மாய உடல்

மாய 
உடல் 
தனில் 
மதி 
மயங்க 
வைத்தது 
ஏனோ?

உடலெனும் 
மாயையில்
உணர்வெனும் 
வேட்கை தந்து
உருகுலைய 
வைப்பதேன்?

உயிர் நிலை 
விளக்கமளித்து
உணர 
முற்படுகையில் 
ஆயிரம் 
தடைகள் 
ஏனோ?

பரி என்ற 
வாசியேரி, 
காரண
உலகுள்ளே 
நுழைய 
பாடு 
பலவுமுண்டோ?

வையகத்தில் 
உயிரெல்லாம் 
மாய சேய் 
என்றால்!!
படைத்ததன் 
நோக்கமென்ன?

உலகம் பல 
படைத்து 
உலவ உயிர் 
படைத்து 
பாதி 
வாழ்வில் 
உயிர் 
பரிக்கும் 
உந்தன் 
நோக்கமென்ன!!



Post a Comment

0 Comments