்வெளி தான் என்று கிடந்துருண்டேன்
பூகம்பமாய் விழுங்கி விட்டயாய்!!

சுவாசத்தின் நேசத்தில் தனித்திருந்தேன்
வேசம் என்றாகி விலக்கி விட்டயாய்!!

வெறுப்பினில் வெம்பி தவித்திருந்தேன்
பொருபெனும் வேட்கை தந்து மறைந்தாய்!!

பொருப்பினை ஏற்க மறுத்தேன்
உறவுகள் என்னும் ஊஞ்சல் தந்தாய்!!

ஆடிட மறுத்தேன்!! 
ஆட வைத்தாய்!!
ஆடி கொண்டு இருக்கின்றேன்!!

என்று அருபடுமோ உறவெனும் ஊஞ்சல் கயிரு!!?

Post a Comment

0 Comments