இப்படி தான் கூற வேண்டியிருக்கும், காலம் அதன் போக்கில் நம்மை எப்படி அழைத்துச் செல்கிறதோ! அப்படியே அதன் வேகத்தில் நாமும் பயணப்படுதல் உத்தமம். சில காலம் தவித்து இருந்து இருப்போம் அதன் பொருட்டு முடியும் வரை காலம் அல்ல நாம், நம் பயணம் முடியும் வரை இப்படித்தான் இருக்கும் என்று கூறி விட முடியாது எதார்த்தம் என்னவென்றால் இந்த வாழ்வு நம்மால் தீர்மானிக்கப் பட்டது தான், அதை புரிய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதனை விளங்கிக் கொள்ள சில அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது, அதனை நாம் ஈர்புடையதாக இல்லாத ஒன்றாக எண்ணி அங்கிருந்து, அதிலிருந்து விலகி இருக்கவே முற்படுகிறோம்.
பொதுவாக அறிந்தவர்கள் எப்படி இவற்றை தெரிந்து கொண்டார்கள் என்ற நோக்கில் அவருடைய இன்றைய நிலையை கருத்தில் கொண்டு மனித மனம் ஒரு பிரமிப்பிர்க்குள் அகபட்டு குறுக்கு வழி தேடி அலைகிறது ஒன்றை மட்டும் அது புரிந்து கொள்ள எந்த காலமும் மறுக்கிறது.
முயற்சியும் முறையான பயிற்சியும் இல்லாமல் எந்த ஒன்றையும் அடைய முடியாது என்பது தான் உண்மை. முதலில் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளும் இடத்திலேயே தோர்த்து விடுகிறோம். பக்குவம் என்பார்கள் அனுபவசாலிகள் அது அடிபட்டு, அடிபட்டு தான் வரும் வாழ்வில் அதிகம் பேசாமல் கவனிக்க கற்றுக் கொள்ளும் அறிவு மிகவும் முக்கியம்.
வாய்க்கு வந்ததை பட, பட என கொட்டி தீர்த்து விட்டு வார்த்தைகள் அற்று திக்கி தடுமாறி நிற்கும் நிலையில் தான் நாம் உள்ளோம். எங்கிருந்து அனுபவங்களை கிரகிக்க முடியும் என்று கேட்பதை விட அனுபவம் என்பது அனுபவிப்பது என்ற புரிதல் முக்கியம். அனைவருக்கும் அறிவுரை வழங்கும் எவரும் அவர்களுடைய தனிப்பட்ட செயல்களில் அவற்றையும் அதன் யுக்திகளையும் பயன்படுத்த தவரியிருப்பார்கள். அது ஏனென்றால் அதன் முன் அவர்களுக்கு அதை பற்றிய அனுபவம் இருந்திருக்காது.
ஒவ்வொரு நாளும் கற்றல் என்ற ஒன்றை நினைவில் கொண்டு பலதரபட்ட நிலைகளில் மனதை அலைய, அசைய விடாமல் ஒன்றை பிடித்துக் கொண்டு அதனை பலவழிகளில் சிந்திப்பது தான் முன்னேற்றம். நமக்கு பிடித்த ஒன்று நமக்கு வருமானம் ஈட்டி தருவதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பது முட்டாள் தனம். விருப்பம் இல்லாத பணியாக இருந்த போதும் அதனை விரும்பி செய்யும் எண்ணம் ஒன்றை நாம் தான் நிலை பெற செய்ய வேண்டும். விருப்பம் இல்லாத ஒன்றை எப்படி இந்த மனதை விரும்பச் செய்வது ? என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் !
நமக்கு பிடித்த ஒன்று என்ற ஒரு குறிபிட்ட செயலை நீங்கள் எப்படி தீர்மானித்தீர்கள் ? அது ஏதோ நண்பர்கள் மூலம், அல்லது இன்றைய இணைய வழி அதற்க்கு பல வழிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. என்றாலும் நம்மில் பலர் தேர்தெடுக்கும் ஒரு செயல் என்பது அதில் நமக்கு முன் ஒருவர் பெற்ற வெற்றியின் அடிப்படை தான். ஒருவரின் வெற்றி அவர் துறையில் பலரை ஈர்க்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி எந்த ஒரு சாதாரண மனிதனின் கற்பனையும் ஒரு சாதனையாளனை தன் மனதில் நிறுத்திக் கொள்ளும் அவர் வழி செல்ல ஈர்க்கும் நாம் அது தான் நமக்கு பிடித்த செயல் அல்லது துறை என்று சில நேரங்களில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.
பணத்தின் அடிப்படையில் தான் அனைவரும் நகர்கிறோம் என்ற போது நமக்கு விருப்பமான ஒன்று இன்னொருவர் மூலம் தான் நம்முள் பிரதிபலிக்க செய்கிறது என்பதில் மாற்றம் இல்லை. இதில் நாம் பிடித்த ஒன்று என்று கூற பல இருக்கும் இன்னும் காலங்களில் பலவற்றால் ஈர்க்கப் படுவோம் மனம் அப்படித்தான் அதானால் பொருளாதார ரீதியாக நம்மை எது உயர்த்துகிறதோ அதனை நமக்கு பிடித்த ஒன்றாக மாற்றி கொள்வதில் மனிதனுக்கு எந்த சிரமும் இல்லை எனலாம். ஏனென்றால் நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே நம் மனதை கிடைப்பதற்கு ஏற்றார் போல் மாற்றி, மாற்றி தான் பழக்கப் படுத்திக் கொண்டு வந்துள்ளோம். நினைத்த ஒன்று கிடைக்காத ஒவ்வொரு வேளையும் கிடைத்த ஒன்றின் மேல் நம் விருப்பத்தை மாற்றி கொள்கிறோம்.
இது நமக்கு மிகவும் எளிதானதும் கூட அப்படியே தற்போது எந்த நிறுவனத்தின் கிழ் அல்லது எந்த வேலை செய்கிறோமோ அதனை ரசிக்க துவங்குவது தான் முதல் படி. ரசனை அதிகமாக அதிகமாக அதனை பற்றிய கேள்விகள் அதிகமாகும் அதனை பற்றிய சிந்தனை அதிகமாகும் போது நிறைய கற்றுக் கொள்வோம் நிறைய மாற்றம் செய்வோம், மாறும். படி, படியாக ஒவ்வொன்றாக மாறும் போது நாம் ஒரு விழிப்புநிலை அடைவதாக தோன்றும் அதன் வழியே கிடைக்கும் நிம்மதியும் அளப்பரியது. நம்மால் நல்ல முறையில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும் ஒரு செயலை செய்தாக வேண்டும் அதே சமயம் அதற்கான பொருட் செலவை எப்படி குறைக்கலாம் என்பதனை இந்திய அறிவியலாளர்கள் செய்த சாதனைகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ரசிக்க துவங்குங்கள் செய்யும் வேலையை வாழ்கையை அனைத்தையும் நாம் செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து வெளி வருவது இன்னும் பல செயல்களை செய்யத் தூண்டும்.
நாம் பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை முழுக்க முழுக்க நடிகனாக மட்டுமே மாற்றும் நம்மை நாம் ரசிக்க வேண்டுமென்றால் உலக பிம்பத்தை முதலில் உடைத்தெரிய வேண்டும். நாம் நாமாக நம் வாழ்வை வாழ்வது மட்டுமே நாம் நமக்கு செய்யும் நற்செயல்.
Comments
Post a Comment
நன்றி