அருகில் வந்த கமலா மனதில்
கொண்டுள்ள பொராமை தெறியாது
தளர்ந்த குரலினில்
பார்வதி உன்னோட வீட்டு காரர்
வடக்கு வீதியில நடக்க முடியாம
தள்ளாடி கீழே விழுந்து கிடக்கு
ரவி அண்ணா தூக்கி பாத்தாங்க
அவராலயும் தூக்க முடியாம
பக்கத்துல நின்னுட்டு இருக்கு நீ முருகு அண்ணாவ கூட்டிட்டு போ என்றாள்.
செய்வதறியாது தவித்து போன
பார்வதி வயிற்றில் ஏழு மாத
சிசுவையும் சுமந்து கொண்டு
ஓட முடியாமல் நடக்கவும் முடியாது
அவள் மனதினில் கமலா கூறிய
அந்த செய்தி அவள் கனவு, ஆசை, பசி அத்தனையையும்,
கடந்து பெரும் சூரைகாற்று தனது
வாழ்வை சூறையடித்து சென்றதான
பெரும் வலி அவள் மனதிற்குள்
அந்த கனம் அவள் பட்ட வேதனை
ஆள் அற்ற காட்டிற்க்குள் தன் கை குழந்தையை தவிக்க விட்ட தாயை ஒத்திருந்தது.
முருகு அண்ணா என வாசலில்
நின்றபடி பார்வதி அழைக்க....
யாருமா என்று வீட்டினுள் நடந்த
படியே முருகு கேட்க......
அண்ணா நான் தான் பார்வதி...
0 Comments
நன்றி