அவன் நினைவுகள்

ஆசையாக உன் 
கன்னங்களைத் 
தழுவிட 
வந்தேன்..
என் கைகளை
உதரிவிட்டாய்...!
உனக்காக 
என் 
வார்த்தைகளைச்
சேகரித்தேன்..
உண்டியலை
குப்பையில்
போட்டாய்...!
ஒரு நேரம் 
கிரீடம் சூடி
அழகு 
பார்த்தாய்...!
மறுநேரம்
மங்கை
என்னை
வெறுப்பு 
எனும் மாய
வளையில் 
தள்ளி
விட்டாய்...!
வேண்டாம் 
என நான்
சொல்லுமுன்
விலகி சென்றாய்...!
கடல் வேண்டாம்
என்று
நண்டு விலகுமோ?
பூ வேண்டாம்
என்று
வண்டு போகுமோ?
நீ மட்டும் 
விலகினால்
அதன் அர்த்தம்
என்னவோ?
நான் வேண்டாம்
என்று 
நீ முடிவு 
செய்தது தானே......


Post a Comment

0 Comments