தன்னம்பிக்கை
- Get link
- X
- Other Apps
தன்னம்பிக்கை யாரோ தருவது அல்ல, அது தானாகா உள்ளிருந்து வரும் உத்வேகம். ஒரு சவாலான வேலை அதனை ஒரு சிலரால் தான் இதுவரை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் அந்த ஆபத்தான வேலையை செய்ய முன்வரவில்லை.
ஆனால் கட்டாயம் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய நிலை ஆனால் அங்கிருக்கும் யாருக்கும் அந்த வேலையைப் பற்றி தெரியாது. தெரிந்தவர்களை வைத்து செய்யலாம் என்றால் அவர்கள் வந்து செய்ய தயாராக இல்லை.
அதிக பணம் கேட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர்களுக்கு நான் இல்லாமல் யார் செய்து விடுவார்கள் என்ற எண்ணம்.
ராமுவிற்கு நம்பிக்கை உண்டு யாரோ ஒருவர் நிச்சயம் இந்த வேலையை செய்யத் தான் போகிறார்கள். நாம் செய்தால் என்ன! என்று தோன்றினாலும் வேலை செய்யும் இடம் என்பது மீட்டர் உயரம்.
தப்பி தவறி விழுந்தால் எதுவும் மிஞ்சாது. ஆனால் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு தீர்க்கமாக உண்டு.
அவன் உடன் இருந்தோருக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லை என்பதை தாண்டி பயம் இதை நாம் எப்படி செய்ய முடியும் ?
மொத்தம் இந்த வேலை தெரிந்தவர்களே குறைவு இப்படி ஒரு நிலையில் ஏதேனும் சந்தேகம் வந்தால் கூட அதை யாரிடம் கேட்க முடியும் என்று நம்பிக்கையிழந்தவர்கள் அனைவரும் ராமுவை திட்டினர் அதனை செய்ய முடியாது என்று சொல் என்று அவனை கட்டாயப் படுத்தினர்.
அவன் அங்கு அவர்களுக்கு பதிலளித்தான் நீங்கள் வருவது உங்கள் விருப்பம் நீங்கள் வரவில்லையென்றாலும் நான் இதனை செய்யத் தான் போகிறேன், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை நான் எத்தனை கடினமானா செயலையும் செய்து கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் உடனிருங்கள் இல்லையென்றால் நான் வேறு ஆட்களை வைத்து செய்து கொள்கிறேன் என்றான்.
உடனிருந்தவர்கள் வேறு யாரையோ வைத்து செய்வது நமக்கு இழுக்கு நாம் அவனுடன் சேர்ந்து செய்வோம் அனைத்து ரிஸ்க்கையும் அவன் தானே எடுக்கப் போகிறான் என்று எண்ணி. நாங்களும் உன்னோடு வருகிறோம் என்றார்கள்.
சிறிய, சிறிய வேலைகள் அனைத்துக்கும் அவர்கள் உடனிருந்தார்கள். கடினமானா வேலைகளுக்கு உதவி செய்தார்கள் இருந்து அத்தனை உயரத்தில் வேலை செய்வது சாதாரணம் இல்லை, காற்று பதினைந்து மீட்டர்களுக்கு மேல் வீச சமாளிக்க முடியாது.
மனதின் கடினமானா திடம் வேண்டும், அப்படி இல்லையென்றால் அது சாத்தியமில்லை அந்த உயரத்தில் வெளியில் நிற்கவே தனி மன உறுதி வேண்டும்.
ஒரு வழியாக வேலை துவங்கியவர்களுக்கு இயற்கை ஒத்துழைக்கவில்லை அதிக காற்று, அதிக மழை இவர்களை எதிர் நோக்கி ஒரு நிறுவனமே காத்து நிற்கிறது.
யார் காத்து நின்றால் என்ன காலம் நேரம் எல்லாம் துணையாக இல்லாமல் எப்படி செயல் செய்து முடிக்க முடியும்?
நாம் நினைத்தால் மாத்திரம் போதாது இயற்கை முடிவு செய்ய வேண்டும். அல்லாமல் நாம் எதை சாதிக்க.
பொறுமை காத்திருந்தவர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் சவால்கள் நிறைந்து இருந்தது. ஆனால் இறைவன் அருளால் அவர்கள் காலம் சாதகம் ஆனது நல்ல முறையில் அதனை செய்து முடித்தனர்.
இந்த வெற்றிக்கு முழு காரணம் ராமு தான் அவனது தன்னம்பிக்கை தான். அவனால் மட்டும் முடியும் என்று அவன் நினைக்கவில்லை ஆனால் செய்து முடிக்கவேண்டும் என்ற உத்வேகம் அவனை செய்ய வைத்தது. அவனுக்கு பக்க பலமாகா நால்வரை அனுப்பி வைத்தது.
தன்னம்பிக்கை என்பது யாரோ விதைப்பது அல்ல அது தானாக உள்ளிருந்து வருவது.
உங்கள் நேர்மறை எண்ணம் உங்களை அனைத்து செயல்களிலும் வெற்றிப் பெற செய்யும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி