விமர்சனங்களும் வீண் பழியும்!
- Get link
- X
- Other Apps
விமர்சனம் வீசியவர்கள் யாராக இருப்பினும் உண்டியலில் காணிக்கை செலுத்திய பணம் எப்படி அவர்கள் சம்பாதித்துக் கொண்டு வந்தார்களோ, அது எப்படி அவர்களுக்கு சொந்தமானதோ! அங்கனமே விமர்சனங்களும். அது முழுக்க, முழுக்க அவர்கள் தனிப்பட்ட வாழ்வியல்.
அவர்களுடைய அழிக்க முடியா அடியாள வஞ்சம். அது வெளிகொள்வது நன்று, நல்லவர் கெட்டவர் என்ற பகுப்பு இங்கிருந்து உதயமாகிறது. விமர்சனங்கள் பெரா மனிதன் தவருகிரான் என்பது மெய், விமர்சனங்களுக்குள்ளாகும் போது அவன் அழுத்தத்திற்கு உட்பட்டு வெடித்து சிதறுகின்றான்.
அது அவன் வாழ்வை தூய்மை படுத்துகின்றது, மெய்யியலில் கலக்கச் செய்கிறது, ஒரு நேர்கோட்டில் பயணிக்க செய்கிறது. ஒரு புள்ளியில் அவனை இந்த விமர்சனங்கள் எல்லாம் வாசம் மிகுந்த மலர்களாக அவனை வந்து சேர்கிறது, அவன் உள்ளார்ந்து பல யுக அனுபவங்களில் அவனை நிலை கொண்டு நிலைக்கச் செய்கிறது.
இது வேதியல் மாற்றம் தான் அன்று வேறு ஏதும் மாயாஜாலம் அல்ல. எறியப்படும் கற்களின் மதிப்பு அதனை வீசுபவர்கள் அறியாததன் விளைவு ஒரு வித ஒழுங்கற்ற மனபோக்கு, அறியாமை, மந்த நிலை, சுயபுத்தி யல்லாதோர். என பலதரப்பட்ட நிலைகளில் தங்கள் விமர்சனங்கள் மூலம் தங்களை நிலை நிறுத்தி, பத்திரப்படுத்தி வைக்க முற்படும் கலியுக கர்மயோகிகள் தான் அவர்களும்.
யான் பேரொளியின் கருணை துகளிலிருந்து
பிரதீஸ்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி