Posts

Showing posts from September, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

என்றென்றும் அவள்

பூமி  எங்கும்  வண்ண  வண்ண மலர்கள்  விரித்து அதில்  உந்தன் பாதம் பதிய ஓர் எல்லையில் ஆரம்பிக்கும் உன்  பயணம்.... உன்  பாதங்களை ஏந்திய  மலர்களின் நறுமணம்  ஆயிரம் ஆயிரம்  மடங்கு கூட...... கடை  கோடியில் உன்  பாதங்களை  தாங்க  காத்து  கிடக்கும்  மலர்கள்...... நீ  சற்று  தாமதித்தாலும் மாண்டு  போகும்  அபாயாம் உண்டு.... வா உடனே மலர்களோடு மலர்களாக நானும் உன்  வரவை  எண்ணி காத்து கிடக்கின்றேன்...... உன் பாதம் பதித்து உனக்காக  ஏங்கும்  மலர்களுக்கு  முக்தி  கொடு.....

அவன் நினைவுகள்

ஆசையாக உன்  கன்னங்களைத்  தழுவிட  வந்தேன்.. என் கைகளை உதரிவிட்டாய்...! உனக்காக  என்  வார்த்தைகளைச் சேகரித்தேன்.. உண்டியலை குப்பையில் போட்டாய்...! ஒரு நேரம்  கிரீடம் சூடி அழகு  பார்த்தாய்...! மறுநேரம் மங்கை என்னை வெறுப்பு  எனும் மாய வளையில்  தள்ளி விட்டாய்...! வேண்டாம்  என நான் சொல்லுமுன் விலகி சென்றாய்...! கடல் வேண்டாம் என்று நண்டு விலகுமோ? பூ வேண்டாம் என்று வண்டு போகுமோ? நீ மட்டும்  விலகினால் அதன் அர்த்தம் என்னவோ? நான் வேண்டாம் என்று  நீ முடிவு  செய்தது தானே......

அவள் பகுதி 3

அவளுடைய படபடத்த  குறலை கேட்டு முருகு  ஓடி வந்தான் அவள்  விஷயத்தை கூற  இருவரும் வேகமாக  அவனை நோக்கி சென்றனர்... முருகு பார்வதியிடம்  புலம்பி கொண்டே  செல்கிறான் எத்தனை  முறை சொன்னேன் அவனிடம், என்பேச்சை கொஞ்சம்  கூட கேக்கவே மாட்டா... நீயாவது சொல்லலாம் ல மா... அவள் மவுனம் காத்த  படியே பரிதவித்த  மனதுடன் பேசமுடியாது  நடந்து கொண்டிருந்தாள். அவனை நெருங்கியாயிற்று  தெரு குழாய் சுவரில்  அவனை சாய்த்து  அமர வைத்திருந்தார் ரவி.  அவன் எதேற்ச்சியாக  இடபுறம் திரும்பி பார்க்க  தன் மனைவி வருவதை  கண்டு அலறியடித்து  கொண்டு எழும்ப முடியாமல்  தள்ளாடி எழுந்தான்.. அவனை பார்த்த அந்த  நொடி அவளை அறியாது  கண்களில் கண்ணீர்  மடை நிறந்த வெள்ளமாக புறண்டோடியது...அவள்  அவன் கைகளை இருகப்  பற்றிகொண்டாள்.... தொடரும்....

கொலுசு

Image
தங்க கால்களுக்கு வெள்ளி கொலுசு!! கொலுசின் ஓசையோ இதய கீதம் எனக்கு!! நீ சிரிக்க புது வித போதை ஆகுது எனக்கு!! உன்னை நினைக்க ஏகந்தம் அடைகிறது மனம்!! உன்னை மட்டுமே எண்ணி அலையும் அது தினம்!! நீ  பேசத பொழுது எல்லாம் ஏதோ கனம்!! நீ  இல்லை என்றால் நான் வெறும் சவம்!!

காற்மேக காதல்

கார்மேக  கூட்டங்கள்  தழுவும்  மலை  முகடுகள்!! காதலில்  தவிக்கும்  மலை  நான்!! காற்றோடு  கலந்து,  கறைந்து  உன்னோடு மிதக்க  எத்தனிக்கிறேன்!! நானோ  நிலையானவன்!!  நீயோ  நிலையற்றவள்!! என்னை  தழுவி  செல்கையில்  என்  உயிரையும்  ஏங்க  செய்கிறாய்!! உன்  பின்னாலே எழுந்து  ஓடி வர நினைக்க செய்கிறாய்!! நடு வானின் வீதி எங்கும் அலைந்த களைப்பு உனக்கு!! நெடுனாளாய் அமர்திருந்த களைப்பு எனக்கு!! காற்று வீசும் திசை எங்கும் அழைப்பு உனக்கு!! காற்றை திசை திருப்பும் பொருப்பு எனக்கு!! வானெங்கும் பறக்கும் தேவதை நீ!! வானுயர்ந்து நிற்கும் அரசன் நான்!! என்னை உன்னில் புதைக்கும் போதொல்லாம் புத்துயிர் பெருகிறேன் நான்!! உன்னிலேயே புதைந்திருக்க செய் எந்தன் கார்மேக காதலே!!

பெரும் துயர்

அழகு சோலை  நடுவே மலர்களின்  நறுமணத்தினுடே  மனம் கவர்ந்த நாயகி  கைபிடித்து நடக்கையில்  கலையும் கனவின்  ஏமாற்றம்!! கடைசி பந்தில்  எடுக்க வேண்டிய  ஆறு ரண்களின்  எதிர்பார்ப்பு!! சிறுத்தையின்  கால் பிடியில்  இருந்து உயிர்பிழைக்க  போராடும் மானின்  வேதனை!! கற்பனை மட்டுமே  வாழ்வு முழுவதையும்  கடந்தும்  பார்வையற்றவனின்  ஏக்கம்!! காரிருள் சூழ்ந்த  வனத்தில் தனிமையில்  தவிக்கும்  ஒருவனின்  பயம்!! காரணம் ஏதும்  இல்லாமால் கத்தி  கூச்சலிட்டு சிறிக்கும்  பைத்தியகாரனின்  சிறிப்பு!! இவையெல்லம்  ஒரு சேர ஒரே  பொழுதில்  அத்தனையும்  என்னை சூழ்ந்து  கொண்டாயிற்று!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *