பல நேரங்களில் இந்த வாழ்வின் பயணம் புது புது மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்யும் என்பதில் எந்த ஆட்சோயப்பனையும் இல்லை, எதார்த்தமான பயணத்தின் போது நடக்கும் பல சுவாரஸ்ய தருணங்கள் வாழ்வின் எந்த நொடியும் மறப்பதில்லை. ஆம் சில வருடங்கள் முன்பு சிங்கம் சிங்கம் என்று தான் அவர் என்னை எப்பொழுதும் அழைப்பார் அவருடைய வேலையை எளிதாக்க மட்டும் இல்லை என் தோற்றத்தை கொண்டும் அப்படி என்று விளக்குவார் பல தருணங்களில்,
யாருடனும் அதித நெருக்கம் காட்டிட விருப்பம் இல்லாது நான் நினைப்பது போல் எண்ணத்தில் உதிக்கும் இடம் அலைந்து பயணத்தை இரசிக்கும், இராட்ஷசன் நான் என்பது எனக்கு நானே கொடுக்கும் பட்டம்.
காலம் பல அனுபவங்களை கொடுக்கும் அதனை பாடமாக அறிந்து கொண்டுவிட்டால் நம்மை போல சிறப்பான மனிதன் யாரும் இல்லை பல உபதேசங்கள் கொடுக்க அவனுக்கு தகுதியும் இந்த இயற்கை கொடுக்கும்.
அவர் அன்று முதல் நாள் என்னை சந்திக்கிறார் நான் முதல் முறை பார்க்கிறேன் அவரை, ஆனால் பல முறை கேள்வி பட்டிருக்கிறேன் ஆம் அவர் பெயர் மூர்த்தி சிறிது உயர் குறைந்த மனிதர் டான் 4.2 அங்குலம் இருப்பார் தோராயமாக தமிழ் நிறம் ஆங்காங்கே சிறிது நறைத்த முடி சிரித்த முகம்.
இப்படி கூறிக்கொண்டே போகலாம் என்னை நேரில் யாரும் பார்க்கவில்லை என்றாலும் என்னை அனைவருக்கும் தெரியும் வேளையில் சேர்ந்து சில நாட்களிலேயே பல புது புது வியூகங்களை செயல்முறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற செய்திருந்தது இயற்கை.
அதனால் என்னை பார்த்ததும் அவரால் என்னை அறிந்திருக்க முடிந்தது என்னை அடையாளம் கண்டு கொண்டார் நீங்கள் தான் அவரா என்கிறார் நான் ஆம் நீங்கள் ? என்றேன் அவர் அவரை அறிமுகம் செய்து கொண்டார் பார்க்க சிங்கம் பாதிரி இருக்கியே பா என்கிறார் நான் பணிவாக சிறிய புன்னகை கொண்டேன் கடந்து செல்ல ஆயத்தம் ஆனேன், சரி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் செய்த வேலைகள் சிறப்பானது என்கிறார் நன்றி என்று புன்னைகைத்தான்,
சரி சிறுது வேலை உள்ளது நான் உங்களை பிறகு சந்திக்கிறேன் என்று அவரே கூறிவிடடார். மனம் லேசானது புதிதாக இப்படி யாராவது பேசும் பொழுது அதனை தொடர தெரியவில்லை, இதை தவிர்த்து பணி சம்மதமாகவோ அல்லது தெரிந்த வேறு ஏதாவது கருத்தை பற்றியோ யாராவது பேசினால் அவர் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அங்கு நம்முடைய கருத்து தான் முதலாக இருக்கும்.
சரி நான் யார் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம் ! நான் தான் மாறன் எனது ஊர் தூத்துக்குடி அருகினில் குருவிருந்த திருவூர் என்ற ஊர் என்னுடைய ஊர்,
நான் பணிபுரியும் இடம் பாளையம் அங்கு தான் நான் அந்த மனிதரை சந்தித்து பழக நேர்ந்தது.
தொடரும்...
கஞ்சனின் வாழ்கை
Comments
Post a Comment
நன்றி