Posts

Showing posts from December, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

எண்ணி துணிக

Image
       தோன்றியவற்றை அதாவது எண்ணியவற்றை எண்ணிய இடத்திலேயே பதிய பல நவீன மார்க்கங்கள் இருந்த போதும். பழைய மார்க்கமான மறதி அதனையும் ஒரு பார்வை பார்த்து விடுகிறது  இன்று முதல் நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதை ஆழமாக நம்புங்கள், நம்ப செய்யுங்கள்,  நம்புகிறேன் முதலில் எண்ணத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிறப்பு  பல வகையில் எனது எழுத்துக்களையும், ஆதங்ககளையும் கொட்டித் தீர்க்கும் ஒரு இடமாக இந்த இளையதளம் இருந்த போதும் அதனை வெறும் பொழுது போக்காக இல்லாமல்  ஏதாவது ஒரு வகையில் அனைவருக்கும் பயன்படும் படி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ச்சியாக தடைபட்ட போதும், முயற்சி வீண் போகாது என்ற நம்பிக்கையில் நாளும் நான்கு வரிகளாவது எழுத உத்தேசித்துள்ளோம் 

கடமை

Image
ஒரு கடமையை செய்ய முடியவில்லை என்றால் உண்மையின் எதார்த்தத்தில், ஆன்ம ஒழுக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு தான் கடமை தவரியதாகவே தெரியும். யாரையும் புறக்கணித்து தான் பெரியவன் என்று காட்டிக் கொள்வதில் இயலாமையும், ஒழுக்கமின்மையும் மட்டுமே நிறைந்திருக்கும். தேவைகளை பொறுத்து வார்த்தைகளை பிரயோகிப்பதில்  மனிதன் மிகவும் சிறப்பானவன் தான். அவனது அனுபவத்தைக் கொண்டு அறிவை திசை திருப்பி, மாயை நிரப்பி வாழ்வின் நெறி மாறி தனக்கு தானே நான் யார் தெரியுமா என்று கேட்டு அகத்தில் மகிழ்ந்து கொள்கிறான். தன்னுடைய இயல்பை மறைத்து ஒரு வேடம் தரித்துக் கொள்கிறான். அது அவனை ஒரு வித பிரமை நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை உணர மறுக்கிறான். கடமை என்றான போது அங்கு காரணங்கள் சொல்ல பழகிவிட்டோம் அனைவரும்.  எமது பயணங்களை இந்த மனிதர்கள் பல வகையில் நிறைவு செய்கிறார்கள் யாரையும் கவனிக்க தவறியதில்லை. மனித மனத்தின் வேகம் அவனின் கண்கள் அற்புதமானவை அகத்தை பிரதிபலிக்கின்றன. அவன் யாரையோ ஏமாற்றுவதாக எண்ணி பொய் என்னும் மறைநிரை வார்த்தைகளை அவனுக்குள் நிரப்பிக் கொள்கிறான். அது அவனை கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர மறுக

உறவுகள்

Image
தனி வீடு வேண்டும் என்று கூறும் சமூகம்  அதற்கு தேவையான நிதி உதவி செய்வதில்லை வீடு தேடி வரும் உறவுகளை அன்பு கொண்டு உபசரிக்க அதற்கு கைமாறாக அவர்கள் கொடுத்துச் செல்லும் ஆதரவற்ற ஆலோசனை நச்சு பாம்பை விட கொடிய விசமான ஒன்றாக உள்ளது தடுமாறும் குடும்ப பொருளாதாரத்தின் ஊடே செலவுகளுக்கு வர்ணம் அடித்து செல்கின்றனர் யாருக்காக நாம் வாழ வேண்டும் என்ற கேள்வி காலம் முழுவதும் கழுத்தை சுற்றிக் கொண்டு வருகிறது வீடு தேடி வரும் சொந்தங்கள் நம்மை நலம் விசாரிக்க வந்ததில்லை இங்கறிந்து ஊருக்கு உபதேசிக்க  உங்கள் நிம்மதி தொலைய வேண்டுமா ? உறவுகளை அழைத்து உபசரியுங்கள்,  பதிலுக்கு அவர்கள் கொடுத்துச் செல்வார்கள் !

