தனி வீடு வேண்டும் என்று கூறும் சமூகம்
அதற்கு தேவையான நிதி உதவி செய்வதில்லை
வீடு தேடி வரும் உறவுகளை அன்பு கொண்டு
உபசரிக்க அதற்கு கைமாறாக அவர்கள்
கொடுத்துச் செல்லும் ஆதரவற்ற ஆலோசனை
நச்சு பாம்பை விட கொடிய விசமான ஒன்றாக உள்ளது
தடுமாறும் குடும்ப பொருளாதாரத்தின் ஊடே செலவுகளுக்கு வர்ணம் அடித்து செல்கின்றனர்
யாருக்காக நாம் வாழ வேண்டும் என்ற கேள்வி
காலம் முழுவதும் கழுத்தை சுற்றிக் கொண்டு வருகிறது
வீடு தேடி வரும் சொந்தங்கள் நம்மை நலம் விசாரிக்க
வந்ததில்லை இங்கறிந்து ஊருக்கு உபதேசிக்க
உங்கள் நிம்மதி தொலைய வேண்டுமா ?
உறவுகளை அழைத்து உபசரியுங்கள்,
பதிலுக்கு அவர்கள் கொடுத்துச் செல்வார்கள் !
0 Comments
நன்றி