அழகு சோலை
நடுவே மலர்களின்
நறுமணத்தினுடே
மனம் கவர்ந்த நாயகி
கைபிடித்து நடக்கையில்
கலையும் கனவின்
ஏமாற்றம்!!
கடைசி பந்தில்
எடுக்க வேண்டிய
ஆறு ரண்களின்
எதிர்பார்ப்பு!!
சிறுத்தையின்
கால் பிடியில்
இருந்து உயிர்பிழைக்க
போராடும் மானின்
வேதனை!!
கற்பனை மட்டுமே
வாழ்வு முழுவதையும்
கடந்தும்
பார்வையற்றவனின்
ஏக்கம்!!
காரிருள் சூழ்ந்த
வனத்தில் தனிமையில்
தவிக்கும்
ஒருவனின்
பயம்!!
காரணம் ஏதும்
இல்லாமால் கத்தி
கூச்சலிட்டு சிறிக்கும்
பைத்தியகாரனின்
சிறிப்பு!!
இவையெல்லம்
ஒரு சேர ஒரே
பொழுதில்
அத்தனையும்
என்னை சூழ்ந்து
கொண்டாயிற்று!!
0 Comments
நன்றி