நாம் நாமாக நம் வாழ்வை வாழ்வது மட்டுமே நாம் நமக்கு செய்யும் நற்செயல்.

Image
  இப்படி தான் கூற வேண்டியிருக்கும், காலம் அதன் போக்கில் நம்மை எப்படி அழைத்துச் செல்கிறதோ! அப்படியே அதன் வேகத்தில் நாமும் பயணப்படுதல் உத்தமம். சில காலம் தவித்து இருந்து இருப்போம் அதன் பொருட்டு முடியும் வரை காலம் அல்ல நாம், நம் பயணம் முடியும் வரை இப்படித்தான் இருக்கும் என்று கூறி விட முடியாது எதார்த்தம் என்னவென்றால் இந்த வாழ்வு நம்மால் தீர்மானிக்கப் பட்டது தான், அதை புரிய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதனை விளங்கிக் கொள்ள சில அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது, அதனை நாம் ஈர்புடையதாக இல்லாத ஒன்றாக எண்ணி அங்கிருந்து, அதிலிருந்து விலகி இருக்கவே முற்படுகிறோம். பொதுவாக அறிந்தவர்கள் எப்படி இவற்றை தெரிந்து கொண்டார்கள் என்ற நோக்கில் அவருடைய இன்றைய நிலையை கருத்தில் கொண்டு மனித மனம் ஒரு பிரமிப்பிர்க்குள் அகபட்டு குறுக்கு வழி தேடி அலைகிறது ஒன்றை மட்டும் அது புரிந்து கொள்ள எந்த காலமும் மறுக்கிறது. முயற்சியும் முறையான பயிற்சியும் இல்லாமல் எந்த ஒன்றையும் அடைய முடியாது என்பது தான் உண்மை. முதலில் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளும் இடத்திலேயே தோர்த்து விடுகிறோம். பக்குவம் என்பார்கள் அனுபவச

விமர்சனங்களும் வீண் பழியும்!

Image
பலதரப்பட்ட முடிவுகள், விமர்சனங்கள் கோவில் உண்டியல் பணமாய் குவிய இவர்கள் யார் ? எவர் ? எங்கிருந்து வந்தனர் யாரறிவார் ? பூஜாரியின் நோக்கம் உண்டியல் பணம் தான்.  விமர்சனம் வீசியவர்கள் யாராக இருப்பினும் உண்டியலில் காணிக்கை செலுத்திய பணம் எப்படி அவர்கள் சம்பாதித்துக் கொண்டு வந்தார்களோ, அது எப்படி அவர்களுக்கு சொந்தமானதோ! அங்கனமே விமர்சனங்களும். அது முழுக்க, முழுக்க அவர்கள் தனிப்பட்ட வாழ்வியல்.  அவர்களுடைய அழிக்க முடியா அடியாள வஞ்சம். அது வெளிகொள்வது நன்று, நல்லவர் கெட்டவர் என்ற பகுப்பு இங்கிருந்து உதயமாகிறது. விமர்சனங்கள் பெரா மனிதன் தவருகிரான் என்பது மெய், விமர்சனங்களுக்குள்ளாகும் போது அவன் அழுத்தத்திற்கு உட்பட்டு வெடித்து சிதறுகின்றான்.  அது அவன் வாழ்வை தூய்மை படுத்துகின்றது, மெய்யியலில் கலக்கச் செய்கிறது, ஒரு நேர்கோட்டில் பயணிக்க செய்கிறது. ஒரு புள்ளியில் அவனை இந்த விமர்சனங்கள் எல்லாம் வாசம் மிகுந்த மலர்களாக அவனை வந்து சேர்கிறது, அவன் உள்ளார்ந்து பல யுக அனுபவங்களில் அவனை நிலை கொண்டு நிலைக்கச் செய்கிறது.  இது வேதியல் மாற்றம் தான் அன்று வேறு ஏதும் மாயாஜாலம் அல்ல. எறியப்படும் கற்க

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *