அவளுடைய படபடத்த
குறலை கேட்டு முருகு
ஓடி வந்தான் அவள்
விஷயத்தை கூற
இருவரும் வேகமாக
அவனை நோக்கி சென்றனர்...
முருகு பார்வதியிடம்
புலம்பி கொண்டே
செல்கிறான் எத்தனை
முறை சொன்னேன் அவனிடம்,
என்பேச்சை கொஞ்சம்
கூட கேக்கவே மாட்டா...
நீயாவது சொல்லலாம் ல மா...
அவள் மவுனம் காத்த
படியே பரிதவித்த
மனதுடன் பேசமுடியாது
நடந்து கொண்டிருந்தாள்.
அவனை நெருங்கியாயிற்று
தெரு குழாய் சுவரில்
அவனை சாய்த்து
அமர வைத்திருந்தார் ரவி.
அவன் எதேற்ச்சியாக
இடபுறம் திரும்பி பார்க்க
தன் மனைவி வருவதை
கண்டு அலறியடித்து
கொண்டு எழும்ப முடியாமல்
தள்ளாடி எழுந்தான்..
அவனை பார்த்த அந்த
நொடி அவளை அறியாது
கண்களில் கண்ணீர்
மடை நிறந்த வெள்ளமாக புறண்டோடியது...அவள்
அவன் கைகளை இருகப்
பற்றிகொண்டாள்....
தொடரும்....
0 Comments
நன்றி