சோம்பல்

நம்மை நாம் யாரிடமோ நிரூபிக்க 
நினைக்கிறோம் அதற்காக முயற்சி 
செய்கிறோம், 

அது பணிக்காகவோ! அல்லது வியாபரத்திற்காகவோ! ஏதோ 
தொழிலுக்காகவோ இருக்கலாம்.

நாம் ஏன் நம்மை நிரூபிக்க வேண்டும்?
நம் திறமைகள் இங்கே பணமாக்க 
படுகின்றன, பாராட்ட படுகின்றன, 
பணம், பாராட்டு இவைகள் 
இல்லையென்றால் இந்த 
திறமைகள் என்னவாயிருக்கும் ?

ஏதோ ஒன்று வாழ்வின் தேடுதலாக்க 
பட்டிருக்கும் நிச்சயம், அது உணவாக 
இருக்கும் பட்சத்தில் விளைச்சலை 
பெருக்க அந்த திறமையை பயன்படுத்தியிருப்போம். 

ஆம், இப்போது புரிந்திருக்கும் 
இது எங்கிருந்து ஆரம்பமானது 
என்று, நான்கு பேர் மட்டும் தனி 
தனி தீவுகளில் விட பட்டனர் 
ஒரு தீவுக்கு ஒருவர் வீதம் 

அவர்கள் வாழ்வின் நாட்களை 
அதிக படுத்திக் கொள்ள உயிர் 
வாழ கிடைப்பதை உண்டு இருப்பதை 
அடுத்த நாளுக்கு பயன்படுத்த 
ஆரம்பித்தனர் அங்கு துவங்கியது சோம்பல்...




பேரொளியிலிருந்து நான்
பிரதீஸ்

Post a Comment

1 Comments

நன்றி